வெள்ளி, 21 ஜூன், 2024

தடை மீறி கள்ளச்சாராயம் சாவுக்கு புரட்சிகர மக்கள் அதிகாரம் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

புரட்சிகர மக்கள் அதிகாரம் இன்று பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இது பற்றி தெரிவித்துள்ளதாவது :-

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் பலி!

சாராயபோதைக்கு மக்களை அடிமையாக்கிய அரசே குற்றவாளி

என்ற தலைப்பில் தடையை மீறி 

கண்டன ஆர்ப்பாட்டம் 



பென்னாகரம் பேருந்து நிலையத்தில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக 21-06-2024 இன்று காலை 11.00 மணிக்கு  தமிழக அரசுக்கு கண்டன நடைபெற்றது. 



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் அனுமதி கோரியபோது அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்துக்கு தடைவிதித்தது .


எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டமானது பென்னாகரம் வட்டார துணை செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.


மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தோழர் சிவா, மாநில இணை செயலாளர் தோழர் கோபிநாத் கண்டன உரையாற்ற பென்னாகரம் வட்டார செயலாளர் தோழர் சத்தியநாதன் நன்றியுரையாற்றினார்.


இறுதியில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக வழக்கு போட 15 தோழர்களின் பெயர்களை கேட்டு பெற்று சென்றுள்ளது, பென்னாகரம் போலிசு.  


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை தடுக்க வக்கற்று அவர்களுக்கு உடந்தையாக இருந்த கொலைகார அரசு, போராடுபவர்களின் மீது வழக்கு போடுவதுதான் இன்றைய இந்திய ஜனநாயகத்தின் சாபக்கேடு!


மூடு டாஸ்மாக்கை என்று 2015 போராடி தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகளை மூட போராடி இன்று வரை வழக்கை சந்தித்துக்கொண்டிருக்கும் எமக்கு இன்னுமொரு வழக்கு இது. 

வழக்கை கண்டு அஞ்சாமல் போராடுவோம்! போதை அற்ற சமூகத்தை உருவாக்க வீதியில் இறங்குவோம்!


தகவல்

தோழர் சத்தியநாதன்

புரட்சிகர மக்கள் அதிகாரம்

வட்டார செயலாளர் 

பென்னாகரம்

9790138614

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக