தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபான கூடம் உரிமையாளர்கள் போராட்ட அறிவிப்பு
Tamil Nadu updates, photo news by sunmugasuthram Reporter
தூத்துக்குடி: 2025பெப்ரவரி13
தமிழக அரசு அனுமதியுடன் செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்கள் தற்போது மிகுந்த நெருக்கடியில் உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட பார்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் அன்பரசன், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராமநாதன் ஆகியோர் கலால் பிரிவு உதவி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
மனுவில், "2004ஆம் ஆண்டு முதல் அரசின் அனுமதியுடன் மதுபான கூடங்களை நடத்தி வருகிறோம்.
ஆனால், 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பில் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை. இருந்தும், அரசு விதிப்படி மாதந்தோறும் லட்சக்கணக்கில் வரியூழியம் செலுத்தி வருகிறோம்.
அதேசமயம், டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடைகள் மினிபார் போல செயல்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளனர்.
மேலும், "அரசு ஒப்பந்தப்படி டெண்டர் முறையில் மதுபான கூடங்கள் செயல்படுகின்றன.
ஆனால், சிலர் எந்தவொரு விதிமுறைக்கும் உட்படாமல் மதுபான விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம், சட்டப்பூர்வமாக செயல்படும் பார்கடைகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்படியே நீடித்தால், மதுபான கூடங்கள் செயல்பட முடியாத நிலை உருவாகும்" என உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, 10ஆம் தேதி முதல் பார்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், வரும் 28ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பார்கள் அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக