டாஸ்மாக் மதுபானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாஸ்மாக் மதுபானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

நாளை பிப்.17 முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலவரையின்றி மூடல்..!!

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி photo news by Arunan journalist 

தூத்துக்குடி பெ16

தமிழகத்தில் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு கோடிக்கணக்கான வருவாயை ஈட்டித் தரும் Tamil Nadu State Marketing Corporation (டாஸ்மாக்) ஊழியர்கள், தங்களது நீண்டகால வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

thoothukudileaks


பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த டாஸ்மாக் ஊழியர்கள், தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.சி., பாட்டாளி தொழிற்சங்கங்கள் மற்றும் Viduthalai Chiruthaigal Katchi உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்தியும், தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், வரும் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு நடத்த தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 16ஆம் தேதி இரவு 10 மணிக்கு கடைகள் மூடப்பட்டதும், சாவிகளை நிர்வாகத்திடம் ஒப்படைத்து, 17ஆம் தேதி முதல் பணிக்குச் செல்லாமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது 4,749 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 23,000 ஊழியர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

“நீண்ட ஆண்டுகளாக உழைத்தும் எங்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வராதது வேதனையாக உள்ளது. 

14 நாட்களாக போராடியும் எங்களது கோரிக்கைகள் கவனிக்கப்படாததால், வேறு வழியின்றி பணிப் புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்."

thoothukudileaks


மேலும், அடையாளப் போராட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் காலி பாட்டில்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், அரசு-தொழிற்சங்கங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

திங்கள், 1 டிசம்பர், 2025

மதுபிரியர்கள் மகிழ்ச்சி இன்று முதல் தூத்துக்குடியில் மது காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் தொடக்கம் – மதுக்கடைகளில் புதிய முயற்சி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, டிசம்பர் 2:

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலியாப் பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் (Empty Bottle Buy Back Scheme) இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாநில அரசின் அறிவுறுத்தலின்படி செயல்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், மதுபாட்டில்களின் விலையுடன் கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் முறையை உட்கொள்கிறது.

thoothukudileaks


மதுபானம் வாங்கிய பயனாளர்கள், காலியான பாட்டில்களை மீண்டும் அதே மதுக்கடைக்குத் திருப்பிக் கொடுக்கும் போது, முன்பு வசூலிக்கப்பட்ட கூடுதல் ரூ.10 திருப்பி வழங்கப்படும் என மதுக்கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

thoothukudileaks

thoothukudileaks
பத்து ருபாய் பாட்டல் விலை பில் 


இந்த திட்டம் மூலம் வீதி, மைதானம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பரவலாகக் காணப்படும் மதுபாட்டில் குப்பைகளை குறைப்பதே அரசின் நோக்கமாகும். மதுக்கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலமும் திரும்பப் பெறும் நடைமுறை அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி மூலம் சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்கவும், பாட்டில் குப்பைகள் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.






புதன், 19 மார்ச், 2025

தூத்துக்குடி பரபரப்பு இரண்டாம் ரயில் கேட் டாஸ்மாக் மதுபான கடை முன் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜக மகளிர் கள் கைது

Tamil Nadu updates 19-3-2025

 news by Arunan journalist 

தூத்துக்குடி பரபரப்பு

இன்று 19-3-2025 தூத்துக்குடி இரண்டாம் ரயில் கேட்  டாஸ்மாக் மதுபான கடை முன் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜக மகளிர் கள் கைது 



இது பற்றிய செய்தியாவது 


தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை (ED) சோதனைகளில் தெரியவந்துள்ளது. 


 இந்த ஊழலை எதிர்த்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜக கட்சி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மார்ச் 17, 2025 அன்று நடத்த திட்டமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 



இந்நிலையில், அண்ணாமலை மற்றும் பாஜக தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்,


 மேலும் போராட்டத்தில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். 

போராட்டம்!!!

 பாஜக, திமுக அரசின் இந்த ஊழலை கண்டித்து, அடுத்த வாரத்தில் 5,000 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. 


தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் டாஸ்மாக் கடையில்    முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்கள் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 



இந்நிலையில்...

தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடை கதவில் தீடீர் என்று பாஜக மகளிர் அணி பெண்கள் சிலர் ....


"அப்பா அழைக்கிறார் இளம் விதவைகளை உருவாக்கிட


தமிழக டாஸ்மாக் மூலம் செயல்படுத்தப்படும் இளம் விதவைகளை உருவாக்குவோம் திட்டத்தில் இணைந்திட டாஸ்மாக் நோக்கி திரண்டு வாரீர்

"டாஸ்மாக் 🍷 முறைகேட்டில் முதல்வர் ஸ்டாலின் "


என்று எழுதி இருந்த சுவரொட்டி களை ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கைது செய்து செய்தனர்.





.

புதன், 12 பிப்ரவரி, 2025

தூத்துக்குடி மதுபான கூட உரிமையாளர்கள் போராட்ட அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபான கூடம் உரிமையாளர்கள் போராட்ட அறிவிப்பு

Tamil Nadu updates, photo news by sunmugasuthram Reporter 

தூத்துக்குடி: 2025பெப்ரவரி13 

தமிழக அரசு அனுமதியுடன் செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்கள் தற்போது மிகுந்த நெருக்கடியில் உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட பார்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 



தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் அன்பரசன், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராமநாதன் ஆகியோர் கலால் பிரிவு உதவி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.



மனுவில், "2004ஆம் ஆண்டு முதல் அரசின் அனுமதியுடன் மதுபான கூடங்களை நடத்தி வருகிறோம். 


ஆனால், 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பில் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை. இருந்தும், அரசு விதிப்படி மாதந்தோறும் லட்சக்கணக்கில் வரியூழியம் செலுத்தி வருகிறோம். 


அதேசமயம், டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடைகள் மினிபார் போல செயல்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 


இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளனர்.


மேலும், "அரசு ஒப்பந்தப்படி டெண்டர் முறையில் மதுபான கூடங்கள் செயல்படுகின்றன.


 ஆனால், சிலர் எந்தவொரு விதிமுறைக்கும் உட்படாமல் மதுபான விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம், சட்டப்பூர்வமாக செயல்படும் பார்கடைகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்படியே நீடித்தால், மதுபான கூடங்கள் செயல்பட முடியாத நிலை உருவாகும்" என உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


இதன் காரணமாக, 10ஆம் தேதி முதல் பார்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், வரும் 28ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பார்கள் அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதன், 18 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் டாஸ்மாக் பார்கள் அடைப்பு: மது பிரியர்கள் திண்டாட்டம்

Tamil Nadu updates,18-12-2024

Photo news by

 Arunan journalist 

தூத்துக்குடியில் டாஸ்மாக் பார்கள் அடைப்பு: மது பிரியர்கள் திண்டாட்டம்



இது பற்றிய செய்தியாவது 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களும் இன்று (18.12.2024) அடைக்கப்பட்டுள்ளன. 



பார் உரிமையாளர்கள், காவல் துறையினர் தங்களுக்கு அநீதியாக அழுத்தம் கொடுக்கிறார்கள் என்ற காரணத்தால் போராட்டமாக பார்களை திறக்காமல் வைத்துள்ளனர்.


போராட்டத்தின் பின்னணி:


தமிழக அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் மது விற்பனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன், 

தனிநபர்கள் பார் நடத்த அனுமதி தந்துள்ளது.

பார் உரிமையாளர்களுக்கு விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதில்,


கழிவறை வசதி,


சுகாதாரமான சூழல்,


தரமான உணவு,


பிளாஸ்டிக் தவிர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளன.



ஆனால், பல பார்கள் தமிழக அரசு விதிமுறைகளை மீறியும் அங்கு மதுபாட்டில்கள் விற்பனை யும் அசுத்தமான நிலையில் செயல்படுவதால் போலீசார் திடீர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.


மதுபான விவகாரத்தில் விதிமுறைகள் மீறல்:


டாஸ்மாக் கடைகள் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.



ஆனால், சில பார்கள் முறைகேடாக அதிகாலை முதல் நள்ளிரவு வரை செயல்படுவதால் இது காவல்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது.



தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சட்டத்திற்கும் நேரத்திற்கும் மாறாக செயல்படும் பார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


பார்களின் எதிர்ப்பு:


பார்களால் விதிமுறைகளை மீறியதற்கு தொடர்ச்சியான போலீஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், பார் உரிமையாளர்கள் இது தங்களை அடக்குவதற்கான நடவடிக்கை என குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.


தற்போது, பார்களை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலம் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

தலைமறைவாக ...?

இன்று பார் அடைப்பு நடத்தி வரும் வேளையில்...

 பார் உரிமையாளர்கள் காவல்துறைக்கு கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்களாம் 



வெள்ளி, 20 செப்டம்பர், 2024

டாஸ்மாக் ல குடிப்பவனுக்கு சரக்கு இல்ல ஊதியமில்ல தமிழக அரசே வெள்ளை அறிக்கை வெளியீடு சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் டாஸ்மாக் ஊழியர்கள் பொதுமக்கள் இடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகம்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

20-9-2024 photo news [21/9,2024 11:23 AM]

 அருணன் செய்தியாளர்: 


 டாஸ்மாக் ல குடிப்பவனுக்கு தரமான சரக்கு இல்ல டாஸ்மாக்கில் பணி செய்யும் எங்களுக்கு நியாயமான ஊதியமில்ல ?????

 தமிழக அரசே வெள்ளை அறிக்கை வெளியீடு என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சிஐடியூ  சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 21-9-2024 காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் டாஸ்மாக் ஊழியர்கள் பொதுமக்கள் இடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது 




"மதுவிலக்கு கொள்கையில் தள்ளாட்டம்!

விற்பவனுக்கு நியாயமான ஊதியமில்லை!

குடிப்பவனுக்கு தரமான சரக்குமில்லை!!"


கடன் வாங்கியும் டாஸ்மாக் நஷ்டமாம்!

தமிழக அரசே! வெள்ளை அறிக்கை வெளியிடு!"



தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் நுழைவு வாயிலில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் பின்பு பேருந்து நிலையம் உள்ளே பஸ் பயணிகள்  இடம் துண்டு பிரசுரங்கள் வழங்க பொதுமக்கள் இடம் பரபரப்பு ஏற்பட்டது 

இந்நிகழ்ச்சியில் தலைவர் முருகன், தோழர் ரசூல், ராஜேஷ், பிச்சையா, மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.




அன்பான பெரியோர்களே! தாய்மார்களே! வணக்கம்.

டாஸ்மாக் நிறுவனம் துவக்கத்தில் தனியார் மது உற்பத்தி நிறுவனங்களிலிருந்து மது வகைகளை கொள்முதல் செய்து,

ஓட்டல்கள், கூட்டுறவு அமைப்புகள், நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும் தனியார் மதுக்கடைகளுக்கு மொத்த விற்பனை

மட்டுமே செய்து வந்தது.


 "தனியார் மதுக்கடைகளில் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் கள்ள/ போலியான மற்றும்

ஆயத்தீர்வை செலுத்தாத மதுவகைகள் விற்கப்பட்டன.


 மேலும் அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் அதிக விலையில்

மது வகைகள் விற்பனை செய்யப்பட்டன.


 இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் பெருவாரியான

கடைகளுக்கு விண்ணப்பிக்காமல் கடைகளை காலியாக வைத்திருக்கும் நோக்கத்தாடு சிண்டிகேட் ஏற்படுத்தியும் சில்லரை

விற்பனைக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தியும் அரசுக்கு வருவாய் இழப்பை உண்டாக்கியதின் விளைவாக சில்லரை

விற்பனையில் தனியாரை முழுவதுமாக அகற்றிட அவசர சட்டத்தை கொண்டு வந்து சில்லரை விற்பனை செய்யும்

பிரத்தியேக உரிமையை தனியாரிடமிருந்து எடுத்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு மாநிலம் முழுவதும்

7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன."



கடைகள் எண்ணிக்கை!!!

தற்போதைய நிலவரப்படி, டாஸ்மாக் நிறுவனம் 4829 மதுபான சில்லரை விற்பனை கடைகள், 238 எலைட் மற்றும்

மால் ஷாப் கடைகள் என 5067 மது விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. 



இது தவிர தனியார் மது வகைகளை

விற்பனை செய்ய 2000க்கும் மேற்பட்ட எப்.எல்-2, எப்.எல்-3 மனமகிழ் மன்றங்கள், ஒட்டல்களில் மது விற்பனை செய்ய

உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன

தனியார் 🍷 மது விற்பனை???

2919 தனியார் மதுக்கூடங்களை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




தனியார் ஆதிக்கம் :

மது விற்பனையில் தனியார் ஆதிக்கத்தால் போலி மது வகைகள் விற்பனையும், அரசுக்கு வருவாய் இழப்பும்

ஏற்பட்டதை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் மது கொள்முதல், மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் செய்யும் தனி

உரிமம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.



 "இதன்படி மதுவினை தனியார் யாரும் விற்பனை செய்ய முடியாது

என்பதாகும்."


 இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்து வந்தது.


தள்ளாடிய தமிழக அரசு!!!

காலப்போக்கில் அரசு இந்த நிலைபாட்டிலிருந்து தள்ளாடி.., ?

தனியார் ஆதாயம் அடையும் வகையில் மது விற்பனையில்

நுழைய அனுமதித்தது.


 தற்போது ...

தனியார் ஆக்டோபஸ் போல டாஸ்மாக் நிறுவனத்தை விழுங்கி கொண்டிருக்கிறார்கள்.



இதில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் துணை போகின்றனர்.

டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்யும் மது வகைகளை உற்பத்தி செய்வது தனியார் நிறுவனங்கள்தான். டாஸ்மாக்

கடைகள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் தான்.


 கிடங்குகளிலிருந்து கடைகளுக்கு சரக்குகளை

கொண்டு செல்லும் லாரிகள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமானது தான். 




"டாஸ்மாக் கடைகளோடு இணைந்த

மதுக்கூடங்களும் தனியார் தான். "


ஆக தமிழக அரசுக்கு சரக்கும் சொந்தமில்லை, கடையும் சொந்தமில்லை, லாரிகளும்

சொந்தமில்லை. பார்களும் சொந்தமில்லை. சொந்தமில்லாத சரக்கை விற்பனை செய்வதிலேயே அரசுக்கு ஆண்டுக்கு

ரூ. 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்றால் அனைத்தும் சொந்தமாக இருந்தால் எவ்வளவு கோடி

ரூபாய் கூடுதலாக கிடைக்கும். 


இது மெத்த படித்த அறிவாளிகளை கொண்ட டாஸ்மாக் இயக்குனர் குழுமத்திற்கு தெரிந்தும்

அரசுக்கு வர வேண்டிய வருவாயை மடைமாற்றம் செய்து தனியாரை கொழுக்க வைத்துள்ளனர்.




 மக்கள் வரிப்பணத்தில்

சம்பளம் வாங்கி கொண்டு தனியாருக்கு ஆதரவாக செயல்படுவது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.



நட்டம் - கடன் (அடமானம்):

ஆம். டாஸ்மாக் நட்டத்தில் இயங்குவதாக டாஸ்மாக் நிறுவனம் தனது லாப-நட்ட கணக்கில் காட்டுகிறது. ஆமாம்!

திரட்டப்பட்ட இழப்பாக ரூ. 136 கோடி நட்டம், கிடங்குகளில் உள்ள சரக்குகள் மற்றும் கடைகளில் உள்ள சரக்குகள்

வங்கிகளில் அடமானம் ரூ. 708 கோடி மற்றும் குறுகிய கால கடனாக ரூ.1,110 கோடி என 2 ஆயிரம் கோடி ரூபாய் கடனில்

தான் டாஸ்மாக் நிர்வாகத்தை அரசு நடத்தி வருகிறது. கடன் வாங்கித்தான் டாஸ்மாக்கை நடத்த வேண்டுமா? 


கடன்

வாங்கித்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு மது விற்பனை செய்ய வேண்டுமா? அரசு நிறுவனம் இந்தளவுக்கு கடன் வாங்கும்

[21/9, 11:29 AM] அருணன் செய்தியாளர்: 


அளவுக்கு சீரழிக்கப்பட்டதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள்

ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தான். 


இந்த நிறுவனத்தை வழிநடத்தும்

இயக்குனர் குழுமத்தில் உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறையின்

செயலாளராக இருப்பவர் தான் தலைவர். குழு உறுப்பினர்களாக நிதித்துறை

செயலாளர், வணிக வரி (ம) பத்திர பதிவுத்துறை செயலாளர். மதுவிலக்கு

ஆணையர், மேலாண்மை இயக்குனர் என இந்திய ஆட்சிப்பணியில்

உள்ளவர்கள் தான். ஆக அரசின் உயர்மட்ட அதிகார அமைப்பில்

உள்ளவர்களின் பொறுப்பில் உள்ள டாஸ்மாக் நிறுவனம் அரசு நிறுவனமாக

செயல்படவில்லை என்பதே கடந்த 20 ஆண்டு கால அனுபவம். 



"யார் ஆட்சிக்கு வருகிறார்களோ, அவர்களுக்கேற்ப

டாஸ்மாக் நிர்வாகம் தனது விசுவாசத்தை காட்டும். ஆட்சியாளர்களை குளிர்விக்கும் வேலையை செய்யும். 


கோடிக்கணக்கில் பணத்தையும் கொட்டும்.

வருவாய்:

தமிழ்நாடு அரசுக்கு 2023-24 நிதியாண்டில் மது விற்பனையின் மூலம் ஆயத்தீர்வை வரியாக ரூ.10,774

கோடியும், மதிப்புக்கூட்டு வரியாக ரூ. 35,081 கோடியும் என வரி வருவாயாக ரூ.45,855 கோடி கிடைத்திருக்கிறது.



இது தவிர பீர் ஏற்றுமதி, வெளிநாட்டு மதுவகைகள் இறக்குமதி, உரிமங்கள், கட்டணங்கள், மதுக்கூட மாதாந்திர

தொகை, காலி அட்டைப் பெட்டி விற்பனை, காலி மது பாட்டில் விற்பனை, அபராதம், அபராதத்துக்காக வட்டி என

பல வகைகளில் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.


 இவைகள் கணக்கில் காட்டப்படுவதில்லை.

இது தவிர பார்களில் விற்கப்படும் திண்பண்டங்கள், இறைச்சி, வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் டம்பளர், கள்ளச்சந்தை

விற்பனை, கூடுதல் விலை விற்பனை என பல்வேறு வகைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் வராத கருப்பு

பணமாக புழக்கத்தில் உள்ளன.

அதிகாரிகள் நியமனம் :

40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு நிரந்தரமான அதிகாரிகள் இல்லை. ஒன்று

வருவாய்த் துறையை சேர்ந்த அயல்துறை அதிகாரிகள் மற்றொன்று தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான

அதிகாரிகள். 


இந்த அயல்துறை அதிகாரிகள் ஓராண்டு, இராண்டு காலம் மட்டுமே டாஸ்மாக் உயர் பதவிகளில்

இருப்பார்கள். அதன்பிறகு வேறு துறைக்கு மாறி சென்று விடுவார்கள்.


 அவர்கள் இருக்கும் காலத்தில் நிறுவனத்தின்

வளர்ச்சி பற்றியோ, மது வகைகளின் தரம் பற்றியோ, வேலை செய்யும் ஊழியர்களின் நலனைப்பற்றியோ

கவலைப்படாதவர்கள்.

எம்.பி.ஏ. பட்டதாரிகளை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட மேலாளர்களர்களை 2006ல் திமுக

ஆட்சிக்கு வந்த போது, மிகவும் பொறுப்புள்ள பதவியில் தற்காலிக அதிகாரிகள் இருக்கக்கூடாது என்று எம்.பி.ஏ

பட்டதாரிகளை வெளியேற்றி, துணை ஆட்சியர்களை மாவட்ட மேலாளர்களாக நியமனம் செய்தது.

கோடிஸ்வரர்கள் ஆக மாறியுள்ளன 

 2011ல் ஆட்சிக்கு

வந்த அதிமுக இவர்களை மீண்டும் மாவட்ட மேலாளர்களாக நியமனம் செய்தது.


 தற்போதைய திமுக ஆட்சியிலும்

எம்.பி.ஏ தற்கலிக ஒப்பந்த மாவட்ட மேலாளர்கள் தொடர்கின்றனர்.


 துணை ஆட்சியர் தவறு செய்தால் துறை

ரீதியிலான நடவடிக்கைக்கு உட்படுவார். 


ஆனால் இந்த எம்.பி.ஏ மாவட்ட மேலாளர்கள் சட்ட விரோத மதுக்கூடங்கள்,

கடை ஆய்வு. டிரான்ஸ்பர், போஸ்டிங் முறைகேடுகளில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை

எடுக்கப்படுவதில்லை. அதிகளவில் நடக்கின்றன. ஒவ்வொரு எம்.பி.ஏ மாவட்ட அதிகாரிகளும் மேலாளர்களும்

மேல்மட்ட அதிகாரிகளுடனும், ஆட்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட எம்.பி.ஏ

அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு துறையினரால் பிடிபட்டுள்ளனர்.

நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? அப்ப, டாஸ்மாக்கில் அதிகாரியாக வந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்! அதும்

ஒரே ஆண்டிலேயே.இந்த அரிய வாய்ப்பை தமிழ்நாடு ஏற்படுத்தித் தந்துள்ளது.


இதுவரை 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக்

அதிகாரிகள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் மாட்டியும் சிறைக்குச் சென்றும் கொஞ்சமும் பயமுமின்றி

அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.





தொழிலாளர் சட்டங்கள் :

டாஸ்மாக் நிறுவனத்திற்கு மாநிலம் முழுவதும் 43 கிடங்குகள், 38

மாவட்ட மேலாளர் அலுவலகங்கள், 5 மண்டல அலுவலகங்கள், ஒரு

தலைமை அலுவலகம் என 87 நிர்வாக அலுவலகங்களில் வெறும்

563 பேர் மட்டுமே நிரந்தர ஊழியர்கள். மற்ற 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட

ஊழியர்கள் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களை வைத்துத்தான் டாஸ்மாக்

செயல்பட்டு வருகிறது. 


டாஸ்மாக் நிறுவனத்திற்கு கடைகள் மற்றும்

[21/9, 11:31 AM] அருணன் செய்தியாளர்: தூத்துக்குடி லீக்ஸ் 


நிறுவனங்கள் சட்டம், தேசிய-பண்டிகை விடுமுறை சட்டம், குறைந்தபட்ச

ஊதிய சட்டம், இ.எஸ்.ஐ. சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் சட்டங்கள்

பொருந்தாது என அரசு விதிவிலக்கு அளித்துள்ளதாக கூறி வேலை செய்யும்


கொத்தடிமை கள்!!!

ஊழியர்கள் சட்ட பாதுகாப்பற்றவர்களாக நவீன கொத்தடிமைகளாக

நடத்தப்படுகின்றனர்


. இதற்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றங்கள், உயர்நீதி

மன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளை மதிக்காமல் மேல்முறையீடு என்ற

பெயரில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


வீடியோ பார்க்க...

 முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசு, தான் இயற்றிய சட்டங்களை காலில் போட்டு மிதிக்கிறது.



"டாஸ்மாக் ஊழியர்களுக்கு சட்டப்படியாக வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்துக்கும் நிர்வாகம் வழங்கும்

ஊதியத்துக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டுமென்று சென்னை தொழிலாளர் நீதிமன்றங்கள் பிறப்பித்த

உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத தனி சிறப்பு வாய்ந்த சட்டமான பணி நிரந்தர தகுதி வழங்கல் சட்டப்படி

2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த ஊழியர்களை நிரந்தரம் செய்து மதுரை தொழிலாளர் உதவி ஆணையர்

பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு.

அரசு துறைகள் மற்றும் அரசு

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்திய

நிலையில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஓய்வு வயது உயர்த்த மறுப்பது, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து

மேல்முறையீடு செய்வது ஊழியர்கள் மீதான தற்காலிக பணிநீக்க ஒழுங்கு நடவடிக்கையின் போது பிழைப்பூதியம்

வழங்க மறுப்பது என  ஊழியர்களுக்கு சாதகமான பல்வேறு உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு

செய்வதையே டாஸ்மாக் நிர்வாகமும் வாடிக்கையாகவே கொண்டுள்ளது."



முந்தைய திமுக அரசு, தொழிலாளர்களுக்கு சாதகமாக வரும் தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய

மாட்டோம் என்ற நிலைபாட்டை எடுத்திருந்தது.


 ஆனால் தற்போது ஆளும் திமுக அரசு தொழிலாளருக்கு சாதகமான

தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வது முந்தைய திமுக அரசின் நிலைபாட்டிற்கு எதிரனதாகும்.

படிப்படியாக மதுவிலக்கு :


2021 சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சியில் உள்ள திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு

கொண்டு வருவோம் என்றார்கள். 


500 கடைகளை மூடினார்கள். 

அதே வேளையில் 1000 தனியார் மது

கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.


 ஒவ்வொரு நாளும் புதுப்புது 

பெயரில் மது

அறிமுகப்படுத்தியுள்ளனர். 

ஜல தோஷம்!!! சன்மானம்?

டாஸ்மாக் கடைகளில் விற்பனை சரிந்தால் நமக்கெல்லாம் சந்தோசம் தான். ஆனால்

டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ஜலதோசம்தான்.



 முந்தைய ஆண்டு விற்பனையை அடிப்படையாகக் கொண்டு இந்த

ஆண்டும் அதே விற்பனையை செய்ய வேண்டும்.


 விற்பனை குறைந்தாலும் செயற்கையாக சரிவை ஈடுகட்ட

வேண்டுமாம். 

துறை அமைச்சரோ புதிதாக வரும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை மதுப் பழக்கத்திற்கு

அடிமையாகாமல் பார்த்துக்கொள்ளும் ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று கூறுகிறார்.


 இதில் தான்

மதுவிலக்கு கொள்கையில் அரசின் தள்ளாட்டம் தெளிவாகத் தெரிகிறது.

பாதுகாப்பற்ற நிலையில் ஊழியர்கள்:

டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, காட்டுப்பகுதி, வயல்வெளி, சுடுகாட்டுப் பகுதிகளில்

தான் உள்ளன.

சுடுகாடு சமுக விரோதிகள்!!!

 இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் ஊழியர்களை தாக்குவது, கொள்ளையடிப்பது போன்ற

சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.


 காஞ்சிபுரத்தில் ஒரு ஊழியர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார்.

சிவகங்கையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு பலியானார். ஒவ்வொரு நாளும் உயிருக்கு பயந்து வேலை செய்ய

வேண்டிய நிலையில் ஊழியர்கள் உள்ளனர்.


வெளிப்படைத்

தன்மை?

டாஸ்மாக் நிறுவனம் அரசு நிறுவனமா? அரசு நிறுவனம் என்ற பெயரில்

அதிகாரிகள், தனியாரின் பாக்கெட்டுகளை நிரப்பும் நிறுவனமா? என்ற

அளவில் தான் அதன் நிர்வாக செயல்பாடுகள் உள்ளன. 

ரகசியம்!!!!!

ஒரு குவாட்டர்

பிராந்தி பாட்டிலின் அடக்கவிலை, விற்பனை விலை, லாபம் எவ்வளவு

என்று கேட்டால் அது வணிக ரகசியமாம்.


 தொழில் போட்டியை ஏற்படுத்தி

விடுமாம். அதுவும் தகவல் ஆணையம் உத்தரவு போட்டாலும், உயர்நீதி

மன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் மது பாட்டிலில் உண்மையான

விலையை சொல்லமாட்டார்களாம்.

[21/9, 11:33 AM] அருணன் செய்தியாளர்: தூத்துக்குடி லீக்ஸ் 


இந்த அரசு வந்த பிறகு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் எத்தனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கேட்டால்?

அதற்கும் தகவல்கள் தரமாட்டார்களாம். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்?


தரமில்லாத சரக்குகள் :?!?!

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளின் தரம் குறித்து சந்தேகங்கள் எழுகின்றன.


 ஏனென்றால்

மது உற்பத்தி செய்வது தனியார் நிறுவனங்கள். தனியார் என்றாலே லாபம் பார்ப்பார்களே தவிர தரத்தைப் பற்றி

கவலைப்பட மாட்டார்கள். 


இந்த மது நிறுவனங்களில் அரசு தரப்பில் ஒரு அலுவலர் இருக்கிறாராம்.


 அவர் உற்பத்தியாகும்

மதுவினை தடய அறிவியல் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்புவாராம்.



 அங்கிருந்து வரும் சான்றளிப்பு அடிப்படையில்

கிடங்குகளுக்கு அனுப்பி வைப்பார்கள். 


பல மது வகைகள் கடைகளுக்கு அனுப்பி விற்பனையில் உள்ள நிலையில்

டாஸ்மாக் நிர்வாகம் கடையிலிருந்து கிடங்கிற்கு திருப்பி அனுப்ப சொல்கிறது என்றால் குடிகாரர்கள் தானே கொடுப்பதை

குடிக்க போகிறார்கள் என்ற ஆணவப்போக்குத்தான் ஒழிய, வியாபார நெறிமுறை இல்லை. 40 ஆண்டுகளுக்கு மேலாக

மது கொள்முதல் செய்து விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனத்திற்கென்று தரப் பரிசோதனைக் கூடம் இல்லை என்றால்

குடிப்பவர்களின் உடல் நலம் குறித்து எந்தளவுக்கு அரசு மெத்தனமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.


டிரான்ஸ்பர் - போஸ்டிங் முறைகேடுகள் :

டாஸ்மாக் நிறுவனத்தில் போஸ்டிங், டிரான்ஸ்பருக்கான வழிகாட்டும் கொள்கை திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை.


இதனால் காசு கொடுத்தால் காரியம் சாதிக்கலாம் என்ற மனநிலை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


டாஸ்மாக்

கடைகள் இரண்டு பிரிவுகளாக உள்ளன. 


ஒன்று அதிக விற்பனையாகும் கடைகள். மற்றொன்று விற்பனை குறைவான

கடைகள். 


இதில் அதிக விற்பனையாகும் கடைகளில் பணிபுரிய அதிக போட்டிகள். இதற்காக சில லட்சங்களை அள்ளிக்

கொடுத்து டிரான்ஸ்பர் ஆகிறார்கள்.


 இருக்கும் கடையில் டிரான்ஸ்பர் ஆகாமல் இருக்க லட்சங்களை அள்ளி தெளிக்க

வேண்டும். இதை புரோக்கர்கள் - அதிகாரிகள் கூட்டணி மிக தைரியமாக செய்து கொண்டிருக்கிறது.

காலி பாட்டில் :

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை

செய்யப்படுகின்றன. 


இதில் உற்பத்தி செலவு, புதிய பாட்டில் மதிப்பு உள்ளிட்ட அடக்க விலையோடு, வரிகள் மற்றும்

லாபமும் அடங்கும். ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் ஒரு மது பாட்டிலை வாங்கும் போது அதிகபட்ச விலையோடு,கூடுதலாக

ரூ.10 சேர்த்து வாங்குகிறது. 


மது அருந்திய நபர் அந்த காலி பாட்டிலை கொண்டு வந்து தந்தால் ரூ.10 திருப்பி தரப்படுமாம்.


திரும்பி வராத பாட்டில்கள் மூலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது.

போதை மீட்பு மையங்கள்:

தமிழ்நாடு அரசு மதுப்பழக்கம் - போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை

வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் 20 போதை மீட்பு மையங்கள் நடத்துகிறதாம்.


 விழிப்புணர்வு பணிகளுக்காக

5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாம். டாஸ்மாக் நிறுவனமே தனது சமூக பாதுகாப்பு பொறுப்பு நிதியை பல

ஆண்டுகளாக செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து வருகிறது. உண்மையிலேயே இந்த அரசுக்கு குடிப்பவர்கள் மீது

அக்கறை இருக்கும் என்றால் ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் மது போதைக்கு அடிமையானவர்களை அடையாளம்

கண்டு அவரது குடும்பத்தினரின் உதவியோடு மையங்களில் சேர்க்கும் வேலையை செய்ய வேண்டும்.


 இதற்கான

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தியிருக்க முடியாதா?

ஆக வெறும் கையில் முழம் போடுவது போல, தமிழ்நாடு அரசு அடுத்தவர் (தனியார்) மது பாட்டில்களை விற்பனை

செய்தே பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் பார்க்கிறது என்றால், டாஸ்மாக்கை முறைப்படுத்தி, தனியார் ஆதிக்கத்தை

தடுத்து நிறுத்தினால் கூடுதலாக பல ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். 


இந்த கூடுதல் வருவாயை சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.



தொழிற்சங்கம் என்பது கூலி, போனசுக்காக மட்டும் போராடிய அமைப்பல்ல. இந்த சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ளதால் மக்கள் மன்றத்திற்கு வருகிறோம்.



அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் 20 ஆண்டு காலமாக வேலை செய்பவர்களுக்கு நியாயமான சம்பளம் தரமாட்டார்களாம்.


பணி நிரந்தரம் செய்யமாட்டார்களாம். குடிப்பவனுக்கு அவன் கொடுக்கும் பணத்திற்கேற்ற தரமான சரக்கு தரமாட்டார்களாம். 


அடக்க விலை எவ்வளவு என்றால் சொல்லமாட்டார்களாம். அரசாங்க நிறுவனத்திற்கு இணையாக மது விற்பனையில் தனியாரைஅனுமதிப்பார்களாம். 


அரசுக்கு வர வேண்டிய வருவாயை மடைமாற்றம் செய்வார்களாம். 


மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கடைகளைமூடமாட்டார்களாம்.

தமிழக அரசே! டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்திலும், மதுபான சரக்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கியும் நடத்துகிறதாம்!


டாஸ்மாக் கொள்முதல், விற்பனை, லாபம், வரி வருவாய் இதர வகையில் வரும் வருவாய் குறித்து வெள்ளை அறிக்கை

வெளியிடு! டாஸ்மாக் நிறுவனத்தை வெளிப்படைத் தன்மையுடன் நடத்திடு!

வெளியீடு : டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) | 27. மசூதி தெரு, சேப்பாக்கம்,

 - 600 005.


இவ்வாறு தெரிவித்துள்ளார்கள் 

TASMAC

BAR


சனி, 31 ஆகஸ்ட், 2024

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் மூலம் மது விற்பனை ? ‌மது பாட்டில்களை வாங்கிய பிறகு, அதில் உள்ள கியூ-ஆர் கோடினை செல்போனில் ஸ்கேன் செய்து பார்த்தால் முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.!!!

தமிழகம் முழுவதும் 2024 நவம்பர் மாதம் முதல் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் மூலம் மது விற்பனை ? ‌

மது பாட்டில்களை வாங்கிய பிறகு, அதில் உள்ள கியூ-ஆர் கோடினை செல்போனில் ஸ்கேன் செய்து பார்த்தால் முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.!!!



இப்போதைய செய்தியாவது:-

தமிழகத்தில் மதுப் பிரியர்கள் நன்மதிப்பை பெறும் வகையில், டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை விற்பனை தடுப்பு ?

 மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதை தடுக்கவும், மது பாட்டில்கள் கொண்டுவரப்படும்போது போக்குவரத்தில் ஏற்படும் முறைகேட்டை தவிர்க்கவும், கடைகளில் இருப்பு நிலவரத்தை கண்காணிக்கவும் மது விற்பனையில் டிஜிட்டல் முறை கொண்டுவரப்பட இருக்கிறது.


மது சரக்கு பாட்டிலில் முழு விவரம்!!!

இதன் மூலம், தொழிற்சாலைகளில் மது உற்பத்தியாகி, பாட்டில்களில் அடைக்கப்பட்டு வெளியேறி, குடோன்களின் தங்கி, பின்னர் கடைகளுக்கு வந்து விற்பனையாகி மதுப்பிரியர்களின் கைகளில் சேர்வது வரை, அதாவது உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து தரவுகளையும் கியூ-ஆர் கோடு மூலம் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.



.தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 கடைகளிலும் இந்த டிஜிட்டல் வசதியை கொண்டுவருவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.


 முதற்கட்டமாக, பரிசார்த்த முறையில் கோவை வடக்கு, வடசென்னை ஆகிய இடங்களில் உள்ள 266 டாஸ்மாக் மதுக்கடைகளில் தீபாவளிக்கு பிறகு, வரும் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.


அதாவது, கோவை வடக்கில் உள்ள 166 கடைகளிலும், வடசென்னையில் உள்ள 100 கடைகளிலும் இந்த டிஜிட்டல் நடைமுறை கொண்டுவரப்பட இருக்கிறது.

ரெயில் டெல் ஒப்பந்தம் 

 இந்த கடைகளுக்கு இணையதள வசதி உள்ளிட்டவற்றை செய்துகொடுக்க மத்திய அரசின் ரெயில் டெல் நிறுவனம் ரூ.294 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.


 தற்போது, கோவை வடக்கு, வடசென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இணையதளம் வசதி செய்து கொடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


ஸ்டிக்கர் ?

இனி மது ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மது வகைகள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட உடன், அதில் கியூ ஆர் கோடு அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்படும். 


அதில், பாட்டிலில் மது அடைக்கப்பட்ட நாள், நேரம் டிஜிட்டல் முறையில் ஏற்றப்படும். பிறகு அது சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டது, 


அரசு குடோனுக்கு வந்தது, அங்கிருந்து கடைகளுக்கு சென்றது, பிறகு விற்பனை செய்யப்பட்டது என அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும்

ரசீது வழங்கும் முறை கட்டாயப்படுத்தப்படும்!

.மதுப்பிரியர்கள் இந்த மது பாட்டில்களை வாங்கும்போது அவர்களுக்கு ரசீது வழங்கப்படும்.


 இதனால், அவர்கள் கூடுதல் பணம் கொடுக்க தேவையில்லை. பணத்தையும் ஜிபே மூலம் எளிதாக செலுத்தலாம். 



மது பாட்டில்களை வாங்கிய பிறகு, அதில் உள்ள கியூ-ஆர் கோடினை செல்போனில் ஸ்கேன் செய்து பார்த்தால் முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.

கண்காணிப்பு!?!

அதே நேரத்தில், மதுக்கடைகளில் உள்ள ஊழியர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.


இதுபோன்ற டிஜிட்டல் நடைமுறையால், நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பொங்கல் விழா 

அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையின்போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் மூலம் மது விற்பனை நடைபெறும் என தெரிகிறது.


தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் செய்யப்பட்ட மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு (2023-2024) ரூ.45 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.


சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.123 கோடியும், மாதத்துக்கு ரூ.3,698 கோடியும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.





வியாழன், 20 ஜூன், 2024

பூரண மது விலக்கு உடனே அமல்படுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

 

இறைவனின் திருப்பெயரால்...


மதுவில் தள்ளாடும் தமிழகம் - செத்து மடியும் மனித உயிர்கள். தமிழக அரசு கள்ளச்சாராயத்தை ஒழித்து, பூரண மது விலக்கை உடனே அமல்படுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

இது பற்றிய செய்தியாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்த சுமார் 35 பேர் மரணமடைந்துள்ளனர், 100 க்கும் அதிகமானோர் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றனர், 



சென்ற வருடம் மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவத்திலிருந்து இந்த அரசும் அரசாங்க அதிகாரிகளும் பாடம் படித்துள்ளனரா எனும் கேள்வி எழுகிறது.


தங்கள் உறவுகளை இழந்து விட்டு கதறி அழும் மக்களின் அழுகுரல், கல்நெஞ்சையும் கறைப்பதாக உள்ளது.



 கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் 5 பேர் பெண்கள் என்பது தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது எனும் அச்சத்தை  ஏற்படுத்துகிறது, 


சம்பவம் நடந்ததற்கு பிறகு கூண்டோடு சஸ்பெண்ட் என்பது போதுமான நடவடிகை இல்லை. இந்த விற்பனையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பில் இருந்த அரசாங்க அதிகாரிகள், அரசியல் வாதிகள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும்.


 பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


போதையில் தள்ளாடும் தமிழகத்தை காப்பதற்கு உயர்நிலை குழு ஒன்றை அமைத்து பூரண மதுவிலக்கு மற்றும் அதை கையாள்வதற்கான  செயல்திட்டங்களை அரசு வெளியிட வேண்டும் என ஆளும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.


டாஸ்மாக் விற்பனையால் போதைக்கு அடிமையாகி அதை வாங்கி குடிக்க பணம் இல்லாததால் குறைந்தவிலையில் கிடைக்கும் இது போன்ற கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்


 எனவே டாஸ்மாக்கை நடத்தும் இந்த அரசின் கொள்கையே இது போன்ற உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகிறது.


ஆயிரக்கணக்கானோரை கொல்லும், இளம் விதவைகள் நிறைந்துள்ள மாநிலமாக மாறிவரும் தமிழகத்தை காக்க பூரண மது விலக்கை கொண்டு வரவேண்டும் என தமிழக அரசை 

கேட்டுக்கொள்கிறோம்


இப்படிக்கு,

A. முஜிபுர் ரஹ்மான்,

மாநில பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.



செவ்வாய், 16 ஜனவரி, 2024

நள்ளிரவில் கொள்ளைதூத்துக்குடி பகீர் பரபரப்பு தூத்துக்குடியில் டாஸ்மார்க் கடையை உடைத்து ஒரு லட்சம் பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளையடிப்பு பரபரப்பு

தூத்துக்குடி லீக்ஸ் 17-1-2024

நள்ளிரவில் கொள்ளை பகீர் பரபரப்பு

தூத்துக்குடியில் துணிகரமாக  டாஸ்மார்க்  கடையை உடைத்து ஒரு லட்சம் பணம் மற்றும் மதுபாட்டில்கள் திருடி சென்றுள்ளனர்

தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  



தூத்துக்குடி இரண்டாம்  ரயில்வே கேட் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை மர்ம நபர்கள் நள்ளிரவில் உடைத்து சுமார் ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் மது பாட்டில்களை திருடி சென்றுள்ளார்கள்.



தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட் அருகே உள்ள சத்திரம் தெருவில் அரசு மதுபான கடை இருக்கின்றது.

 இந்த கடையில் பொங்கல் திருநாள் முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைப்பு என்பதால் நேற்று விற்பனை அதிக அளவில் நடந்துள்ளது. 


 நேற்று இரவு 10 மணி அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றுள்ளனர். 



இந்நிலையில் அந்த கடையின் டாஸ்மாக் சூப்பர்வைசர் சோமசுந்தரம் இன்று அதிகாலை கடை பகுதிக்கு சென்று பார்க்கும் போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது


இதை தொடர்ந்து வட பாகம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் வந்து சோதனை நடத்தினர்



இதில் டாஸ்மாக் கடையில் இருந்த பணம் சுமார் ஒரு லட்சம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

 இதை தொடர்ந்து பரபரப்பு உண்டானது.

 இந்த திருட்டு சமபவம் தொடர்பாக காவல்துறையினர் அரசு மதுபான கடையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



 தூத்துக்குடி நகரில் எப்போதும்  மக்கள் கூட்டம் மிகுந்த  பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கொள்ளை போய் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

தூத்துக்குடியில் பிட் நோட்டீஸ் வழங்கி சமக கட்சி யினர் விழிப்புணர்வு மது மற்றும் போதை பொருட்கள் தவிர்த்து ஒழிப்போம் விழிப்புணர்வு பிரச்சாரம்

 thoothukudileaks 12-2-2023

தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர்  மது மற்றும் போதை பொருட்கள் தவிர்த்து ஒழிப்போம் என துண்டு பிரசுரம் வழங்கி  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில் 

இன்று(12-2-2023) காலை 10மணியளவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர்  மது மற்றும் போதை பொருட்கள் தவிர்த்து  ஒழிப்போம் என துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.



 தூத்துக்குடி மத்திய மாவட்டம் செயலாளர்  M. X. வில்சன்  தலைமையில் சமக கட்சியினர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், தூத்துக்குடி தற்காலிக பழைய பேருந்து நிலையம், மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய வீதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது .




இந்த நிகழ்ச்சியில் 

சாமுவேல் 

மாவட்ட விவசாய அணி செயலாளர்

சந்திரா

மாவட்ட மகளிர் அணி செயலாளர்

செல்வம்

மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்

மற்றும்

பாக்கிய ராஜ்

அருள்ராஜ் மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.



வியாழன், 30 ஜூன், 2022

மது போதையில்...தூத்துக்குடி டாஸ்மாக் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் ரூபாய் 80,000/- பணத்தையும் மது பாட்டில்களையும் திருடி தப்பி சென்ற 3 பேர் கைது காவல்துறை அதிரடி

தூத்துக்குடி மாவட்டம்: 30.06.2022 

தூத்துக்குடி டாஸ்மாக் ஊழியரிடம் மது போதையில் தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து டாஸ்மார்க் கடையில் இருந்த ரூ 80ஆயிரம் மற்றும் அங்கிருந்து மது பாட்டில்களையும் ரவுடிகள் அள்ளி சென்றனர். இது தொடர்பாக தூத்துக்குடி காவல்துறை அதிரடியாக தப்பி சென்ற 3 பேர்களை அதிரடியாக இன்று (30-6-2022 )கைது செய்துள்ளது.

மூன்று பேர் கைது

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியில் உள்ள (கடை எண் 1014 7) டாஸ்மாக் மது கடையில் நேற்று (29.06.2922) தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர்களான முத்துராஜ் மகன் மூர்த்தி (21),  லெனின் மகன் சரவணன் (22) மற்றும் தூத்துக்குடி லோகியா நகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் பிரபாகரன் (28) ஆகிய 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது மது போதையில் அவர்கள் அங்கிருந்த மதுபாட்டில்களை உடைத்துள்ளனர்.


இதனையடுத்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளரான தூத்துக்குடி பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் சங்கர் (48) சத்தம் போட்டுள்ளார். 

அரசு மருத்துவமனையில் ரவுடிகளால் தாக்கப்பட்ட டாஸ்மார்க் ஊழியர் சங்கர்


இதனால் ஆத்திரமடைந்த மேற்படி 3 பேரும் சேர்ந்து டாஸ்மாக் கடை விற்பனையாளரான சங்கரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன் டாஸ்மாக் கடையில் இருந்த ரூபாய் 80,000/-  பணத்தையும் மது பாட்டில்களையும் திருடி சென்றுள்ளனர்.


இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரிகளான மூர்த்தி, பிரபாகரன் மற்றும் சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரிகளில் மூர்த்தி மீது ஏற்கனவே தென்பாகம், சிப்காட், தெர்மல்நகர் மற்றும் ஆத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.