புதன், 12 பிப்ரவரி, 2025

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி – தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் நாளை நடைபெறுகிறது.

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி:2025பெப்ரவரி 13

 போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மனநலத்துறை மற்றும் போதை எதிர்ப்பு மாணவர் கழகம் சார்பில் "போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" திட்டத்தின் கீழ் சிறப்பு நிகழ்ச்சி நாளை (14.02.2025) காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.



இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் தேர்வு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


நிகழ்ச்சியில் Anti-Drug Club Faculty உறுப்பினர் டாக்டர் S. Jeeva Creedom Victory வரவேற்புரை நிகழ்த்த, கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் G. Sivakumar தலைமை உரையாற்றவுள்ளார்.


இந்நிகழ்ச்சியில்... துணை முதல்வர் டாக்டர் V. Kalaivani, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் R. Padmanaban, துணை கண்காணிப்பாளர் டாக்டர் P. Kumaran, RMO டாக்டர் J. Silas Jeyamani, மனநலத்துறைத் தலைவர் டாக்டர் M. B. Abdul Rahuman உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.


போதைப்பொருட்களுக்கு எதிரான பிரமாணம் (Anti-Drug Pledge) நிகழ்வில் NSS திட்ட அலுவலர் டாக்டர் N. Sabari Raja மற்றும் யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர் டாக்டர் Israel Raja Johnley ஆகியோர் பங்கேற்கின்றனர்.


மேலும், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பாடல் வெளியீடு நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Albert John IPS சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.


நிகழ்ச்சி நிறைவில் Anti-Drug Club Faculty உறுப்பினர் டாக்டர் Bhuvaniesh நன்றியுரை வழங்குகிறார்.

அழைப்பு !!!

மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் பொது மக்களை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக