திங்கள், 17 ஜூன், 2024

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 18-6-2024

photoNews by sunmugasunthram Reporter

    தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தெற்கு மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் ஏற்பாட்டில் 200 ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பத்தில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் புத்தகப்பை, நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலத்திட்டம் வழங்கும் விழா  எட்டயபுரம் ரோடு, மேம்பாலம் முன்பு நடைபெற்றது.  



தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் நலத்திட்ட உதவி வழங்கினார்.   

 

நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பிரபு, மாவட்ட  சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், விக்னேஷ், பிரபாகர், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், பொறுப்பாளர் சென்பகசெல்வன், மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்விக்குமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்கள் முனியசாமி, சரவணபெருமாள், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் அலெக்ஸ் துணைத் தலைவர் அருண்ராஜா, ரமேஷ்கிருஷ்ணன், தலைமை பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன் தேவராஜ், வட்ட செயலாளர்கள் சொக்கலிங்கம், மணிகணேஷ், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் ஐயப்பன், கணேசன், ரமேஷ், ததெயூஸ் மற்றும் பாலஜெயம், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, யுவன் பாலா, சகாயராஜா, உதயகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக