கம்யூனிஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்யூனிஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

தமிழக அரசின் நிலைப்பாடு சிபிஐ(எம்) எதிர்ப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்த்தில் துப்பாக்கிச்சூடு கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை!

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை!

தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தூத்துக்குடி: செப் 1

2018-ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், குற்ற வழக்குகளைப் பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

thoothukudileaks


இதுகுறித்து 01.09.2026 அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்டை எதிர்த்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்ததாகவும், அதில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், குற்ற வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரைத்ததாகவும் சிபிஐ(எம்) மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு சிபிஐ(எம்) எதிர்ப்பு

31.08.2026 அன்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த கருத்துகள், கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருப்பதாக சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மக்கள் சுட்டிக்காட்டிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தற்போதைய தமிழக அரசு, முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானதாக ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்குகளைப் பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

— பெ.சண்முகம், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ(எம்))



செய்தி புகைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

சனி, 1 ஆகஸ்ட், 2026

ஒன்றிய அரசை கண்டித்து. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும்: சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம 

தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையில் சமரசம் கூடாது – டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தல்

தூத்துக்குடி, ஆக. 2:

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று (01.08.2026) காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநகர செயலாளர் தோழர் ஜி. தனலெட்சுமி தலைமை வகித்தார்.


ஆர்ப்பாட்டத்தில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது, காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து செயல்படுத்த வேண்டும், டெல்டா பாசனப் பகுதிகளில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் என். பெரியசாமி கண்டன உரையாற்றினார். 


மேலும், சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர் பி. கரும்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

thoothukudileaks



புகைப்பட விளக்கம்: தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே, மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சிக் கொடிகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வெள்ளி, 19 டிசம்பர், 2025

AITUC 65வது ஆண்டு விழா – டிசம்பர் 20ல் தூத்துக்குடியில் நடைபெறுகிறது

தூத்துக்குடி லீக்ஸ்” நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 


AITUC 65வது ஆண்டு விழா – டிசம்பர் 20ல் தூத்துக்குடியில் நடைபெறுகிறது

தொழிலாளர் உரிமைகளைக் காக்க உறுதிமொழி எடுக்கும் மாநாடு

தூத்துக்குடி, டிச. 19 :

இந்திய தொழிற்சங்க பேரவை (AITUC) 65வது ஆண்டு விழா மற்றும் தூத்துக்குடி ஹார்பர் ஓர்கர்ஸ் யூனியன் சார்பில் சிறப்பு மாநாடு வரும் 20.12.2025 (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி பழைய துறைமுக சமூக நலக் கூடத்தில் (பீச் ரோடு) நடைபெறுகிறது.

thoothukudileaks


இந்த விழாவிற்கு AITUC மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்னணி தலைவர்கள், தொழிலாளர் இயக்கத்தின் மூத்த போராளிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

விழாவிற்கு R. பாண்டி தலைமை வகிக்க,
முன்னிலை:

  • A. பாலசிங்கம் – AITUC மாநில பொருளாளர்
  • G. ராஜ்குமார் – AITUC துறைமுக தலைவர்

வாழ்த்துரை:

  • M. ராதாகிருஷ்ணன்
  • S. காசி விஸ்வநாதன்
  • B.C.H. மசன்
  • S.S. சரவணன்
  • S. சீனிவாசராவ்
  • K. பிரகாஷ்ராவ்
  • P. கருப்பன் உள்ளிட்ட பலர்

சிறப்பு விருந்தினர்கள் ஆக INTUC, CITU, HMS, PETU, BTTS, TASMAC உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தொழிலாளர் உரிமைகள், ஊதிய உயர்வு, வேலை பாதுகாப்பு, துறைமுக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த கருத்துகளை பகிர உள்ளனர்.

65 ஆண்டுகளாக தொழிலாளர் நலனுக்காக போராடி வரும் AITUC-ன் வரலாற்றுச் சாதனைகள், எதிர்கால தொழிலாளர் இயக்கத்தின் பாதை குறித்து இந்த மாநாடு முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் தொழிலாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என தூத்துக்குடி ஹார்பர் ஓர்கர்ஸ் யூனியன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 


thoothukudileaks



ஞாயிறு, 7 டிசம்பர், 2025

மோடி அரசு கொண்டு வந்த தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி — தூத்துக்குடியில் இடதுசாரி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் — செய்தி

தூத்துக்குடி, டிசம்பர் 08, 2025:

ஒன்றிய மோடி அரசு தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வகையில் கொண்டு வந்த நான்கு தொகுப்பு தொழிலாளர் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்று (08.12.2025) காலை 11 மணிக்கு இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தொழிலாளர் பாதுகாப்பு, ஊதிய நெறிமுறைகள், வேலை நேர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட உரிமைகளை பாதிக்கும் வகையில் புதிய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள்:

  • தோழர் மு.முருகன், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்.எல்)
  • தோழர் K.P. ஆறுமுகம், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)
  • தோழர் கரும்பன், மாவட்டச் செயலாளர், சிபிஐ
  • தோழர் ம. கணேசன், மாவட்டச் செயலாளர், விசிக
  • தோழர் பி. சம்பத், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
  • தோழர் பாலசுந்தரம், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்.எல்)
  • தோழர் வழ. வில்லவன் கோதை, துணை பொதுச்செயலாளர், விசிக
  • தோழர் P. லோகநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர், சிபிஐ

சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் “தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்!”, “தொழிலாளர் உரிமை எங்கள் உரிமை!” என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டம் முழுவதும் அமைதியாக நடைபெற்றது.

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தனியாக சிக்கிய பிஜேபி பிரமுகர் போட்டு புரட்டி எடுத்த காம்ரேட்டுகள்!!! தூத்துக்குடியில் டிஷ்யூம் டிஷ்யூம் ஃபைட் சம்பவ இடத்தில் வெகு நேரமாக வராமல் தாமதமாக வந்த காவல் துறை!! நடந்தது என்ன முழு விவரம் !

Tamil Nadu updates 5-9-2025

செய்தி புகைப்படங்கள் 

அருணன் செய்தியாளர்: 


தூத்துக்குடி செப் 5

தூத்துக்குடி மண்ணின் மைந்தர் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் ஜயா வின் 154 வது பிறந்த நாள் செப் 5 இன்று தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது 


மேலும் தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் ஏகமாக இந்த தடவை இந்திய சுதந்திர போராட்ட போராளி வ உ சிதம்பரனார் ஜயா பிறந்த நாளை வழக்கத்தை விட வெகு உற்சாகமாக கலந்து கொண்டு கொண்டாட.... 


பிறகென்ன??? 

 தூத்துக்குடியில் பிஜேபி கட்சி கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் சரமாரியாக மோதி சண்டையில் போய் முடிந்ததுள்ளது


இன்று காலை 9 மணி ஆரம்பத்திலே திமுக அதிமுக மற்றும் சமுக அமைப்புகள் சாதி சங்கங்கள் வ உ சி ஜயா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு லட்டு வழங்கி சென்று விட்டார்கள் 

டிஷ்யூம் - டிஷ்யூம்!!!

அடுத்து வந்த சிஐடியூ மாவட்ட செயலாளர் ரசல் தலைமையில் வந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் தங்களது பிரச்சார வாகனத்தில் 25 க்கும் மேற்பட்டோர் வந்து இறங்கினார்கள்

Thoothukudileaks


வ உ சி சிலைக்கு இடத்திற்கு முன்பாக பேனர் கொடி ஏந்திய வாறு    தங்களுடன் கொண்டு வந்த மைக் பிடித்து சிஐடியூ மாவட்ட செயலாளர் ரசல்  மகாகவி பாரதியார் சுதேசி கொள்கையாளர் வ உ சிதம்பரனார் பற்றி பேச தொடங்கினர்

 அவர் பேசுகையில்...

இந்த மக்கள் ஒற்றுமை பிரச்சாரம் இயக்கம்  

பாரதியாரும் வ உ சிதம்பரனாரும்  மத வெறி சாதி வெறி எதிராக  களமாடிய இந்த மண்ணில் 

வ உ சிதம்பரனார் பிறந்த நாள் இன்று தொடங்கி பாரதியார் நினைவு நாள் செப் 11 தேதி வரை மாவட்ட முழுவதும் பிரச்சாரம் தொடங்கி இருக்கிறோம்.

மாவட்ட முழுவதும் மத வெறி சாதி வெறி தலை விரித்து ஆடுகிறது முடிவு கட்ட வேண்டும் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்


"இந்திய பொருளாதாரத்தை காப்ரேட் நிறுவனங்கள் இடம் அடகு வைக்கும் கொள்கைக்கு எதிராக யுத்த களமாக உள்ள நாடு மாறுவதற்கு மகாகவி பாரதியாரும் வ உ சிதம்பரனாரும் மிக பெரிய ஆதர்சனமாக விளங்குகிறார்கள்


இன்றைக்கு...

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவின் பொருளாதாரத்தை காவு கேட்டு கொண்டிருக்கிற இந்த நிலையில்....?


இந்தியா வின் ஆளும் வர்க்கம் அவர்களுக்கு அடி பணிந்து கொண்டு இருக்கும் நிலையில்...."


என ரசல் பேசி கொண்டு இருக்கும் போதே....

பேசுவதை  சகித்துக் கொள்ள முடியாமல் ரசல் அருகே 

ஒடி வந்தார் பிஜேபி கட்சி சொக்கலிங்கம்  ....?


பின்னர் என்ன நடந்தது என்றால்???

 பிஜேபி கட்சி பிரமுகர் சொக்கலிங்கத்தை காம்ரேட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைவரும் சேர்ந்து கன்னத்தில் கும்மாங்குத்து அடித்து துரத்த தொடங்கினர் 



விஷயறிந்து பாஜக மாநில துனை செயலாளர் சசிகலா புஷ்பா பாஜக தொண்டர்கள் படையுடன் களத்தில் இறங்கி மல்லு கட்ட தொடங்கினார்.


சம்பவ நடந்த போது ஸ்பாட்டில் ஒரு போலீஸ் கூட அங்கு இல்லை  தாமதமாக தான் போலீஸ் வந்து சேர்ந்தது.


ஒரு வழியாக காம்ரேட் -களை சமாதான படுத்தி வழி அனுப்பி வைத்தனர் 


கடுங் கோபத்தில் இருந்த பாஜக கட்சியினர் மாநில துனை செயலாளர் சசிகலா புஷ்பா தலைமையில் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பாரத் மாதா கி ஜெ கர கோஷம் எழுப்பினர்.

பாஜக மாநில துனை செயலாளர் சசிகலா புஷ்பா தலைமையில் வ உ சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த வீடியோ 


இது குறித்து மத்திய காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சொக்கலிங்கம் புகார் மனு கொடுத்திருப்பதாக தகவல்.