செவ்வாய், 9 நவம்பர், 2021

திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசமஹாரம் மற்றும் நாளை (10.11.2021) நடைபெறவுள்ள திருக்கல்யாணம் ஆகியவற்றிற்கு பக்தர்கள் வர அனுமதி மறுப்பு!! சஷ்டி விரதம் இருப்பவர்கள் கோவில் வளாகத்தில் தங்குவதற்கும், விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கும் தடை!!! திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட காவல் துறை ரோந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டது.!!!!



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஜெயக்குமார் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  



இன்று (09.11.2021) நடைபெற உள்ள திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசமஹாரம் மற்றும் நாளை (10.11.2021) நடைபெறவுள்ள திருக்கல்யாணம் ஆகியவற்றிற்கு பக்தர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 



அதே போன்று சஷ்டி விரதம் இருப்பவர்கள் கோவில் வளாகத்தில் தங்குவதற்கும், விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்செந்தூர் கோவில் வளாகம், திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.


இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் இன்று திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.



இந்த ஆய்வின் போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப, விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் . பிரகாஷ், மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  பாலாஜி, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்  கார்த்திகேயன் மற்றும்; போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர்  வேல்முருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக