Tamil Nadu updates 19-3-2025
news by Arunan journalist
தூத்துக்குடி பரபரப்பு
இன்று 19-3-2025 தூத்துக்குடி இரண்டாம் ரயில் கேட் டாஸ்மாக் மதுபான கடை முன் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜக மகளிர் கள் கைது
இது பற்றிய செய்தியாவது
தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை (ED) சோதனைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஊழலை எதிர்த்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜக கட்சி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மார்ச் 17, 2025 அன்று நடத்த திட்டமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்நிலையில், அண்ணாமலை மற்றும் பாஜக தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்,
மேலும் போராட்டத்தில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம்!!!
பாஜக, திமுக அரசின் இந்த ஊழலை கண்டித்து, அடுத்த வாரத்தில் 5,000 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்கள் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில்...
தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடை கதவில் தீடீர் என்று பாஜக மகளிர் அணி பெண்கள் சிலர் ....
"அப்பா அழைக்கிறார் இளம் விதவைகளை உருவாக்கிட
தமிழக டாஸ்மாக் மூலம் செயல்படுத்தப்படும் இளம் விதவைகளை உருவாக்குவோம் திட்டத்தில் இணைந்திட டாஸ்மாக் நோக்கி திரண்டு வாரீர்
"டாஸ்மாக் 🍷 முறைகேட்டில் முதல்வர் ஸ்டாலின் "
என்று எழுதி இருந்த சுவரொட்டி களை ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கைது செய்து செய்தனர்.
.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக