தூத்துக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூத்துக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 மார்ச், 2025

தூத்துக்குடி மாநகராட்சி – சக்தி விநாயகர் தெருவில் புதிய பைப் லைன் குழாய் பதிப்பு குழப்பம் பொதுமக்கள் ஆவேசம்

 

தூத்துக்குடி மாநகராட்சி – சக்தி விநாயகர் தெருவில் புதிய பைப் லைன் குழாய் பதிப்பு குழப்பம்
பொதுமக்கள் ஆவேசம்

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த நான்காவது பைப் லைன் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், 11வது வார்டு, சக்தி விநாயகர் முடுக்கு சந்து பகுதியில் பல வீடுகளுக்கு புதிய பைப் லைன் பதிக்காமல் விட்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது. 


பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் 

ஏற்கனவே அந்த பகுதியில் பதிக்கப்பட்ட குழாய்கள் முறையாக இணைக்கப்படாமல் இருப்பதால் குடிநீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்படும்

தற்போது சக்தி விநாயகர் முடுக்கு சந்தில்  பல வீடுகளுக்கு புதிய லைன் குழாய் போடாமல் விட்டு உள்ளார்கள்



வளைந்து நெளிந்து தாறுமாறாக குழி தோண்டி பைப் லைன் பதிப்பு 


அப் பகுதி பணிகள் எல்லாம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் பிரச்சினையை அதிகரிக்கின்றன  குற்றம்சாட்டுகின்றனர்.

"சொத்து வரி, குடிநீர் வரி நாங்கள் ஒழுங்காக செலுத்துகிறோம். ஆனால், எங்களுக்கான புதிய பைப் லைன் பதிக்காமல் விட்டுவிட்டனர். 

அதில் தண்ணீர் சப்ளை ஆகும் நிலையில்...குடிநீர் இணைப்பு துண்டிப்பு நிலை ஏற்படும். இதனால் மிகுந்த அவதிக்குள்ளாக நேரிடும்," என பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மாநகராட்சி பணியில் ஈடுபட்டவர்களிடம் விளக்கம்,கேட்ட போது "உங்கள் வீடுகளுக்கு குழாய் பதிக்க முடியாது. நீங்கள் அமைச்சர் கீதா ஜீவன் அல்லது மேயர் இடம் போய்ச் சொல்லுங்கள்" என ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.





இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பத்து வீடுகளின் மக்கள், அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்க தயாராகி வருகின்றனர்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் அமைப்பில்லாமல் நின்று பயணிகளை ஏற்றும் அவலம்

Tamil Nadu updates,23-12-2024

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் அமைப்பில்லாமல் நின்று பயணிகளை ஏற்றும் அவலம்


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில்
தாறுமாறாக நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் அவலம்!!!


இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி: புதிய பேருந்து நிலையத்தில், சென்னை, திருச்சி, திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கான பேருந்துகள் நடைமேடை கவுண்டரை கடந்து, சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவது போல தாறுமாறாக பேருந்துகளை நிறுத்தி வைத்து  தினமும் பயணிகளை ஏற்றி செல்லும் முறைகேடு நடைபெற்று வருவதாக பொதுமக்களும் வியாபாரிகளும் குற்றச்சாட்டுகின்றனர்.

கடை முன் காலியாக கிடக்கும் நடைமேடை கவுண்டர்கள்?




இந்த நிலை காரணமாக பயணிகள் திண்டாட்டம் அனுபவிக்கின்றனர். “பேருந்துகள் நடைமேடை கவுண்டரில் நின்று பயணிகளை ஏற்ற,  வேண்டும்” என்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கமும் பொதுமக்களும் வலியுறுத்தினர். இதைச் சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதி மீறல்கள்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையம் உள்ளேயும் பேருந்துகள் நடைமேடை கவுண்டர்களில் தான் நிற்கும்

ஆனால்? தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மட்டும் வீதிமீறல் நடைபெறுகிறது


மேலும் மதுரையில் இருந்து வரும் பேருந்துகள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்  அருகே பாலத்தின் அடியில் பஸ் பயணிகள் இறக்கி விட்டு அப்படியே பஸ் பாலத்தில் ஏறி சென்று விடுகின்றனர்

விபத்து 

மூன்றாம் கேட் பாலம் அடியில் பஸ் பயணிகளை இறக்கி விடுவதால் பயணிகள் பாலத்தை கடந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே அடுத்த பேருந்து செல்ல வேண்டியுள்ளது அப்படி  செல்கையில் விபத்து ஏற்படும் நிலையில் ஏற்படுகிறது

இதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் 

போராட்டம் 


ஏற்கனவே தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வியாபாரம் இன்றி மாநகராட்சிக்கு கடை வரி கட்ட முடியாமல் தவித்துக் வருகிறோம்.

இந்நிலையில் வியாபாரிகள் கஷ்டப்படும் வேண்டும் என நோக்கில் இப்படி நடந்து கொள்வது வேதனை தருகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை இல்லை எனில் வியாபாரிகள் சங்கம் போராட்டத்தில் இறங்கும் என தெரிவித்தனர்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

இலங்கை படையினரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி கலெக்டர் இடம் மனு அளித்தனர்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

12-8-2024

இலங்கை படையினர் கைது செய்த தருவை 22 மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி கலெக்டர் இடம் நாம் தமிழர் கட்சி யினர் மனு அளித்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.



எனவே இதனை கண்டித்து இன்று 12/8/25 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   மனு  அளித்தனர்.. 


நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்

வே.வேல்ராஜ், தலைமையில்... மாவட்ட தலைவர் செயசீலன், பொருளாளர் செந்தில்குமார்,

தூத்துக்குடி தொகுதி செயலாளர் வே. மாரி சிவா,தொகுதி தலைவர்

பாக்கியராஜ், தொகுதி செயலாளர் தாமஸ், ஓட்டப்பிடாரம்

தொகுதி தலைவர்

வைகுண்டமாரி உட்பட தூத்துக்குடி மத்திய மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 30 மே, 2024

SKC கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற டீமுக்கு கோப்பை பரிசு பொருட்கள் வழங்கல்

 


தூத்துக்குடியில் SKC  கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற டீமுக்கு கோப்பை பரிசு பொருட்கள் வழங்கினார்கள்.


இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாவட்ட அளவில்  SKC சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது 

கிரிக்கெட்  விளையாட்டு போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது .



இறுதி போட்டியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் இரா. அந்தோணி தனுஷ் பாலன் மற்றும் தூத்துக்குடி மாநகர 14 வது வார்டு திமுக வட்ட செயலாளர் காளி துரை ஆகியோர் பரிசு பொருட்கள்,கோப்பைகள்,விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்கள். 


இந்நிகழ்ச்சியில்... விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அருள் செல்வம் மற்றும் குழுவினர்கள் இருந்தனர்.

திங்கள், 15 மே, 2023

போதைப் பொருள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் வாட்ஸ்அப் எண் 98409 23723 - க்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும் தூத்துக்குடி மாவட்ட S.P பாலாஜி சரவணன் வேண்டுகோள்

 தூத்துக்குடி மாவட்டம் : 16.05.2023


தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க தூத்துக்குடி போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை - போதைப் பொருள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் துணை கண்காணிப்பாளரது அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் 98409 23723 என்ற எண்ணிற்கு தெரிவிக்குமாறு பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  கேட்டுக்கொண்டுள்ளார்.




தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  சிவசுப்பு  மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், பாண்டிச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் மதுபானங்களை கடத்தி வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்பவர்கள், சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்கள், Rectified spirit and spurious spirit  போன்ற கலப்பட மதுபானங்கள் தயார் செய்து விற்பனை செய்பவர்கள், கஞ்சா  மற்றும் கொடிய போதை மருந்து, மாத்திரைகள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  சிவசுப்பு  அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் 98409 23723 என்ற எண்ணிற்கு தயங்காமல் தகவல் தெரிவிக்குமாறும், தகவல் தருபவர்கள் பற்றிய விபரம் இரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

டீ வழங்குவதில் ஊழல் !!! தூத்துக்குடி பணிமனையில் புறநகர் மற்றும் நகர பேருந்து தொழிலாளர்கள் வேதனை அதிகாரிகள் கவனிப்பார் களா??

 thoothukudileaks 19-4-2023

தூத்துக்குடி பணிமனையில் புறநகர் பேருந்து ஊழியர்கள் 100 பேர் இருக்கிறார்கள் 

100 பேரு நகர பேருந்து தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.


இவர்களுக்காக வழங்க வேண்டிய காலை டீ  வழங்கவேண்டும் .



இந்த படத்தில் உள்ள கேனை பாருங்கள் 50 லிருந்து அல்லது 70 டீ தான் பிடிக்கும்.

இந்த கேனில் இந்த டீ கேண்டீன் காரர் நிர்வாகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

முந்திய வர்களுக்கு மட்டுமே டீ கிடைக்கும் பலருக்கு டீ இருக்காது.

பேருந்துதொழிலாளர்கள்

நிர்வாகத்திடம் அதிகாரியிடம் சொல்லியும் இதுவரை  நடவடிக்கை இல்லை 

டீ  வழங்குவதில் இப்படி யும் ஊழல் பண்ணாலாமா இதை யாரிடம் முறையிடுவது அதிகாலையில் பணிக்கு வரும் தொழிலாளர் கள் வெறுத்து போய் வேதனை யில் உள்ளார்கள் .

இனியாவது இப்பிரச்சினை மை கவனிப்பார் களா பார்ப்போம் 


வியாழன், 2 மார்ச், 2023

தூத்துக்குடி பெரியநாயகிபுரம் ஸ்ரீபெரியநாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

 thoothukudileaks 3-3-2023

news Photo by shanmuga Sundaram 

தூத்துக்குடி பெரியநாயகிபுரம் ஸ்ரீபெரியநாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட பெரியநாயகிபுரம் கிராமத்தில் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது. 



கடந்த மார்ச் 1-ம்  தேதியன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக பணி துவங்கியது.  கோவில் முழுவதும் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தோரணங்கள் கட்டப்பட்டன. 

மணி பட்டர் மற்றும் சண்முகம் பட்டர் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீபெரியநாச்சி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் மற்றும் ஹோம குண்டம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் ஒதப்பட்டது. மேலும் அம்மன் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.

கும்பாபிஷேக நிறைவு விழாவான மார்ச் 3ம் தேதியன்று நான்காம் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பிம்பசுத்தி, மூர்த்தி ரக்ஷாபந்தனம், தீபாராதனை, மற்றும் ஸ்ரீபெரியநாச்சி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு விமான கோபுர கலசத்தில் சிறப்பு அபிஷேகங்கள்   

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

கும்பாபிஷேக விழாவில்; பெரியநாயகிபுரம் ஊர் பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்பட சுற்றுப்பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றுச் சென்றனர்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

தூத்துக்குடியில் 250 வது வாரம் சிறப்பு விருந்தினர் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டி வைத்து பாராட்டு

 thoothukudileaks 19-2-2023

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் வாரந்தோறும் தொடர்ந்து 250 வது  தடவையாக வழக்கறிஞர் மோகன் தாஸ் மற்றும் அவரது நண்பர்கள் குழு ALL CAN TRUST சார்பில் மரக்கன்று களை சாலையோரங்களில் நட்டு வைத்து வளர்த்து வருகிறார்கள்.



இன்று 250வது சிறப்பு வாரம் முன்னிட்டு 

ALL CAN TRUST சார்பில் 250வது வார மரம் நடும் நிகழ்ச்சியாக (19.2.2023 ) இன்று நடைபெற்றது.



 தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி மெயின் ரோட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


தூத்துக்குடி மாநகராட்சி மேயர்  ஜெகன் பெரியசாமி  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டினார்..



பின்பு வழக்கறிஞர் மோகன் தாஸ் மற்றும் அவரது நண்பர்கள் குழுவை மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டினார்.



இவர்களின் அரிய தொண்டுகளால் தூத்துக்குடி நகரில் சாலையோரங்களில் நிழல்கள் தரும் மரங்கள் அதிகமாக தோன்றியுள்ளது . 




பசுமையான மரங்கள் வளர்ச்சி யால்  சுற்றுசூழல் சுத்தமான காற்று கிடைப்பதும்...

வழியில் தூத்துக்குடி பொதுமக்கள் மரங்கள் நிழலில் இளைப்பாறுதல் காட்சியும் காண முடிகிறது 



#ALL_CAN_TRUST_THOOTHUKUDI

#MOHANDASS_SAMUEL

#allcan_feed_the_needy

#all_can_trust_தூத்துக்குடி

#ALL_CAN_TRUST

சனி, 18 பிப்ரவரி, 2023

விதி எண் 3' திரைப்படம் விமர்சனம்

 thoothukudileaks 19-2-2023

Arunan journalist 

விதி எண் 3

திரைப்பட விமர்சனம் 

நமது பார்வையில்...


விதி எண் 3 என்று

தலைப்பு எதற்கு வைத்தார்கள் என தியேட்டரில் படம் பார்த்து..? முழுசாய் வெளியில் வந்த ரசிகர்களுக்கு புரியவில்லை.  இது இயக்குநர் ரகசியம்



படத்தில் கிட்டதட்ட தூத்துக்குடி நகர சுற்றுவட்டார வாசிகளே நடித்துள்ளார்கள். திரைப்படத்தில் நீதிபதி மற்றும் வக்கில் வேடங்களில் நடித்தவர்கள் அனைவரும்  தூத்துக்குடியில் பணிபுரியும் நிஜ வழக்கறிஞர்கள். ஏனோ சினிமா ஆசை அவர்களையும் விட்டு வைக்காமல் பாடாய் படுத்தியிருக்கிறது.

உள்ளூரில் உள்ளவர்கள் இவர்கள் நடிப்பை பார்த்து செம கமெண்ட்  பின்னியெடுக்கிறார்கள்.

என்னத்த சொல்ல!!!!

 


இளம் பெண்கள் விழிப்புணர்வு படம் பார்க்க வேண்டிய படம் என   அதில் நடித்துள்ளவர்கள் பலர் ஏற்றி விட்ட பில்டப் 

தொல்லை தாங்காமல் தியேட்டருக்கு சென்று பார்த்தால் திரையில்  மது குடியர்கள் உடன்  பெண் கீழே படுத்து எழுந்து மசாலா அயிட்டம் ஸாங். அதுவும்  கொச்சையான ஆடியோ முலம் வெளியில் வந்த டிக்டாக்  திருச்சி சூர்யா படத்தில் மதுகோப்பையுடன் டான்ஸ்.

 இது தான் படத்தின் ஸ்பெஷல்

அடுத்து படத்தில் போலீஸ் துறை பற்றி நன்கு அலசி உள்குத்து அப்ளிகேஷன்ஸ் கூட கூறியுள்ளார் கள்‌.

 உதாரணம் நடிகர் ஜெயம் எஸ்பி யாக அல்டிமேட் நடிப்பு வில்லன் கைது செய்யப்படும் போது எஸ்பி க்கு போன் பண்ணி இரவில் கைது பண்ண சொல்லி சலுகை கேட்டு... அதற்கு கிராண்ட்டடு என ஒப்புதல் வழங்கும் எஸ்பி தோரணை பெஸ்ட் ஆக உள்ளது.

இன்ஸ்பெக்டர் ஆக பாபா சங்கர்   அவர் வக்கீல்  உடன் எடுக்கும் நடவடிக்கை கடைசி யில் வழியில் செல்லும் வக்கீல் சாதரணமாக ஜீப்பில் ஏறுங்கள் ஏற்றி அவரை தப்பிக்க விடாமல் லாட்ஜ் ல பூட்டி ரூம் பாய் கஸ்டடியில் வைத்து வக்கில் -ஜ நீதிமன்றம் செல்லாமல் தடுப்பது இன்ஸ்பெக்டர் பாபா சங்கர் நடிப்பு சூப் பர் 



படத்தின் கதை என்னவெனில் ...

அட கதையா? நீங்க வேற சமீபத்தில் வெளிவந்த சாதி விமர்சனங்களை சந்தித்த திரவுபதி படத்தின் கதையும் நடிகை நயன்தாரா நடித்த  நெற்றிக்கண் படத்தின் கதையும் தான். இதில் கொடுமை  இந்த நெற்றிக்கண் கதையே சைனா படத்தில் இருந்து சுட்டதுதான் ?



 மேற்கண்ட இரண்டு படங்களை தயாரிப்பாளர் பார்த்து இருந்தால்? திரைப்படம் வெளிவந்திருக்குமா டவுட் தான்.  

 

இதில் தான் இயக்குநர் திறமை பளிச் சென்று தெரிகிறது.

 பல இடங்களில் திரைக்காட்சிகள் நடிகர் நடிகைகள் பேசுவது கூட அட்வேஸ் டயலாக் ஆக இருக்கிறதால் ரசிகர்கள் கதையோட்டத்தை புரியாமல் தவிப்பு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 

இசை  சண்டை காட்சிகள் மற்றும்

 நீதிமன்ற காட்சிகள் நன்றாக வர பிரத்தேகபட்டுள்ளார்கள்.  

ஆனால் முடியல ?

 கடைசி வரை வில்லன் வயலின் வாசித்து கொண்டே வருகிறார் வயலின் வாசித்தே வெறுப்பேற்றுகிறார் மாணவி வரும் காட்சிகளில் வில்லன் காலில் சலங்கை கட்டுவதும் உதட்டில் லிப்ஸ்டிக் என வில்லன் திருநங்கையா ? .

அப்படி யாரால் மாணவி பாலியல் போக்சோ வில் வருமா?!

இதற்கு பின் வக்கீல் வாதம் எடுபடுமா!!!! 

 என்ன ரகம் என்றே இயக்குநர் க்கு காட்சி  அமைப்பு திணறுதல் தெரிகின்றது.

சினிமா பார்முலாவில்

 பொதுவாக காண்பிக்கப்படும்

  நீதிமன்ற காட்சிகளில்..

 குற்றவாளி கூண்டு இல்லை

மிஸ்ஸிங் மகாத்மா காந்தி போட்டோ நீதி தேவதை இது எதுவுமில்லை 

 மேடை அமைப்பு போல் வெறுமை தோற்றம்.



தூத்துக்குடி ஊர் என்பது நடிப்பு மாமேதை சந்திரபாபு தந்த இடத்தில் இருந்து திரைத்துறைக்கு கிளம் புவர்கள் 

 வாட்ஸ் அப்-ல வரும் காப்பி பேஸ்ட் போல் பண்ைாமல்  தங்கள் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்தல் அவசியம் அடுத்த படத்திலாவது எதிர்பார்க்கலாமா? என்ற கேள்வி நம்முள் எழுகிறது.

 செய்வார்களா? பார்ப்போம். வாழ்த்துக்கள்.



 


 

விரைவில் தேர்தலா? தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி பரபரப்பு

 thoothukudileaks 19-2-2023

photo news by arunan 

கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ல்தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக சுதாகர்  

துனை தலைவராக துறையூர் கணேசன மற்றும் 18. இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



இவர்கள் பதவியேற்பு விழாவில் முன்பு முன்னாள் அமைச்சர்கள்  கடம்பூர் ராஜீ  சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ....?

 தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தனது தலைவர் பதவியில் தீடீர் ராஜினிமா செய்து விட்டார்.

துனை தலைவர் ஆகவுள்ள துறையூர் கணேசன் அதில் தலைவராக வரும் சூழ்நிலை உருவானது.


இவர் ஒ பி.எஸ் அணியில் ஆதரவாளர் ஆக இருந்து இருப்பதால் அந்த பதவிக்கு துறையூர் கணேசன் வரா கூடாது என்பதற்காக அதிமுகவை சேர்ந்த மத்திய கூட்டுறவு வங்கி  இயக்குநர்கள் ஒட்டு மொத்தமாக அதிரடியாக ராஜினி மா செய்தனர்.

இதனால் பரபரப்பு காணப்பட்டது.

தற்போது தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தேர்தல் அரசு விரைவில் நடத்தவிருக்கிறது.




ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 சங்கு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழா .

 thoothukudileaks 19-2-2023

photo news by shanmuga Sundaram 

ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 சங்கு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழா நடைபெற்றது.

இதுபற்றிய செய்தியாவது 


தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 வெண்சங்கு சிறப்பு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழாவானது பக்தர்கள் திரளாக பங்கேற்க தமிழ்மறையில் நான்குகால யாக பூஜைகளுடன் விடிய விடிய வெகு விமரிசையாக நடைபெற்றது.



தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில், சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வராக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். 


ஆன்மிக சிறப்புபெற்ற குருமகாலிங்கேஸ்வரருக்கு சனிப்பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி விழா ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.


காலை 10மணிக்கு கணபதி, -நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மஹாலெட்சுமி ஹோமத்துடன் மஹா சிவராத்திரி விழா இனிதே தொடங்கியது. தொடர்ந்து, மாலை 6மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மஹாபூஜை-தீபாரதனை நடைபெற்றது. 


அதனைத்தொடர்ந்து, இரவு 9மணிக்கு முதல்கால யாக பூஜைகளுடன் மஹா சிவராத்திரி வழிபாடு பூஜைகள் சிவபெருமானுக்கு 1008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தமிழ்மறையில் தேவரா திருவாசக பராராயணத்துடனும், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனைகளுடனும் இனிதாக நடைபெற்றது.


வழிபாட்டின் இடையே இரவு 10மணிக்கு ‘மனித வாழ்க்கையில் மனநிறைவு தருவது இறை அருளா.? அல்லது இறைவன் தந்த பொருளா.? என்ற தலைப்பில் பேராசிரியர் செபாஸ்டின் தலைமையில் நகைச்சுவை வழக்காடு மன்றம் நடைபெற்றது.


தொடர்ந்து இரவு 12மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையானது மஹா அபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணத்துடனும், அதன்பின்பு அதிகாலை 2மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையானது சதுர்வேத பாராயணத்துடனும் நடைபெற்றது.


அதனைத்தொடர்ந்து, அதிகாலை 4மணிக்கு நான்காம் கால யாக பூஜையானது சிறப்பு அபிஷேம், அலங்கார தீபாரதனைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலுடன் மஹா சிவராத்திரி விழா இனிதே நிறைவடைந்தது.


விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்குழுவினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தூத்துக்குடி சிவன்கோவிலில் சிவராத்திரி 216 சிவலிங்க பூஜை

 thoothukudileaks 19-2-2023

Photo news by shanmuga Sundaram 

தூத்துக்குடி சிவன்கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 216 சிவலிங்க பூஜை நடைபெற்றது.

      தூத்துக்குடி மையப்பகுதியில் புகழ் பெற்ற பழமையான சங்கரராமேஸ்வரர் உடனுறை சிவன்கோவில் அமைந்துள்ளது. 



சனிப்பிரதோஷம் சிவராத்திரி இரு நிகழ்வுகள் ஓரே நாளில் வந்ததையொட்டி சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு அதனைத் தொடர்ந்து (18-2-2023 )சிவராத்திரி  216 சிவலிங்க பூஜை நடைபெற்றது. 



இதனைத்தொடர்ந்து சிவராத்திரியை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமமக்கள், பக்தர்கள் வந்து செல்லும் வகையில் நான்கு கால சிறப்பு பூஜைகள் அபிஷேகத்துடன் ஒம் நமசிவாய பக்தர்கள் எழுதினார்கள் .

கோவில் கலையரங்குகளில் நாதஸ்வரம் பரதநாட்டியம் மாறுவேட போட்டி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

      கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர் தலைமையில் நிர்வாக செயல் அலுவலர் தமிழ்செல்வி, அரசு துறை அதிகாரி இசக்கியப்பன், பிரதோஷ கமிட்டி தலைவர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், கந்தசாமி, ராதாகிருஷ்ணன், கோவில் நிர்வாகத்;தை சார்ந்த நெல்லையப்பன், கல்யாணி, செல்வ மாரியப்பன், கணக்கர் சுப்பையா, உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

கட்டி முடித்தும் பல மாதங்கள் ஆகியும் திறக்க படாமல் தூத்துக்குடி மாநகராட்சி சில்வர் புரம் ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்கள் அவதி

 தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதியான சில்வர் புரத்தில் ஆரம்ப சுகாதர நிலையம் புதுப்பித்து பல மாதங்களுக்கு   மேல் ஆகி இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது.


ஏன் ?! இன்னும் திறக்க படாமல் பூட்டு தொங்கிறது. மாவட்ட நிர்வாகம் இனியாவது கவனிக்குமா ????

 அதனை சுற்றி உள்ள பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாற்று இடம் சென்று தங்கள் அத்தியாவசிய தேவைக்கு அலைந்து சிகிச்சை பெறுவதற்கு அதிக நேரம் செலவிட்டு மிகவும் சிரமப்படுகிறார்கள் .


ஆகையினால் அதனை திறப்பதற்கு  தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக  அப்பகுதி சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிரதோஷம் சிவராத்திரி வழிபாடு சிறப்பு ஏற்பாடு

 thoothukudileaks 15-2-2023

news photo by:-shanmuga Sundaram 

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு  பக்தர்களுக்கு சிறப்பு வழிபாடு ஏற்பாடு . செய்யப்பட்டுள்ளது .

இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில்் சங்கர ராமேஸ்வரர்; பாகம்பிரியாள் உடனுறை சிவன் கோவில் அமைந்துள்ளது. 

தூத்துக்குடி சிவன் கோயில் வருகிற 2023  சனிக்கிழமை 18-ம் தேதி சனி பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இரு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. 



சனிபிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஒரே நாளில் வருவதையொட்டி பக்தர்களின் நலன்கருதி அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து, சிவன் கோவில் உள் அரங்கத்தில் கலந்தாய்வு கூட்டம் ( 14-2-2023)நடைப்பெற்றதுு.

 கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் கல்யாணசுந்தரம் (எ) செல்வம் பட்டர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் ..


சனிபிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஆகிய இரு நிகழ்வுகள் ஒரே நாளில் வருவது மிகவும் சிறப்பானதாகும். இதனையொட்டி வழக்கம் போல் நடைபெறும் பிரதோஷ வழிபாடு மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, 5 மணிக்குள் நிறைவு பெறும். அதன் பின் சிவராத்திரி நிகழ்வையொட்டி கோவிலுக்கு ஓம் நமச்சிவாய எழுத வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கட்டமைப்பு பணிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படும். அன்று இரவு 10, 12, 2, 5 என நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் எளிதில் வந்து தரிசனம் செய்து கொள்வதற்கான உள்கட்டமைப்புகளையும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. உள்ளே வந்து, வெளியே செல்வதற்கான போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்து காவல்துறை மூலம் சீர்செய்யப்படும். 

இரவு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கடந்த காலத்தில் நடைபெற்றதை விட இந்தாண்டு சிறப்பான முறையில் இரு நிகழ்வுகளையும் பக்தர்கள் வசதிக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து தரப்பினரும் சனி பிரதோஷம், சிவராத்திரியை முன்னிட்டு அச்சமின்றி வந்து செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்கள். 

இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் கோட்டுராஜா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேசன், பிரதோஷ கமிட்டி தலைவர் ஆறுமுகம், மத்திய பாகம் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், கந்தசாமி, கோவில் நிர்வாகத்தைச் சார்ந்த நெல்லையப்பன், கல்யாணி, செல்வ மாரியப்பன், கணக்கர் சுப்பையா மற்றும் ஆன்மிக அன்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

தூத்துக்குடி மாநகராட்சி கழிவு நீர் பக்கிள் ஒடையில் குதித்து உயிருக்கு போராடிய முதியவரை காப்பாற்றிய பள்ளி ஆசிரியர் சமூக ஆர்வலர்கள் பாராட்டு

 தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் பக்கிள் ஓடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12 - 2 - 2023) பகல் 12 மணியளவில் ஆதரவற்ற முதியவர் ஒருவர் உள்ளே விழுந்துவிட்டார். 


வெளியே எழந்து வர முடியாமல் பல மணி நேரம் தவித்து கொண்டிருந்தார்.

 பொதுமக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்.



அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த தூத்துக்கு டி சில்வர் புரம் டி என் டி டி ஏ பள்ளியில் பணிபுரியும்  ஆசிரியர் நிர்மல் கோயில் ராஜ் சற்று யோசிக்காமல் அந்த பக்கிள் ஒனட சாக்கடையில் விழந்த முதியவரை கழிவு நீர் சாக்கடையில் இறங்கி  அவரை காப்பாற்றி வெளி இழத்து கொண்டு வந்தார்.

வீடியோ பார்க்க

 தூத்துக்குடி சில்வர்புரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நிர்மல் கோயில்ராஜ் சற்றும் தாமதிக்காமல் உள்ளே இறங்கி அந்த முதியவரை மேலே கொண்டு வந்ததும் பின்னர் 108 ஆம்புலன்சில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியர் நிர்மல் கோயில்ராஜை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள்.

திங்கள், 30 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 500 கி.மீ தூரம் புறா பந்தயம்

  thoothukudileaks 31-1-2023

photo news by shanmuga Sundaram 

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 500 கி.மீ தூரம் புறா பந்தயம் நடைபெற்றது. 

முதல் பரிசு பெற்ற புறா


இது பற்றிய செய்தியாவது:-

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு  500 கி.மீ புறா பந்தயம்  நடைபெற்றது.

தூத்துக்குடி ரேசிங் பீஜியன் ஓபன் ரேஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் இணைந்து நடத்திய புறா பந்தயம் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் துவங்கியது. 



இதில் பந்தய புறாக்கள் சுமார் 500 கி.மீ தூரம் ஓய்வின்றி பறந்து வந்து பந்தய இலக்கை அடைந்தன. 

  இப்போட்டியில் ஏ.ஆர்.ராஜேஷ் என்பவரின் புறா 5 மணி நேரம்  30 நிமிடத்தில் பறந்து வந்து முதல் பரிசை பெற்றது. 


பொன்ராஜ் என்பவரது புறா 5 மணி 35 நிமிடத்தில் பறந்து வந்து இரண்டாம் பரிசை பெற்றது. 


ராஜேஷ் என்பவரது புறா 5 மணி நேரம் 37 நிமிடத்தில் பறந்து வந்து 3வது பரிசை பெற்றது. 

போட்டியில்; ஒருங்கிணைப்பாளர் டைகர் வினோத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ரைமன் சாவியோ முன்னிலை வகித்தார். 


சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் துரை கலந்து கொண்டு ஊக்கப்பரிசு வழங்கினார்.

ஆல் ஸ்கேன் டிரஸ்ட் சார்பாக தூத்துக்குடியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஆல் ஸ்கேன் டிரஸ்ட் சார்பாக நேற்று 29-1-2023 நடைபெற்றது.




இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ALL CAN TRUST சார்பில் 247 வது வார மரம் நடும் நிகழ்ச்சியாக 29.1.23 தூத்துக்குடி முனியசாமி புரம் அம்பேத்கார் காலனி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மூதாட்டி மரக்கன்று நடும் போது எடுத்த போட்டோ 

சிறு குழந்தை  உடன் மரக்கன்று நடும் பெண் மணி




இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மோகன் சாமுவேல் தலைமையில் ஆல் ஸ்கேன் டிரஸ்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

#ALL_CAN_TRUST_THOOTHUKUDI

#MOHANDASS_SAMUEL

#all_can_trust_தூத்துக்குடி

#ALL_CAN_TRUST

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

ராகுல் காந்தி யின் ஒற்றுமை பயணம் நிறைவு தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து லட்டு வழங்கி கொண்டாடி ய தூத்துக்குடி காங்கிரஸ்!!! காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்த தலைவர்களில் முக்கிய தலைவரான காந்தியடிகள் இறந்த நாளான இந்த நாளில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பட்டாசு வெடித்தனர்

இந்த இந்திய ஒற்றுமை பயணத்தை தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இருந்து துவக்கி 150 நாட்கள் 17 மாநிலங்கள் வழியாக 3570 கிலோ மீட்டர் கடந்து காஷ்மீரில் இன்று நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் நிறைவை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு ஐ என் டி யு சி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்

இனிப்பு லட்டு வழங்கல் 



இன்று இந்திய தேசப்பிதா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நாளாக நினைவு நாள் ஜனவரி 30 அனுஷ்டிக்கப்படுகிறது .காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்த தலைவர்களில் முக்கிய தலைவரான காந்தியடிகள் இறந்த நாளான இந்த நாளில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




செவ்வாய், 24 ஜனவரி, 2023

மாப்பிள்ளையூரணியில் சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

thoothukudileaks 24-1-2023

photo news by Ravi

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

இது பற்றிய செய்தியாவது:-

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி அடுத்துள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கணபதி நகர் பகுதியில் 24 1 20 23 செவ்வாய்க்கிழமை இன்று காலையில் நடைபெற்றது.



கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் ஜோசப் தலைமையில் நடைபெற்ற இந்தமுகாமில்  மாப்பிள்ளையூரணி கால்நடை  உதவி மருத்துவர் வினோத் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளை அளித்தார்.


 இந்த மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல்    தாது உப்பு கலவை வழங்குதல்  கால்நடைகளுக்கு   தடுப்பூசி மற்றும் கோழி களிசல் தடுப்பூசி உள்ளிட்டவை போடுதல் என பல்வேறு சிகிச்சைகள் இங்கே வழங்கப்பட்டன .



இந்த முகாமில் கால்நடை ஆய்வாளர் ஷர்மிலி கால்நடை பராமரிப்பு உதவி அலுவலர் பரமசிவம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு கலந்து கொண்டனர் வருடத்திற்கு ஒருமுறை இந்த முகாம் நடைபெறும் இந் முகாமில் பங்கேற்ற சிறந்த இடையேறி கன்றுகளுக்கு மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயி மூன்று பேருக்கு சீல்டு வழங்கப்பட்டது.

     இன்று நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் 75 பசுமாடுகளும் 719 வெள்ளாடுகளும் 89 நாய்களும் 250 கோழிகளும் பயன் பெற்றன.


தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை தூத்துக்குடி மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.


இந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் மாப்பிள்ளை யூரணி பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கால்நடைகளை கொண்டு வந்து மருத்துவ முகாமில் பயனடைந்தனர்


ஞாயிறு, 22 ஜனவரி, 2023

செய்ய நல்லூர் ல் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சி இருவர் கைது

thoothukudileaks 23-1-2023

thoothukudi district police news 

 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது.



இது பற்றிய செய்தியாவது:-

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையிலான போலீசார் நேற்று (22.01.2023) ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செய்துங்கநல்லூர் வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் சிவராமங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகைய்யா மகன் ராமகிருஷ்ணன் (32) மற்றும் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாரிகந்தன் மகன் சத்தியபாலன் (26) என்பதும் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் எதிரிகளான ராமகிருஷ்ணன் மற்றும் சத்தியபாலன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ராமகிருஷ்ணன் மீது ஏற்கனவே குரும்பூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 2 வழக்குகளும், மற்றொரு எதிரி சத்தியபாலன் மீது சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.