சமத்துவ மக்கள் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமத்துவ மக்கள் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 மார்ச், 2024

பாஜக கூட்டணி சரத்குமார் அதிகாரபூர்வ அறிவிப்பு

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂

Photo news by roja arunan

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் கூட்டணியை அமைத்தது சமக


சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு




இதுபற்றிய செய்தியாவது:-


பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் கூட்டணியை அமைத்தது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்திருப்பதாவது:-



வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.



பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் .அரவிந்த் மேனன்

பிப்ரவரி 28 ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில் பாரதிய

ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட

பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.




அதில் ஒரு மித்த கருத்துகள் உடன்பட்டதால்

நேற்று (05.03.2024) மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. L.முருகன் , தேசிய

செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் H.ராஜா அவர்கள், பாஜக

தமிழக பொறுப்பாளர் மற்றும் தேசியச் செயலாளர் அரவிந்த்மேனன்

ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும்

பேசினார்கள்.


இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.



அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள்

மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு பாராளுமன்றத் தேர்தலில்

முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று

உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட,

மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக மாண்புமிகு

நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா

கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன்.



மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்.


நன்றி,

வணக்கம்

உழைப்பவரே உயர்ந்தவர்

என்றும் அன்புடன்

ராச

ரா.சரத்குமார்

நிறுவனத் தலைவர்

எண் : 2, கல்யாணிநகர், கொட்டிவாக்கம், சென்னை - 600 041

No.2, Kalyaninagar, Kottivakkam, Chennai - 600 041.

Phone : 044 - 24511373 Mail : samathuvam2007@gmail.com


இவ்வாறு தெரிவித்துள்ளார்.


வியாழன், 7 டிசம்பர், 2023

நெல்லை வரும் சரத்குமாருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு தூத்துக்குடி சமக ஆலோசனை கூட்டம்

thoothukudileaks 7-12-2023

photo news by

 roja arunan 

நெல்லை வரும் நடிகரும் சமக கட்சி தலைவருமான சரத்குமாருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு  தூத்துக்குடி ச ம க ஆலோசனை கூட்டம் 



நெல்லை பாளையங் கோட்டையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தலைமையில் டிசம்பர் 9 தேதி  பொதுகூட்டம் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு சமக கட்சி தலைவர் சரத்குமாருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு  தூத்துக்குடி ச ம க ஆலோசனை கூட்டம் இன்று 7-12-2023 நடைபெற்றது .


இது பற்றிய செய்தியாவது 


வருகிற 2023 டிசம்பர் 9 சனிக்கிழமை மாலையில் நெல்லையில் மாபெரும் நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.


அதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் சார்பாக சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

 இக் கூட்டத்தில்

 மாநில துணைப் பொதுச் செயலாளர்&

 தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர்

சுந்தர் தலைமையில்,

 டிசம்பர் 9 காலை 09.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படிக்கப்படுகிறது. 



இதுகுறித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

 

1 புரட்சித் திலகம்  சரத்குமார் வரவேற்க தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வருகை தந்து வரவேற்பு  அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது ...


2 மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சி உடைய இணைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது..


இந்த ஆலோசனை கூட்டத்தில்

 தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்

 எம் .எக்ஸ் வில்சன்

தலைமை தாங்கினார்.. 

 மத்திய மாவட்ட பிரதிநிதி

 பவர்S.ராமகிருஷ்ணன்,

 மாவட்ட இளைஞர் அணி செயலாளர்

M. சாமுவேல்,

 ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர்

 அருள்ராஜ், 

ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாளர்

 ரஞ்சித் குமார், 

தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் திலிப்

மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 9 அக்டோபர், 2023

கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

thoothukudileaks 9-10-2023

photo news by arunan journalist

தூத்துக்குடி மாவட்டம் 

கோவில் பட்டி அருகில் கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் 



இது பற்றிய செய்தியாவது:-


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பஞ்சாயத்து கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை எதிரில் இன்று 9-10-2023 காலையில் 11 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.



மாவட்டச்செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்....

,கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, தூத்துக்குடி பாராளுமன்ற பொறுப்பாளர் சதீஷ், தூத்துக்குடி மாநகராட்சி செயலாளர் எம் எஸ் வில்சன்,மாவட்ட அவைத்தலைவர் ராஜகோபால் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,


மேற்கு ஒன்றிய செயலாளர் ஆணிமுத்துராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் பூமி பாலகன், கோவில்பட்டி நகர துணை செயலாளர் வெங்கடேஷ்,நகர அவைத்தலைவர் அய்யம்பெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பட்டா விண்ணப்பித்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது 

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

சமத்துவ மக்கள் கட்சிதூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் ஆய்வு கூட்டம்

 தமிழக முழுவதும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார் ஆணைப்படி..

 மாநில துணை பொது செயலாளர்&

 தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர்

  சுந்தர் தலைமையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

 தொடர்ந்து மாவட்ட வாரியாக ஆய்வு கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..

 தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் சார்பாக செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எம்.எக்ஸ் .வில்சன் தலைமையில் நேற்று 23-4-2023 நடைபெற்றது



ய்வுக் கூட்டத்தில் சுந்தர் ஆய்வு செய்து விளக்க உரையாற்றினார்..

 தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்

 எம்.எக்ஸ் .வில்சன்

 தலைமை தாங்கினார்..

 மாநில இளைஞரணி துணைச் செயலாளர் குருஸ் திவாகர் முன்னிலை வகித்தார்..


கூட்டத்தில் 

மாவட்ட பிரதிநிதி

 பவர் ராமகிருஷ்ணன்

 மாவட்ட இளைஞரணி செயலாளர்

 சாமுவேல் 

மாவட்ட மகளிர் அணி செயலாளர் சந்திரா

 மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாரதி வாசன்

 தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் அருள்ராஜ் 

கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன்

 மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கே பி செல்வா ,ஜான்சன் சர்ச்சில்

 முத்தையாபுரம் பகுதிசெயலாளர் விஜயராஜ்

மாவட்டம் மகளிர் அணிதுணை செயலாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்

 மைக்கேல் ராஜ் 

மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர்

 சரவணகுமார் 

மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்

 திலீப் 

சேர்மராஜ் 

விஜயன்

 சேவியர்

 அன்புமணி

 கருவேலமுத்து 

மூர்த்தி 

மற்றும் நிர்வாகிகள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்...

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

தூத்துக்குடியில்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் தண்ணீர் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் தண்ணீர் பந்தல் இன்று 16-4-2023  திறந்து வைத்து பொதுமக்களுக்கு சர்பத் மோர் தண்ணீர்  வழங்கினார்கள். 


தூத்துக்குடி  கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக,

 வெயிலின் தாக்கத்தால் சிரமப்படும்மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் கோடைகால குளிர்பான

 தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது...

 தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்

 கண்ணன்

  தலைமையில்,

 தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்

 எம் .எக்ஸ். வில்சன்

 அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்...ன்

 மாநில பொதுக்குழு உறுப்பினர்

 ஜான்சன் சர்ச்சில்

மாவட்ட இளைஞரணி செயலாளர்

 சாமுவேல்

 மாவட்ட மகளிர் அணி செயலாளர்

 சந்திரா 

மாவட்டவிவசாய அணி துணை செயலாளர்

 சரவணகுமார்

 கிருஷ்ணராஜபுரம் பகுதி இளைஞரணி செயலாளர்

 கருவேல முத்து

  மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் செல்வம்

 மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்