செவ்வாய், 18 மார்ச், 2025

தூத்துக்குடி அழகேசபுரத்தில் பைப் லைன் அனைத்தும் கொடுத்து விட்டு? பின் சாலை வசதி செய்து கொடுங்கள்– தெருமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பு

தூத்துக்குடி அழகேசபுரத்தில் பைப் லைன் அனைத்தும் கொடுத்து விட்டு? பின் சாலை வசதி செய்து கொடுங்கள்– தெருமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்



தூத்துக்குடி, மா. 18: தூத்துக்குடி மாநகராட்சி கண்காணிப்பில், அழகேசபுரம் 2-வது தெருவில் புதிய புளு கலர் பைப் லைன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், வீடுகளுக்கு முறையாக இணைப்புகள் வழங்கப்படாமல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


வீடியோ பார்க்க...

மேலும், பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு முன்பு, அனைத்து வீடுகளுக்கும் பைப் இணைப்புகள் வழங்கி விட வேண்டும் எனவும், இல்லையெனில் மீண்டும் மீண்டும் சாலை உடைக்கப்படும் நிலை ஏற்படும் எனவும் தெருமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

????????....

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாநகராட்சி மேயர் ஜெகன் அப்பகுதிக்கு நேரில் வருகை தந்து நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக