வியாழன், 20 ஜூன், 2024

பூரண மது விலக்கு உடனே அமல்படுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

 

இறைவனின் திருப்பெயரால்...


மதுவில் தள்ளாடும் தமிழகம் - செத்து மடியும் மனித உயிர்கள். தமிழக அரசு கள்ளச்சாராயத்தை ஒழித்து, பூரண மது விலக்கை உடனே அமல்படுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

இது பற்றிய செய்தியாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்த சுமார் 35 பேர் மரணமடைந்துள்ளனர், 100 க்கும் அதிகமானோர் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றனர், 



சென்ற வருடம் மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவத்திலிருந்து இந்த அரசும் அரசாங்க அதிகாரிகளும் பாடம் படித்துள்ளனரா எனும் கேள்வி எழுகிறது.


தங்கள் உறவுகளை இழந்து விட்டு கதறி அழும் மக்களின் அழுகுரல், கல்நெஞ்சையும் கறைப்பதாக உள்ளது.



 கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் 5 பேர் பெண்கள் என்பது தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது எனும் அச்சத்தை  ஏற்படுத்துகிறது, 


சம்பவம் நடந்ததற்கு பிறகு கூண்டோடு சஸ்பெண்ட் என்பது போதுமான நடவடிகை இல்லை. இந்த விற்பனையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பில் இருந்த அரசாங்க அதிகாரிகள், அரசியல் வாதிகள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும்.


 பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


போதையில் தள்ளாடும் தமிழகத்தை காப்பதற்கு உயர்நிலை குழு ஒன்றை அமைத்து பூரண மதுவிலக்கு மற்றும் அதை கையாள்வதற்கான  செயல்திட்டங்களை அரசு வெளியிட வேண்டும் என ஆளும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.


டாஸ்மாக் விற்பனையால் போதைக்கு அடிமையாகி அதை வாங்கி குடிக்க பணம் இல்லாததால் குறைந்தவிலையில் கிடைக்கும் இது போன்ற கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்


 எனவே டாஸ்மாக்கை நடத்தும் இந்த அரசின் கொள்கையே இது போன்ற உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகிறது.


ஆயிரக்கணக்கானோரை கொல்லும், இளம் விதவைகள் நிறைந்துள்ள மாநிலமாக மாறிவரும் தமிழகத்தை காக்க பூரண மது விலக்கை கொண்டு வரவேண்டும் என தமிழக அரசை 

கேட்டுக்கொள்கிறோம்


இப்படிக்கு,

A. முஜிபுர் ரஹ்மான்,

மாநில பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக