ஸ்டெர்லைட் ஆலை செய்த பல்வேறு விதிமுறைகள் காரணமாக தமிழக அரசு மூடி சீல் வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இச் சூழலில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கெபிஸ்டன் வீடு தேடி சென்று இரவில் அவர் மீதான தாக்குதலும் இதற்கு சான்றாகும்.
மேலும் மக்களை பிளவு படுத்தும் நோக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும்-தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளரும் இதில் நேரடியாக தலையீட்டு சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்
இவ்வாறு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் இன்று 08 - 11 - 2021 வழங்கிய மனுவில்
தெரிவித்து இருந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக