▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
27-9-2024
photo news
Arunan journalist
தூத்துக்குடியில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி மீனவர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கழகம் ஆர்ப்பாட்டம்
இது பற்றிய செய்தியாவது:-
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்ய மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 27 -9-2024 காலை 10 மணியளவில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி சிதம்பர நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் மாநில இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு சங்கு குளி தலைவர் இசக்கிமுத்து மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் உறவினர்கள் கலந்து கொண்டனர்
இவன்: சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்டம்.




