ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்களால் தூத்துக்குடி அக்கா என அழைக்கப்படும் பேராசிரியர் பாத்திமா பாபு - க்கு தமிழ் கனலி விருது வழங்கப்பட்டது.
இது பற்றி செய்தியாவது:-
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி அக்கா -வுக்கு தமிழ் கனலி விருது.
தூத்துக்குடி பெ.28
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக 25 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் போராடி வருபவரும் பேராசிரியர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர், சூழலியல் உரிமை, எளிய மக்களின் உரிமைகளுக்காக இயங்குபவர், சிறை தண்டனை - வழக்குகளை எதிர்கொண்ட போதிலும் தொடர்ந்து போராடும் போராளி
பேரா.பாத்திமா பாபு
கடந்த 25-2 - 2024 ஞாயிறு அன்று மாலை சென்னை சைதாபேட்டை காரணிஸ்வர் கோவில் தேரடியில் மே பதினேழு இயக்கம் சார்பில் தேசிய பெரு விழா நடைபெற்றது.
விருது நிகழ்ச்சி காணொலி பார்க்க.அந் நிகழ்ச்சியில் தமிழின ஆளுமைகளுக்கு சிறப்பு செய்தல் விருது விழா வழங்க பட்டது
அதில் தூத்துக்குடி அக்கா பேராசிரியை பாத்திமா பாபு அவருக்கு "தமிழ் கனலி செயல்பாட்டாளர் விருது" வழங்கினர்
பலத்த கரகோஷத்துடன் விருது பெற்றார்.
தற்போது தூத்துக்குடி அக்கா போராசிரியை பாத்திமா பாபு -க்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அனைவரும் தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக