thoothukudileaks 7-10-2023
Photo news by arunan journalist
தூத்துக்குடியில் பாஜக திமுக திடீர் மோதல் பரபரப்பு
இது பற்றிய பரபரப்பு செய்தியாவது:-
மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ருபாய் 53 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் நாளை 8 -10 -2023 அன்று காலை திறப்பு விழா நடைபெறும் என நேற்று6-10-2023 அமைச்சர் கீதா ஜீவன் தகவல் தெரிவித்தார்.
மேலே ஒட்டப்பட்ட பிரதமர் மோடி படத்தை சிலர் கிழிக்கிறார்கள் |
அதன்படி அதற்கான வேலைகள் துரிதமாக புதியதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்தது.பந்தல் மேடை அமைப்பு தொடக்க விழா ஆரம்பிப்பதற்கு தெரிய அகன்ற திரை அதாவது ஸ்கீரின் டிவி பணிகள் நடைபெற்று முடிந்தது
இந்நிலையில் இன்று 11 மணி அளவில் தூத்துக்குடி பாஜகவினர் 10 பேர் மேற்பட்டோர் வாசல் நுழைவு பகுதியில் வைக்கப்பட்டிருந்த வளைவில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது
எழுதப்பட்ட கரையோரம் இடைவெளி இருந்தது அதில் பிஜேபினர் மேலே ஏறி பிரதமர் மோடியின் படத்தை உருவப்படத்தை ஒட்டி விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டம் மத்திய அரசு திட்டம் பிரதமர் மோடி படம் இருக்க வேண்டும் என அங்கு இருந்து சென்றார்கள்.
பிரதமர் மோடி படம் கிழிப்பு !!!
இதனால் திமுக வினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வியப்போடு பார்க்க ஆரம்பித்தார்கள் இது விஷயம் தெரிந்ததும் பதறி அடித்து ஓடி வந்தார் அமைச்சர் கீதா ஜீவன்.
அவர் வருவதற்குள் சிலர் மேலே ஏறி பிரதமர் மோடியின் உருவப் படத்தை தாறுமாறாக கிழித்து கீழே எறிந்தார்கள்
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உள்ளே வந்து பார்த்த அமைச்சர் கீதா ஜீவன் எதுவும் நடந்தால் உடனே எனக்கு இடம் என்னிடம் தகவல் தெரிவிக்குமாறு அங்கிருந்து இருந்தவர்களிடம் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார் .
அவர் சென்ற அரைமணி நேரத்தில் ..
கலைஞர் நூற்றாண்டு எழுத்து பொறிப்பு!!!
கிழித்து எறியப்பட்ட பகுதியில்
பேருந்து நிலைய நுழைவு வாயில் எழுதிய பெயிண்ட் தொழிலாளர் கள் திரும்ப வரவழைக்கப்பட்டு அவர்களிடம் கலைஞர் நூற்றாண்டு எழுதி விட்டார்கள் .
கலைஞர் நூற்றாண்டு என திரும்ப வந்து எழுதும் தொழிலாளர் |
பிரதமர் மோடி படம் ஒட்டிய இடத்தில் கலைஞர் நூற்றாண்டு எழுதப்பட்டது |
பாஜகவினர் கறுப்பு கொடி
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி புதிய பேருந்து நிலையத்தில் ஏற்கனவே இருந்த பிள்ளையார் கோயில் வைக்கப்பட வேண்டுமென என தூத்துக்குடி பிஜேபியினர் கோரிக்கை வைத்தனர் .
அப்படி வைக்கப்படவில்லை எனில் புதிய தாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு விழாவின் போது பிஜேபியினர் கருப்பு கொடி காட்டுவோம் என செய்தியாளர்கள் களிடம் தெரிவித்திருந்தார் கள் குறிப்பிடத்தக்கது .
தற்போது ஸ்மார்ட் ஸ்மார்ட் சிட்டி புதிய புதிதாக கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையம் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பேருந்து நிலையம் சுற்றி காவல்துறை பாதுகாப்பு |
தூத்துக்குடியில் பாஜக திமுக தீடீர் மோதல் நடவடிக்கைகளால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது .
கோட்டை விட்ட காவல்துறை டென்ஷன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக