வெள்ளி, 12 நவம்பர், 2021

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்திற்கு வள்ளலார் சமூக சேவை விருது !!!


தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் அனைத்து விதமான சேவைகளை பாராட்டி மற்றும் ஊக்குவிக்கும் விதமாக அச்சங்கத்திற்கு "வள்ளலார் சமூக சேவை விருது" வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் வழங்கி 


பாராட்டியது.


பாண்டிச்சேரி கடலூர் செல்லும் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சுப மங்களா மஹாலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை தொடர்ந்து உருவாக்கி தந்து கொண்டிருக்கும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தின் சார்பாக ...

சமூக சேவைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை  சேவைகளை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களை தேர்ந்தெடுத்து  விருது வழங்கும் விழா நடைபெற்றது.


இதில்  அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின்  திருக்கோயில்கள் சார்ந்த பணிகள் மற்றும் மக்கள் சார்ந்த அனைத்து சேவை பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றதையும் மற்றும்  உதாரணமாக கொரோனா  ஊரடங்கு காலகட்டத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை தத்தெடுத்து வாரம் இரண்டு முறை அரிசி உட்பட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கியது , தொடர்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்குதல் , ஏழை குடும்பங்களுக்கு தேவைகளை அறிந்து  அத்தேவையினை நிவர்த்தி செய்வது ,மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்தல் போன்ற பல எண்ணற்ற சமூக சேவைகளை செய்து வருவதால் அச்சங்கத்தின் சேவைகளை பாராட்டி வள்ளலார் சமூக சேவை விருது வழங்கப்பட்டது



இந்த விருதினை சமரச சுத்த சன்மார்க்க சத்ய  சங்கம் வள்ளலார் மிஷின் G.சாது.ஜானகி ராமன்  அனைத்திந்திய திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி அவர்களிடம் வழங்கினார். 


விருதை பெற்ற அருள்வேலன் ஜி இந்த விருதினை சங்கத்தின் அனைத்து  பொறுப்பாளர்களுக்கும் மற்றும் சங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு தருகின்ற அனைத்து  நல்ல உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.

இந்த விழா ஏற்பாட்டினை மிக சிறப்பாக வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தின் நிறுவனர் I.B.வீரராகவ ன்  மற்றும் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக