Sterlite லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sterlite லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 மே, 2025

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர் நீத்த 15 ஈகையர்களுக்கு ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி

Tamil Nadu updates,புகைப்படம் காணொலி அருணன் செய்தியாளர்

மன்னிக்கவும் மாட்டோம் 

மறக்கவும் மாட்டோம் 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு முற்றுகை போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக காவல்துறையில் உள்ள கயவர்கள் போராடிய அப்பாவி பொதுமக்களை அடித்து  துன்புறுத்தியும் 15 பேர்களை துடிதுடிக்க சுட்டு கொன்றார்கள்.

ஏழு ஆண்டுகள் ஆகின்றன இனியும் தாமதிக்காமல் அவர்களுக்கு உடனே  தண்டனை வழங்க வேண்டும்.


உச்சி நீதிமன்றம் தீர்ப்பு படி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு தூத்துக்குடி மண்ணை விட்டு அகற்ற வேண்டும்  

தமிழக அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதமாக தான் இருக்கின்றன 

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அவமதிப்பு செய்வது போல ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் வேண்டும் சொல்பவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?


என்ற கேள்விகள் ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் ஒங்கி ஒலித்தது


தூத்துக்குடி, மே 22:

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தில்   துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 

15  ஈகையர்களுக்கு ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று 2025 மே 22 தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்றது.




வீடியோ பார்க்க 

 ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் (ASPM) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் உரையாற்றிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் போராசிரியை பாத்திமா பாபு கூறியதாவது:


“தூத்துக்குடியில் நம் சகோதரர், சகோதரிகள் 

15 பேர் தங்கள் உயிரை தியாகம் செய்து இன்று தூத்துக்குடி மண்ணை காப்பாற்றியுள்ளார் கள்.


 ஆனால், ஏழு ஆண்டுகள் கடந்தும் துப்பாக்கி சூடு  நடத்திய உண்மையான குற்றவாளிக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை.

 நீதிக்காக இன்னும் நாம் எத்தனை ஆண்டுகள் காத்து கிடக்க வேண்டும் தமிழக அரசு நடவடிக்கையில் ஏன் மெத்தனம்” என்றார்.


அவரது கோரிக்கைகள்:


1. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் உடனடியாகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

 ஏழு ஆண்டுகள் கடந்தும் ஏன்? 

நீதி கிடைக்க வில்லை 


2. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 15 ஈகையர்களுக்கு  தூத்துக்குடி மாநகர மையத்தில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும்.



3. ஸ்டெர்லைட் ஆலையை அரசு முற்றிலுமாக உடனே அகற்ற வேண்டும்.

 அந்த இடத்தில் நச்சு வாயு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் அரசு மருத்துவமனை கட்டப்பட வேண்டும்.

வீடியோ பார்க்க 


நிகழ்வில் பலர் உரையாற்றினர்.

நாட்டுபடகு சங்கம் ரீகன் வணிகர் சங்கம் செயலாளர் தெர்மல் ராஜா, சங்குளி தலைவர் இசக்கி முத்து  தமிழக வெற்றி கழகம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆர்கனல் மதிமுக மகாராஜன் பேச்சுமுத்து பாதர் செல்வராஜ் தங்கையா வழக்கறிஞர் மாடசாமி மற்றும் பல் வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 


தூத்துக்குடி மக்களின் நீதி கோரும் குரல் 

மன்னிக்கவும் மாட்டோம் மறக்கவும் மாட்டோம் 

மேலும் வலுப்பெற்றுள்ளது.

புதன், 21 மே, 2025

ஸ்டெர்லைட் இன்னும் அகற்றப்படாதது ஏன்? கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஏழாம் ஆண்டு நினைவு நாளில் கேள்விக்குறியாகும் நீதி தீர்ப்பு வந்து ஓராண்டு மேலாகியும் ஸ்டெர்லைட்டை அகற்ற தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்?

Tamil Nadu updates

Photo news by Arunan journalist 

 #தூத்துக்குடி லீக்ஸ்

நாளிதழ் செய்தி | புதன்கிழமை | 

மே 21, 2025


## ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு கொலை : 

ஏழாம் ஆண்டு நினைவு நாளில் கேள்விக்குறியாகும் நீதி


தூத்துக்குடி, மே 21

: நாளை (மே 22) ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 15 பேரின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.


 இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கைகள் கவனம் பெறுகின்றன.


###தீர்ப்பு வந்து ஓராண்டு மேலாகியும் ஸ்டெர்லைட்டை அகற்ற தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்?



கடந்த பிப்ரவரி 29, 2024 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட்டின் அப்பீலை தள்ளுபடி செய்து நிரந்தரமாக ஆலையை மூட உத்தரவிட்டது. 


அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை சந்தித்த போராட்ட அமைப்பினர், உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் (DISMANTLE) என வலியுறுத்தினர். தாமதிக்கும் பட்சத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து சட்டச் சிக்கலை உருவாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்தனர்.


"தமிழக முதல்வர் ஆலையை அகற்றுவதற்கான சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்." 


ஆனால், எதிர்பார்த்தபடியே, ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

 அந்த மனுவும் கடந்த நவம்பர் 11, 2024 அன்று உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மீண்டும்.. மீண்டும்....!!!

தற்போது சிறிது காலம் அமைதியாக இருந்த ஆலை நிர்வாகம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் CURATIVE மனுவை தாக்கல் செய்து, ஆலைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகக் காட்டி குறுக்கு வழியில் திறப்பதற்கு முயற்சித்து வருகிறது.


### மக்களின் கேள்வி: "இன்னும் ஏன் இந்த ஆலையை அப்புறப்படுத்தவில்லை?"


தூத்துக்குடி மக்கள் "இன்னும் இந்த ஆலையை ஏன் தான் இங்கிருந்து அப்புறப்படுத்தாமல் இருக்கிறார்கள்?" என்று தமிழக அரசைப் பார்த்து கேள்வி எழுப்புகின்றனர்.


ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு காரணம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து அகற்றாமல் தமிழக அரசு மௌனம் காப்பதே என்று மக்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது. 


இது வேதாந்தாவிற்கு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


"ஒருவேளை மீண்டும் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உத்தரவிட்டால், இதற்காகப் போராடி உயிர்நீத்த 15 பேரின் உயிரை யாராவது திருப்பிக் கொடுக்க முடியுமா?" என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.


### அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பாக தமிழ்நாடு அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், பல்வேறு சாட்சிகளை விசாரித்ததில், 20-30 பேர் அடங்கிய கூட்டம் ரகசியமாக போராட்டக் கூட்டத்தில் நுழைந்து நாசவேலையில் ஈடுபட்டதாகக் கண்டறிந்தது. 

இவர்கள் ஸ்டெர்லைட் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கூட்டுப் பங்களிப்புடன் செயல்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.


"இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டுவிட முடியாது, 

இது நிச்சயமாக சம்பந்தப்பட்ட அலுவலர்களால் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டியதாகும்" (ஆணையத்தின் இறுதி அறிக்கை, பகுதி-2, பக்கம் 84) என்று ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

### கோரிக்கைகள்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:


1. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் கலவரமாக மாறியதற்கு ஸ்டெர்லைட்டின் பின்புலத்தை புலன் விசாரணை செய்ய வேண்டும்.

2. போராடிய பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற கொலையாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற வேண்டும்.


"படுகொலை நடந்து 7 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நீதி கிடைக்கவில்லை. 


குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது ஏன்? ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்," என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் கே. அரி ராகவன் வலியுறுத்தியுள்ளார்.


ஸ்டெர்லைட் இன்னும் அகற்றப்படாதது ஏன்? கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?


---

*தூத்துக்குடி லீக்ஸ் செய்தி குழு*

வியாழன், 20 மார்ச், 2025

80 நாட்களில் ஸ்டெர்லைட் ஆலை குஜராத் மாநிலத்திற்கு ஷிப்ட் ஆகிறது????

Tamil Nadu updates,

 photo news by Arunan journalist 

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்படும் வேதிப்பொருட்கள் குஜராத்துக்கு அனுப்பப்படுகிறது – தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2018 முதல் மூடப்பட்டிருந்த நிலையில், ஆலையில் சேமிக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்கள் அகற்றப்பட உள்ளன.

உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் ஆலையில் தேங்கி இருந்த பொருட்களை அகற்ற அனுமதி கோரியது. 


இதன் அடிப்படையில் 80 நாட்களுக்குள் அகற்றும் பணியை நிறைவு செய்ய அரசின் அனுமதி கிடைத்துள்ளது.


இன்றிலிருந்து அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. கண்டெய்னர் லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, வேதிப்பொருட்கள் குஜராத்தின் டாமன் – டையூ பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு: தூத்துக்குடி லீக்ஸ்

மீள் விட்டான் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை யின் தெர்மல் பிளான்ட்


அடுத்தாக...

தூத்துக்குடி சிப்காட் அருகில் மீள் விட்டான்  பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை சொந்தமான அனல் மின் நிலையம் ஆரம்ப ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன 

ஸ்டெர்லைட் ஆலையில் வேதி பொருட்கள் அகற்றும் பணியில் ...!!!


வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

மீண்டும் திறக்க வேண்டும் ஸ்டெர்லைட் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் வாழ்வாதர பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் தியாகராஜன், செயலாளர் கணேசன், இணை செயலாளர் சிந்தா ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்....


, "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஒரு சிலரின் தவறான புரிதல் மற்றும் அந்நிய சதியால் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக மூடப்பட்டது. 


ஆலை மூடியதன் காரணமாக அப்பாவி தொழிலாளர்கள் சுமார் 20,000-க்கு மேல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். அதே போன்று ஆலையின் ஒப்பந்தகாரர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள், 400-க்கு மேற்பட்ட சிறு, குறு தொழிலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் பத்திரிக்கை மூலம் ஆலையை திறக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். 


அன்மையில் வேலூர் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசு காரணமாக, அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள், ஆகியோரது வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தொழற்சாலைகள் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த ஆலையை மூட உத்திரவிடவில்லை. 


ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அப்படி யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதற்கான சான்றினை இதுவரை யாரும் சமர்ப்பிக்கவில்லை. வெறும் வதந்தியின் காரணமாக ஏற்பட்ட போராட்டத்தில் நடைபெற்ற துரதிஷ்டவசமான துப்பாக்கி சூட்டால் ஆலை மூடப்பட்டுள்ளது. நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளது போல் "கூட்டமாக தவறு செய்தால் அது நியாயப்படுத்தப்படுகிறது தனித்து நேர்மையாக செயல்பட்டால் அது குற்றமாக்கப்படுகிறது" என்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை மூடல் எடுத்துக்காட்டாகும். 


ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனால் பாதிப்புக்கு உள்ளானதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்ட இடங்களையெல்லாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த (NGT) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் "வலுவான காரணமின்றி ஆலை மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்து சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க உத்திரவிட்டுள்ளதை" அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டுகிறோம். 


அரசும் சரி, உச்சநீதிமன்றமும் சரி ஒருமுறை எடுத்த முடிவை /தீர்ப்பை சில ஆண்டுகளுக்குப் பின் தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றி அமைப்பது நடைமுறையில் உள்ளது. எனவே, தமிழக அரசு இதனை கெளரவப் பிரச்சனையாக கருதாமல், ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, ஒரு நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து நல்ல முடிவு எடுக்க பணிவுடன் வேண்டுகிறோம். 


இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 21 மே, 2023

வதந்திகளை நம்ப வேண்டாம் - வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு தூத்துக்குடி மாநகர் முழுவதும் பாதுகாப்பு போலீஸ் குவிப்பு

thoothukudileaks 21-5-2023

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு 21.05.2023 -ன்று பொதுமக்கள் கூடுகின்ற முத்துநகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி மறுப்பு - தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் - வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை -  மாவட்ட காவல்துறை அறிவிப்பு.



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு சம்மந்தமில்லாத இன்று (21.05.2023) பொதுமக்கள் கூடுகின்ற முத்துநகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி கோரி வழக்கறிஞர் ஹரிராகவன் மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு மனு அனுப்பியிருந்தார். 


பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வழக்கத்திற்கு மாறான அந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டு முறைப்படி மறுப்பு அறிவிப்பு அவருக்கு சார்பு செய்யப்பட்டது, அதை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் மீண்டும், மீண்டும் முத்துநகர் கடற்கரையில் மேற்படி நிகழ்ச்சி நடக்க இருப்பதாக மக்களிடம் போலியான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.


 வதந்ததியை பரப்புபவர்கள் மீதும், அனுமதி மறுக்கப்பட்டதை மீறி முத்துநகர் கடற்கரையில் கூடுவோர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 


அதே நேரம் நிர்வாகத்துறை மற்றும்

காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று நடத்துகின்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


இதனால் கால்டுவெல்பள்ளி முத்துநகர் கடற்கரை மற்றும் தூத்துக்குடி மாநகர் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

புதன், 1 பிப்ரவரி, 2023

தூத்துக்குடி யில் இன்னும் 2023 ஜனவரி மாதம் சம்பளம் வழங்காமல் இழுத்துயடித்து வரும் ?! தமிழ்நாடு அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 thoothukudileaks 1-2-2023

photo news by Rav

தூத்துக்குடி யில் இன்னும் 2023 ஜனவரி மாதம் சம்பளம் வழங்காமல் இழுத்துயடித்து வருகின்ற ?! தமிழ்நாடு அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-


அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கான ஜனவரி மாத சம்பளம் இன்னும் தங்களுக்கு வழங்கப்படவில்லை. 2023 ஜனவரி மாத சம்பளம் உடனடியாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

இக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று 1-2-2023 காலையில் 11மணியளவில்...

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நுழைவு வாயில் முன்பு மூட்டா மற்றும் டான்சாக் கிளைகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இவ் ஆர்ப்பாட்டம் 

பி.செரினா மார்கரட்

மூட்டா கிளைச் செயலாளர் தலைமையில் பி. அந்தோணி உதயகுமார் நிக்சன்  

டான்சாக் கிளைச் செயலாளர் முன்னிலையில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி முனபாக நடைபெற்றது.


ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 18 அக்டோபர், 2022

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் காயமடைந்த வர்களுக்கு ரூ10லட்சம் வழங்கவும் விசாரணை ஆணையம் பரிந்துரை

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வரும் காயமடைந்த வர்களுக்கு ரூ 10லட்சம் வழங்கவும் விசாரணை ஆணையம் பரிந்துரை இன்று நடைபெற்ற தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்துள்ளது.



இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 


இதில்  துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.


ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடத்தினர். 100-வது நாள் போராட்டத்தின் போது நடைபெற கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தக்கல் செய்ய அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது அமைக்கப்பட்டது.


22-05-2018-ம் நாள் நடைபெற்ற துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக பொது சொத்துக்கள், தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட முந்தைய நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்வதற்கு ஆணையமானது அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பு விசாரணையானது நடத்தப்பட்டது.


அந்த விசாரணையின் அடிப்படையில் 17 நபர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரது கல்வி தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க ஆணைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


பல கோணங்களில் ஒட்டுமொத்தமாக கருதும் போது இந்த சம்பந்தமானது காவல்துறை அவர்களுக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தியற்கான நிகழ்வு அல்ல என்று நிச்சியமாக காவல்துறை வரம்பு மீறியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை. போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் நுழைந்து கண்ணில் பட்டோரையெல்லாம் காவலர்கள் தாக்கியுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில், காவல்துறை தரப்பில் மிகை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணை ஆணையம் முடிவுக்கு வந்ததை அடுத்து, குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு குந்தகம் இன்றி அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.


விசாரணை ஆணையம் இறந்தவர்களின் உறவினர்கள், சட்டபூர்வ வாரிசுகளுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


இறந்துபோன ஜஸ்டின் செல்வமிதீஷின் உயிரிழப்பை துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு இணையாக பாவித்து அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தகுந்த நிவாரணத்தை வழங்கவும், அவரது தாயாருக்கு அரசு பணி வழங்கவும், பலத்த காயமடைந்த காவலர் மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்கவும் ஆணையமானது பரிந்துரைத்துள்ளது.


இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலங்களில் நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையமானது பரிந்துரை வழங்கியுள்ளது.

.

புதன், 29 ஜூன், 2022

ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேண்டாம் அனில் அகர்வாலுக்கு மாற்றுத்திறனாளி சங்க தலைவர் ரமேஷ் கெஞ்சி கதறல் பரபரப்பு பேட்டி!!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் திறந்தால் தான் நாங்க வாழ முடியும் 

முத்து நகர் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம்

தலைவர் ரமேஷ் இன்று 29-06-2022 தூத்துக்குடி பானு பிருந்தாவனம் கூட்டரங்கில் தூத்துக்குடி செய்தியாளர் இடம் பரபரப்பு பேட்டியளித்தார்.!



இதுபற்றிய செய்தியாவது -

தூத்துக்குடி லீக்ஸ் :-29-6-2022

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறந்தால் தாங்க  நாங்க வாழ முடியும் எங்களுக்கு அவ்வளவு நன்மை செய்து வந்துள்ளனர்.முந்திய (அதிமுக) அரசும் சரி இந்த திமுக சரி 

இங்கு ள்ளஅரசு அதிகாரிகள் ஒரே மாதிரி தான் இருக்காங்க இந்த திமுக ஆட்சி வந்த பிறகும் மாறவில்லை தாமதபடுத்துவாங்க 15 மேல் எங்களை அலையவிடுவாங்க  ஆனாலும் பதில் சொல்ல மாட்டார்கள்.முதல்வர் இடம் இது பற்றி தெரிவிக்க இருக்கிறோம்.


ஆனால் எங்களுக்கு உடல் பாதிப்பு உள்ளவர்கள் என தெரிந்ததும் உடனே நேரிடையாக வரவழைத்து மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் தந்து உதவியதை நாங்க மறக்க முடியாது.






எனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விற்க வேண்டாம் என உரிமையாளர் அனில் அகர்வாலை நாங்கள் அனைவரும் கெஞ்சி கேட்டு கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு வரும் மாற்றுத்திறனாளிகள் இப்போது வசதியாக தான் இருக்கிறார்கள் என்றார்.


நிகழ்ச்சியில் துளசி  மகளிர் அணி தலைவி தனலட்சுமி உட்பட நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் மாற்றுதிறானாளிகள் கலந்து கொண்டனர்.


மாற்றுதிறானாளிகள் பலர் ஸ்டெர்லைட் ஆலை எதிராக உள்ள அமைப்பு களில் இருந்து வரும் நிலையில் ‌முத்துநகர் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் தலைவர் ரமேஷ் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு பேட்டி மாற்றுத்திறனாளிகள் மத்தியில் சலசலப்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 19 ஜூன், 2022

தூத்துக்குடி நாசரேத் பகுதியில் கஞ்சா விற்பனை பிரபல ரவுடி பாம் பீட்டர் கைது

தூத்துக்குடி நாசரேத் காவல் நிலைய  பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல ரவுடி பாம் பீட்டர் போலீசாரல் கைது.செய்யப்பட்டார்.

இது பற்றிய செய்தியாவது - தூத்துக்குடி லீக்ஸ் - 19-06-2022

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன்  உத்தரவுபடி சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் மேற்பார்வையில் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ராய்ஸ்டன் மற்றும் போலீசார் நேற்று (18.06.2022) ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.

அப்போது நாசரேத் தண்டையார்விளை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தண்டையார்விளை பகுதியைச் சேர்ந்த சாலமோன் ராஜ் மகன் பீட்டர் (எ) பாம் பீட்டர் (52) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.



உடனே மேற்படி போலீசார் பீட்டர் (எ) பாம் பீட்டரை கைது செய்து அவரிடமிருந்த 15 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் கைது செய்யப்பட்ட  பீட்டர் (எ) பாம் பீட்டர் என்பவர் மீது நாசரேத், ஸ்ரீவைகுண்டம், குரும்பூர் மற்றும் தாளமுத்துநகர் ஆகிய காவல் நிலையங்களில் 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 8 ஜூன், 2022

நீர் நிலை ஆக்ரமிப்பு அகற்றப்படும் அமைச்சர் துரைமுருகன் அதிரடி ஸ்மார்ட் சிட்டி தூத்துக்குடி வளர்ச்சிக்கு இடைஞ்சலாக உள்ள தூத்துக்குடி மாநகராட்சி நீர் நிலைஆக்ரமிப்புகள் அகற்றப்படுமா?

 🌑 நீர் நிலை ஆக்ரமிப்பு அகற்றப்படும் எதிர்கட்சி தலைவரே ஆக்ரமிப்பு செய்து இருந்தாலும் அகற்றப்படும் என தீவிரமாய் அதிரடியாய் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன்.? 

தூத்துக்குடி லீக்ஸ் - 08-06-2022

தூத்துக்குடி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி ஸ்மார்ட் சிட்டி என மாவட்ட நிர்வாகம் அரசு அதிகாரிகள்  வெறுமே வாயால் முழக்கமிட்டால் போதாது? 


தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் பல பணிகள் ரொம்ப மெத்தனமாக மேம்பாலம் சுரங்க பாதை நான்கு வழி சாலை விரிவாக்கம் ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையம் என எதுவுமே ஆரம்ப நிலையில் இம்மி கூட நகரவில்லை அதற்கு இடைஞ்சலாக இருக்கும் ஆக்ரமிப்புகள் ? கோர்ட் மாநகராட்சி சாதகமாக தெரிவித்து பின்பும் சிலரின் ஆக்ரமிப்புகள் அகற்றப்படவும் இல்லை


தூத்துக்குடி மாநகரின் முக்கியமான மைய பகுதியில் நீர் நிலை ஆக்ரமிப்புகள் செய்து உள்ளார்கள்.



பாளை ரோடு தமிழ் சாலை

இன்று வரை தூத்துக்குடி மாநகராட்சி எதுவும் அகற்றப்படவில்லை. அச்சுறுத்தலா? அல்ல வேற எதுவுமா? என்றும் புரியவில்லை? என்கிறார்கள்.


தற்போது புதிதாக தேர்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி புதிய மேயர் ஜெகன் வயதில் இளைஞர் சுறுசுறுப்பானவர்

 எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் மாநகரம் ஸ்மார்ட் சிட்டி தேங்கி கிடக்கும் பணிகள் பல.. இதில் பாரபட்சமில்லாமல் ஆக்ரமிப்புகளை அகற்றிட செய்து முடிப்பாரா? மாட்டாரா?என புதிய மேயர் ஜெகன் பெரிய சாமி மீது தூத்துக்குடி பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஆவல் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.


நீர் நிலை ஆக்ரமிப்புகள்


1 தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை இடதுபுறத்தில் இருந்து பேரறிஞர் அண்ணா சிலை வரையும் ... பின்பு மாநகராட்சி நீரேற்றும் தொட்டியிலிருந்து அதிமுக ஆறுமுக நயினார் கடை வரையிலும் ...


பின்பு

அதே வரிசையில்   ஸ்டாண்டடு - ஹோட்டல் பேக்கிரி முதல் ஜயா ராவ்பகதூர் சிலை முடிய நிர் நிலை ஆக்ரமிப்புகள் உள்ளது அகற்றப்பட போவதாக தெரிவிக்கிறார்கள்.


ஆனால் இதுவரை தூத்துக்குடி மாநகராட்சி ஒன்றும் செய்யவில்லை இதில் சிலர்  சம்திங் ஸ்பெஷலாக (லட்சகணக்கில் செலவழித்து ) பட்டா பெற்று வைத்து இருப்பதால் ?

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி புதிய மேயரால் தங்களை ஒன்று மே அகற்ற முடியாது எளிதல்ல என்கிறார்கள்.

இப்படி பலமுறை இவர்கள் படம் போட்டு காட்டியதல்லாம் புரிந்து கவனித்து விட்டோம் இப்பவும் ..? வேற வேலையே இல்லையா கடுப்பாகிறார்கள்.


ஆக்ரமிப்புகளில் 200 கடைகள் மற்றும் அரசு ஊழியர் சங்க அலுவலகம் மூன்று அரசியல் கட்சி தங்கள் பெரிய அலுவலகம் செயல்படுகிறது.  மற்றும் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் ஆகியவை அடக்கம்.

மேற்படி உள்ளவர்கள் வருட கணக்கில் நீர் நிலை நிலங்களை ஆக்ரமித்துள்ளவர்கள் குறிப்பாக பலர் கோடிஸ்வ ராகவே இருக்கிறார்கள்



அடுத்து ஏவிஎம் ஆஸ்பத்திரியில் இருந்து நான்கு வழி சாலை  வர வேண்டும் என்கிறார்கள்.


முக்கிய ஆக்ரமிப்புகள் அண்ணா நகர் பாலம் வருவதற்கு இடைஞ்சலாக இருந்த வி.வி.டி சிக்னல்  தமிழர் கட்டியிடம் ஆக்ரமிப்பு பகுதியில் இதுவரை அகற்றப்படவில்லை நீதிமன்றம் மாநகராட்சி தெரிவித்ததை ஏற்று கொண்டது. அரசும் மாநகராட்சி உரிய இழப்பீடு அளித்து காலி பண்ண கூறியதாக தெரிவிக்கிறார்கள். 

பின்பும் அதற்கு உரியதை கொடுக்காமல் மாநகராட்சி காலதாமதபடுத்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.


அடுத்து சிதம்பரநகர் குறுக்கு தெரு ஒன்று முதல் நான்கு வரை உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றம் செய்யப்படவில்லை


முக்கியமாக கடற்கரை சாலை மதுரா கோட்ஸ் எதிர்புறமுள்ள ஆக்ரமிப்புகள்


இப்படி தூத்துக்குடி ஸ்டார் சிட்டி வளர்ச்சி திட்டத்தில் ஆக்ரமிப்புகள் அகற்ற வேண்டிய லிஸ்டில் இவையெல்லாம் உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.



ஞாயிறு, 22 மே, 2022

தூத்துக்குடியில் கிஞ்சித்தும் குறையாத ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனநிலை துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 4 ம் ஆண்டு நினைவு அஞ்சலி ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் அகற்றபட வேண்டும் தூத்துக்குடி அக்கா போராசிரியை பாத்திமா பாபு பரப்பரப்பு

 தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு பதிவு 22-05-2022

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் துப்பாக்கி சூட்டில் உயிர் துறந்த 16 போராளிகள்

இன்று 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி  தூத்துக்குடி மாநகர மக்கள் அனைவரிடம் இன்னும் கிஞ்சித்தும் குறையாத ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனநிலை அதிர்வுகள் தூத்துக்குடி மாநகரில் பல இடங்களில் நினைவுவேந்தல் வைக்கப்பட்டிருந்தது.





 ஸ்டெர்லைட் என்ற ஒரு தனியார் ஆலை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த தூத்துக்குடி மக்கள் மீது அப்போதைய அதிமுக ஆட்சியில்  தமிழக அரசு காவல்துறை 

கடந்த 2018 மே - 22 -ல் அன்று  மிக கொடூரமாக வாய் பகுதி முளை சிதறிட தலைப் பகுதி துப்பாக்கி சூடு எண்ணற்ற இளைஞர்கள் அடித்தும் சித்ரவதை செய்தார்கள் என்கிறார்கள்.

இத்தனைக்கும் ஸ்டெர்லைட் ஆலை முன்பு யாரும் எந்த போராட்டம் நடத்த செல்லவில்லை. பொதுமக்கள் பெண்கள் சிறு குழந்தைகள் உட்பட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களோடு போனார்கள். அங்கு சென்றவர் களுக்கெல்லாம் ஒரு விதத்தில் பாதிப்பு இன்னும் தொடர்கதை தான் என்கிறார்கள்.

அன்று தமிழக காவல்துறைநடத்திய  துப்பாக்கி சூடு இதில் 13 பேர் அன்றைய தினமும் பின்பு 3 பேரும் மொத்தம் 16 பேர்  உயிர் துறந்தனர்.

இவர்களின் உயிர் தியாகத்தால்.. 

தமிழக அரசு ஸ்டெர்லைட் எனும் தனியார் ஆலையை முடி சீல் வைக்க உத்தரவிட்டது.

இன்று 2022 மே - 22 நான்காம் ஆண்டு நினைவு நாள்

 துப்பாக்கி சூட்டில் இறந்த போன ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளின் திருவுருவங்களுக்கு மலர் மாலை ரோஜா மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



 தூத்துக்குடியில் பலர் கண்ணீர் மல்க  மரியாதை செலுத்தியதை காண முடிந்தது.



தூத்துக்குடி மாநகர் பல இடங்களில் போராளிகள் நினைவு வேந்தல் 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக தூத்துக்குடி அக்கா பேராசிரியை பாத்திமா பாபு தலைமையில் வியாபார வணிகர் சங்கம் மற்றும் மீனவர் சங்கம் மற்றும்  அதிலுள்ள முக்கிய பிரதிநிதிகளுடன் ... ஸ்டெர்லைட் எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் கட்சி மா.செ மற்றும் முக்கிய நிர்வாகிகள் விராங்கனை இயக்கம் சேர்ந்தவர்கள் நகரில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று அங்கு காத்திருந்த ஏராளமான பொதுமக்கள் உடன் உயிர் நீத்த போராளிகளின் திருவுருவம் முன்பு மெழகுவர்த்தி ஏற்றியும் ரோஜா மலர் தூவி அப் பகுதிகளில் மரியாதை செலுத்தினார்கள்.



இதனால் எங்கெங்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது என கண்காணிக்க தூத்துக்குடி அக்கா போராசிரியை பாத்திமா பாபு கார் செல்லும் வழி எல்லாம் முன்னே போலீஸ் ஜிப் ஜந்து டூவிலர் பைக் உளவு போலீசார் துரத்தி கொண்டே இருந்தார்கள்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் தூத்துக்குடி அக்கா. பேராசிரியை பாத்திமா பாபு பேசியதாவது:-

திமுக ஆட்சி அவர்கள் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

இத்தனை பேர் தங்கள் உயிரை தியாகம் செய்து போராடி உள்ளார்கள் அவர்கள் ஆத்மா பார்த்து கொண்டு தான் இருக்கின்றது

எக்காரணத்திற்கும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்

இனி 

தூத்துக்குடியில்

ஸ்டெர்லைட் ஆலை  அகற்றபட வேண்டும் அதை அடியோடு தமிழக அரசு அகற்றிட வேண்டும் என்பதே இங்கு அனைவரின் வேண்டுதலாக இருக்கின்றது. என்றார்.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை ?நினைவு நாள் முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பல மாவட்ட எஸ்.பி.க்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். 

அங்கு என்னென்ன பொதுமக்கள் யாரெல்லாம் என அனைவரையும் போலீசார் வீடியோ போட்டோ எடுத்து ஆவணப்படுத்தி கொண்டிருந்தார்கள்.


புதன், 27 ஏப்ரல், 2022

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பில் மக்களுடன் களத்தில் நிற்கும் அனைத்து கட்சிகள்/அமைப்புகளுக்கு தூத்துக்குடி மக்களின் சார்பில் முக்கிய கோரிக்கை

ஸ்டெர்லைட்டின் கட்டுமானத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்ட 1994-ல் இருந்து இன்று வரை 28 ஆண்டுகால போராட்டம் ஆலைக்கு எதிராக நடந்து வருகிறது. 



2010-ல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆலை மூடப்பட்டது. 


ஆனால் 2013-ல் உச்சநீதிமன்றம் ஆலையின் விதிமீறலுக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்கும்100 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஆலை  இயங்குவதற்கு உத்தரவிட்டது. 


அந்த உத்தரவில் எவ்வித விதிமீறல்களையும்,, சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் மீண்டும் ஏற்படுத்தக்கூடாது என்றும், மீறி ஏற்படுத்தினால் மாநில அரசு மூடலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். 


அதன் பின்னர் செயல்பட்ட ஆலை மீண்டும் விதி மீறலிலும், தூத்துக்குடியில் பாதிப்பையும் ஏற்படுத்தியதால் மக்கள் நூறு நாட்கள் போராடினார்கள். 


அந்த போராட்டத்திற்கு அதிமுக, பிஜேபி தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக 100-வது நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க செல்லும்போது மே-22, 2018 இல் நடந்த மக்கள் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 பேர் அடித்தே கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் உடல் ஊனம் அடைந்தனர். 273 வழக்குகள் பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டது. 



அதன்பிறகு அப்போதைய அ.தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்து ஆலைக்கு சீல் வைத்து மூடியது. ஆலையை மூடிய அரசாணையை ரத்து செய்ய வேதாந்தா தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா தாக்கல் செய்துள்ள அப்பீல் வழக்கு தற்சமயம் இறுதி விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


இந்நிலைமையில் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது என்னவென்றால்,


1-வதாக சாதி, மத & ஏரியா அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் ஸ்டெர்லைட்டின் சட்டவிரோத, நயவஞ்சக நடவடிக்கைகளால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் பொது அமைதி குலைகிறது. சமீபத்தில் கூட தூத்துக்குடி பாத்திமா நகரில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பொது அமைதியை குலைத்துள்ளனர். அவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இது போல "எப்போது மோதல் வெடிக்குமோ" என்ற அச்சத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலை நிர்வாகம் உண்டாக்கியுள்ளது.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே-22.2018-ல் நடந்த போராட்டத்தில் 273 வழக்குகளும், அதற்கு முன்பாக நடந்த போராட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகளும், துப்பாக்கி சூடுக்கு பின்னர் நடந்து வருகிற போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புகார்கள் வரப்பெற்று இரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன.


ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் - எதிர்- ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் என மக்கள் பிளவுபடுத்தப்பட்டு பெரும் மோதல் உருவாகும் சூழல் உள்ளது. பொது அமைதியை தொடர்ந்து சீர்குலைக்கும் ஆலையை அகற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் Cr.P.C. பிரிவு133-ன் கீழ் உரிய முறையில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்து ஸ்டெர்லைட்டை சிப்காட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.


2-வதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த பின்பு ஆலைக்கு உள்ளே உள்ள கழிவுகளையும், வேதிப் பொருட்களையும் அகற்றுவதற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது உயர்மட்ட கமிட்டியை G.O.No 83, தேதி 21.06.2018 மூலம் அமைத்து அதன் அடிப்படையில் உயர்மட்ட கமிட்டி ஆய்வு செய்து 11-வகையான கழிவுகள், மற்றும் வேதிப்பொருட்களை குறிப்பிட்ட நாட்களில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள உள்ளூர் மட்ட கண்காணிப்பு கமிட்டி (LLMC) உருவாக்கப்பட்டு அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் பணிகளை முடிக்கவும், 250 நபர்களும் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கண்ட பணியாளர்கள், நிறுவன ஊழியர்கள் & அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்கின்றனர். அப்போதைய ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரி அவர்கள், ஸ்டெர்லைட்டின் கழிவுகள், வேதிப்பொருட்கள் பெரும்பாலும் 100% ம் அகற்றப்பட்டுள்ளதாகவும், சில கழிவுகள் மட்டும் மீதம் இருப்பதாகவும், அவையும் சில நாட்களில் முற்றிலும் அகற்றப்பட்டு விடும் என்றும் 2018ல் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பத்திரிக்கை செய்தி வாயிலாக பொதுமக்களுக்கு அறிவித்தார்.


மேற்கண்ட தகவல்கள் எங்களுக்கு வழங்கப்பட்ட RTI பதிலில், பணியாளர்கள் தற்போது வரை சென்று வருவதற்கு எவ்வித உரிய அனுமதியும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆலைக்குள் பணியாளர்கள் சென்று வருவது மாவட்ட நிர்வாகத்தின் மீது மிகப்பெரிய சந்தேகத்தையும், பராமரிப்பு பணிகள் உட்பட ஆலையை மீண்டும் இயக்குவதற்கான அனைத்து பணிகளையும் மேற் கொள்வதற்காகத் தான் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் செல்கிறார்கள் என்ற எண்ணத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. 2018-ல் கொடுத்த 90 நாட்கள் அனுமதியை வைத்துக்கொண்டு தற்போது வரை ஸ்டெர்லைட் நிறுவனம் பணியை மேற்கொள்வது சட்டவிரோதம். இதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும்,அரசு அதிகாரிகளும், ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்கின்றனர் எனவே ஸ்டெர்லைட் ஆலைக்குள்  சட்டவிரோதமாக ஆட்கள் செல்வது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.


3-வதாக, உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையிலுள்ள ஸ்டெர்லைட் வழக்கில், அதிமுக அரசு கொள்கை முடிவு எடுத்ததாக சொன்னாலும் அதற்கான தரவுகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கு கமிட்டி அமைத்து அதன் அறிக்கையின் பேரில் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. அதனால் தமிழக அரசு உடனடியாக ஒரு வல்லுநர் குழு அமைத்து, பெருவீத தாமிர உற்பத்தி தொழில் என்ன பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும், கொள்கை முடிவு எடுக்கப்பட்டதற்கான காரணத்தை அறிக்கையாகவும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதம் மிகவும் வலிமையாக வைக்கப்பட வேண்டும்.


மேற்கண்ட கோரிக்கைகளை தூத்துக்குடி மக்களாகிய நாங்கள் உங்கள் முன் வைக்கின்றோம். இந்த முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

----------------------------------------------------மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துமாறு வேண்டுகிறோம்.

-----------------------------------------------------


ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.

சனி, 6 நவம்பர், 2021

தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது வழக்கு - 33 பேர் கைது!!!.

மதுரை, தென்மண்டல காவல் துறை தலைவர் .T. S. அன்பு, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் 30.10.2021ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது இதுவரை 190 வழக்குகள் போடப்பட்டு, அதில் 33 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.




மேலும் காணொளி காட்சி மூலம் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்களைக் கண்டறிந்து, தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.

கடந்த 4.11.2021ம் தேதி தீபாவளி திருநாளன்று உச்ச நீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 233 வழக்குகள் போடப்பட்டு, 246 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 மேலும் மது போதையில் வாகனங்கள் ஓட்டிய நபர்கள் மீது 809 வழக்குகள் போடப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

ஸ்டெர்லைட் ஆலையின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சீண்டிவிடக்கூடிய "சந்து-பொந்து" செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கு மாறு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் -எஸ்.பி இடம் வலியுறுத்தல்!!!ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக இன்று 2021 செப் 21-மனு அளிக்கப்பட்டது!!

 thoothukudileaks 

இதுபற்றி மனுவில் கூறி இருந்த செய்தியாவது:-

உச்சநீதி மன்றத்திலே, தமிழக அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கும் இடையிலான வழக்கு நடந்து வருகின்றது.


 மூடிக்கிடக்கும் ஆலையை திறக்கவேண்டும் என்பது ஆலையின் வாதமாகவும், ஆலை சுற்றுச்சூழலை சீர்குலைத்தது, மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியது எனவே ஆலையை திறக்க முடியாது என்பது அரசு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் உட்பட அனைத்து தலையீட்டாளர்களின் வாதமாகவும் உள்ளது.


வழக்கின் தீர்ப்பு மூலம் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று பொறுமையோடும்  நம்பிக்கையோடும் நாங்கள் காத்திருக்க, தற்பொழுது  அந்த நச்சாலை சமூகசூழலையும் சீர்கெடுக்கும் தனது வழக்கமான பணியை தீவிரப்படுத்தி  வருகிறது.


நகரின் பல்வேறு பகுதிகளிலும் வயிற்று பசியிலும் பணப்பசியிலும் அலையும் நான்கைந்து நபர்களை பிடித்து பசிக்கு தீனி கொடுத்து, தாங்கள் தான் மக்களின் பிரதிநிதிகள் போல் பேச வைத்து மக்கள் ஆலையை திறக்கவே விரும்புகிறார்கள் என்பது போல பொய்யான தோற்றத்தை பரப்ப முயல்கிறார்கள்.




அதிலும்  மீனவ  சமுதாயத்தை சார்ந்தவர்களாக தங்களை அடையாளங் காட்டி  பேசும் போது, அது ஒரு ஒட்டுமொத்த  சமுதாயத்தையும் அவமானப் படுத்துவதாகவும் கோபம் கொள்ளச் செய்வதாகவும் உள்ளது. 

இப்பேர்பட்ட சூழ்நிலையில்,  தொடக்க முதல் இன்று வரை மிகத் திடமான உறுதிப்பாட்டோடு ஆலையை எதிர்த்து வரும் மீனவ சமுதாயம், ஒரு சில கைக்கூலிகளால் தங்களுக்கு ஏற்படும் களங்கத்தை  போக்க, நடவடிக்கைக்குள் நிர்பந்திக்கப் படுகிறார்கள்.  


இது உளவியல் ரீதியாக தவிர்க்க முடியாத ஒரு மன சூழல். 

சில சமயங்களில் அது எதிர்வினையாற்றும் போக்குக்கு மக்களை கொண்டு நிறுத்தி விடக்கூடும்


நாங்கள் நம் நகரில் இயல்பு வாழ்க்கைக்கு பங்கம் வராமல் வாழவே விரும்புகிறோம்.


 ஆனால் இந்த குற்றக் கார்ப்பரேட்டும் அதன் கைக்கூலிகளும் எங்கள் பொறுமையை சோதித்துப் பார்க்கிறார்கள்.


மீனவ மக்கள் மட்டுமின்றி நகரின் அனைத்து மக்களும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். எனவே, ஆலையின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சீண்டிவிடக்கூடிய "சந்து-பொந்து" செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வலியுறுத்துமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்



நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக  பொறுமையோடும் பொறுப்புணர்வோடும் காத்திருக்கிறோம்

இவ்வாறு தெரிவித்து இருந்தார்கள்.

திங்கள், 20 செப்டம்பர், 2021

தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றுவதுடன், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133 ன் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனம் செய்த குற்றங்களுக்காக குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறும், CBI வமுள்ள வழக்கை CBCID க்கு மாற்றி சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் தூத்துக்குடி மக்கள் சார்பில்ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை!! .

press news


தூத்துக்குடியை நாசப்படுத்தி வந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி மக்கள் எதிர்த்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 22-05-2018 மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களை கார்ப்பரேட்டின் கூலிப்படையாக மாறி கடந்த அதிமுக அரசு சுட்டுக்கொன்றது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கடுங்கண்டனம் எழுந்த நிலையில் வேறு வழியின்றி 29-05-2018 அன்று கொள்கை முடிவு எடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.

ஆனால் அரசாணை செல்லாது எனவும், மீண்டும் ஆலையை திறக்கவும் வேதாந்தா நிறுவனம் மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. உயர்நீதிமன்றமானது "தமிழக அரசின் அரசாணை செல்லும், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்ககூடாது" என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நிலுவையில் உள்ளது.

 கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசு ஸ்டெர்லைட் பாதிப்பால் ஆலையை மூடுவதும், நீதிமன்ற உத்தரவுகள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும், மீண்டும் திறப்பதுமாக நாடகம் நடந்து வருவது தூத்துக்குடி மக்களுக்கு கவலையையும், வருத்தத்தையும் அடையச் செய்துள்ளது.

இதனை உணர்ந்துதான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "திமுக அரசு அமைந்தவுடன் அரசு கொள்கை முடிவெடுத்து, சிறப்பு சட்டமியற்றி, ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியில் இருந்து நிரந்தரமாக அகற்றப்படும்" என்று தேர்தல் பிரச்சாரங்களிலும், தேர்தல் அறிக்கையிலும் உறுதியளித்திருந்தார்.

தூத்துக்குடி மக்களும், மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பல முறை கோரிக்கை வைத்தோம். கடந்த முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அவரளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் சிறப்பு சட்டம் குறித்தும், ஸ்டெர்லைட்டை அகற்றுவது குறித்தும் வெளியாகாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தோம்.

மேற்கண்டவாறு உச்சநீதிமன்றத்தில் வழக்குநிலுவையில் உள்ள நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் செய்த விதிமீறல்கள் மற்றும் மாசுபடுத்துதல் குற்றங்களுக்கு குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த 25 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட FIR கள், பல 100 கோடி சொத்துக்கள் சேதம் உள்ளிட்டு தூத்துக்குடியின் பொது அமைதியை சிதைத்து வரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு - 133-ன் கீழ் அகற்றுவதற்கான அதிகாரம் மாவட்டாட்சியருக்கு உள்ளது. இந்த அதிகாரத்தையும் இன்று வரை தமிழக அரசு பயன்படுத்தவில்லை.

மிகவும் குறிப்பாக மக்களை படுகொலை செய்த காவல்துறை குற்றவாளிகள் இன்றுவரை சுதந்திரமாக வெளியில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.


 எனவே தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றுவதுடன், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133 ன் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனம் செய்த குற்றங்களுக்காக குற்றவியல் நடவடிக்கை எடுக்குகுமாறும், CBI வமுள்ள வழக்கை CBCID க்கு மாற்றி சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் தூத்துக்குடி மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்ற வழக்கு ஒரு போதும் தடையாக இருக்கவில்லை.

எனவே தந்தை பெரியார் வழியில் தமிழக அரசு செயல்படுவதாக தமிழக முதல்வர் குறிப்பிடுவதால், சமூகநீதிக் காவலர் பெரியார் பிறந்த நாளான செப்-17 - அன்று தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள பெரியாரின் உருவச்சிலையிடம் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவதற்கு மனு கொடுக்கிறோம்.

இந் நிகழ்ச்சியின் மூலம் தமிழக முதல்வர் தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலிப்பார் என்று நம்புகிறோம். திமுக அரசு உறுதிமொழியாக கொடுத்த வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று இதன் மூலம் நாங்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பிற்காக 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு 
எண். 50- B போல்டன் புரம், திருச்செந்தூர் ரோடு, தூத்துக்குடி- 628 003
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817


புதன், 11 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளே இப்போது என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா? உயர்நீதிமன்றத்தில் மனு!!!

சமீபத்தில் 3 மாதம் இலவச ஆக்ஸிசன் தயாரிப்பில் தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட்  ஆலை திறந்து கண்காணிப்பு குழ மேற்பார்வையில் இயங்கியது. 




இதற்கிடையில் ஸ்டெர்லைட் சார்பாக தூத்துக்குடி மக்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது அதற்காக பத்திரிககை டி.வி ஊடகங்களை கையிலெடுத்தது. அதையொட்டி ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் கல்வி உதவி தொகை தருவதாகவும் கோவில் களுக்கு அன்ன தானம் நன்கொடை  என நலத்திட்ட உதவிகள் வாரி வழங்கியதும்....?

அது செய்தியாக முன்னனனி தின இதழ்களில் இடம்பிடித்தும்  தொடர்ந்து கொண்டே இருந்தது.

 தூத்துக்குடி மாநகரில் வாழும் பொதுமக்களுக்கு எரிச்சலையும் பீதியும் தந்தது. சாத்தான் வேதம் ஒதுவதை  யாரும் நம்ப வில்லை என்பதால்  இவர்கள் நொந்துபோயினர்.

இந்நிலையில் ஜூலை 31-ல் நீதிமன்ற கெடு முடிந்ததும் மீண்டும் 6 மாதம் இயங்கிட அனுமதி தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு செவிசாய்க்கவில்ல

இதனால் ஸ்டெர்லைட்-ல் 3 மாதமாக பணியாற்றிய தொழிலாளர்கள் வெளியேற்றம் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் மூலம் தண்ணீர் இணைப்பு மின்இணைப்பு துண்டிப்பு செய்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை கொட்டத்தை அடங்கியது.


thoothukudileaks

   தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுப்பொருளை அகற்ற அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் மனு அளித்துள்ளது.



 தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன மேலாளர் சுமதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். 


ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள மூலப்பொருட்கள், கழிவுகள் உள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதன்மூலம் தற்போது  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள மூலப்பொருட்கள், கழிவுகள் உள்ளன என்பது தெரிய வருகிறது.


திங்கள், 9 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கிசூடு வழக்கு!!! தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம்!!! செப்டம்பர் 13ம் தேதிக்குத் தள்ளி வைப்பு.!!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம், சீல் வைத்த கவரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.



 இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதுகுறித்து தமிழக அரசிற்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து நேரடியாக தூத்துக்குடி சென்று விசாரணை மேற்கொண்டது. 


அதன் அறிக்கை தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழக முதன்மை செயலாளர் தரப்பில் செப்டம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 


அதன் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் அக்டோபர் 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.

இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு, "எந்த ஆயுதமும் இன்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது. 


ஒரு நாகரிகமான சமுதாயத்தில் இது ஏற்புடையதா?" என்று கேள்வி எழுப்பியது. மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலர் அறிக்கை இரண்டையும் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணையமும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர்.



இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.



 அப்போது ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.


 தமிழக பொதுத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன் பல ஆதாரங்களைச் சேகரித்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய 'ஹார்ட் டிஸ்க்' பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை தாசில்தார்களின் மொபைல் எண் தொடர்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், 718 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 1,126 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.



கடந்த ஜூலை முதல் காவல் துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்த 64 பேருக்கு தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 21 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த மே 14ம் தேதி அளித்த இடைக்கால அறிக்கையில் அளித்த பரிந்துரை அடிப்படையில், போராட்டக்காரர்களுக்கு எதிரான 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், 84 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், மூன்று வார கால அவகாசம் வழங்கி, விசாரணையைச் செப்டம்பர் 13ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.