Tamil Nadu updates 19-3-2025
news by Arunan journalist
தூத்துக்குடி பேருந்தில் பயணித்த பெண்ணின் மணிபர்ஸ் திருட்டு –
பெண் திருடி பற்றி பொது மக்கள் தகவல் வழங்க வேண்டுகோள்
தூத்துக்குடி: தூத்துக்குடி நகரத்தில் பயணித்த பெண்ணின் மணிபர்ஸ் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.
பேருந்தில் சிசிடிவி யில் காவல்துறை செக் செய்த போது ...
மஞ்சள் நிற சேலை மற்றும் மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்திருந்த ஒரு பெண், ஓட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் செல்லும் ராஜா பேருந்தில் ஏ பி சி காலேஜ் பேருந்து நிறுத்தத்தில் ஏறி, அரவிந்த் கண் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.
இந்த பயணத்தின் போது, ஒரு பெண்னின் மணிபர்ஸ் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதில் ₹ 3500 பணமும் பேங்க் ஏடிஎம் கார்டு வைத்திருந்தாராம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழ்காணும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மத்திய பாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
📞 தகவல் வழங்க வேண்டிய எண்கள்:
📌 9498193727
📌 9498101883
🔹 காவல் ஆய்வாளர், மத்திய பாகம் காவல் நிலையம், தூத்துக்குடி
தூத்துக்குடி லீக்ஸ்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக