தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மேற்கூரை இடிந்து விழுகிறது
பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி!??
தூத்துக்குடி:டிச17
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் பேருந்து நிலையத்தின் உள்ளே உள்ள கட்டிட மேற்கூரை பகுதி திடீரென இடிந்து, செங்கல் மற்றும் கற்கள் கீழே விழுந்தது இன்று (17-12-2025)காலை6.10 மணிக்கு என்பதால் பயணிகள் யாரும் இருக்கவில்லை.நல்ல வேளை யார் தலையிலும் விழுந்து விபத்து ஏற்படவில்லை.
ஏற்கனவே பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ள தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில், கட்டிடப் பகுதிகள் தொடர்ச்சியாக இடிந்து விழுவது வழக்கமாகி வருகிறது.
இதனால் தினமும் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், வியாபாரிகள் ஆகியோரின் பாதுகாப்பு கடும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில், சென்னை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கவுண்டர் இருக்குமிடத்தில், இரவு சுமார் 10.30 மணியளவில் மேற்கூரை மளமளவென்று இடிந்து விழுந்த சம்பவம் நடைபெற்றது.
இதன் பின்னர், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அவசரமாக சிமெண்ட் பூச்சு மற்றும் மேற்கூரை பகுதிகளில் பேஸ் ஒர்க் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது
.
ஆனால், அந்த தற்காலிக சீரமைப்புகள் பயனளிக்கவில்லை என்பதையே தற்போதைய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.
1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், இன்று பல பகுதிகளில் கடுமையாக பழுதடைந்து காணப்படுகிறது. 33 ஆண்டுகளுக்கும் மேலான பழமை, பராமரிப்பு குறைபாடு ஆகியவை சேர்ந்து, பேருந்து நிலையத்தை ஒரு “விபத்து மையமாக” மாற்றிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக இடித்து, நவீன வசதிகளுடன் புதுப்பித்து அமைப்பதே, எதிர்காலத்தில் பெரிய விபத்துகளைத் தவிர்க்கும் ஒரே வழி என பயணிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, நிலைமையை ஆய்வு செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மேலும், தூத்துக்குடி கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரில் ஆய்வு செய்து, பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுப்பார்களா??? என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்று 17-12-2025 தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே இருக்கும் மெர்ஸி உணவகம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரபரப்பு!!!
மேலும் இன்று 17-12-2025
காலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே இயங்கி வந்த மெர்ஸி உணவகம் கடை மேற்கூரை இடிந்து விழுந்தது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
வீடியோ பார்க்க
வீடியோ பார்க்க
– தூத்துக்குடி லீக்ஸ்










.jpg)





