thoothukudileaks 7-10-2023
photo news by sunmugasunthram journalist
தூத்துக்குடியில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர்
இதுபற்றி செய்தியாவது -
தூத்துக்குடி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற துவக்க விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்புரையாற்றினார்.
மாணவிகள், மாணவர்கள், பெரியவர்கள் என மூன்று அணிகள் போட்டியிட்டார் கள்
இந்த போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், ஓன்றிய செயலாளர் சரவணக்குமார், தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் கபடிகந்தன், கௌதம், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்பரிசாக கோப்பையும் ரூ 5 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ 3 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ 2 ஆயிரமும், முதல் பத்து இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. நெடுந்தூர ஓட்டப்போட்டியையொட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இப்போட்டியில் மாணவ மாணவிகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக