ஞாயிறு, 21 மே, 2023

வதந்திகளை நம்ப வேண்டாம் - வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு தூத்துக்குடி மாநகர் முழுவதும் பாதுகாப்பு போலீஸ் குவிப்பு

thoothukudileaks 21-5-2023

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு 21.05.2023 -ன்று பொதுமக்கள் கூடுகின்ற முத்துநகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி மறுப்பு - தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் - வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை -  மாவட்ட காவல்துறை அறிவிப்பு.



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு சம்மந்தமில்லாத இன்று (21.05.2023) பொதுமக்கள் கூடுகின்ற முத்துநகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி கோரி வழக்கறிஞர் ஹரிராகவன் மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு மனு அனுப்பியிருந்தார். 


பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வழக்கத்திற்கு மாறான அந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டு முறைப்படி மறுப்பு அறிவிப்பு அவருக்கு சார்பு செய்யப்பட்டது, அதை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் மீண்டும், மீண்டும் முத்துநகர் கடற்கரையில் மேற்படி நிகழ்ச்சி நடக்க இருப்பதாக மக்களிடம் போலியான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.


 வதந்ததியை பரப்புபவர்கள் மீதும், அனுமதி மறுக்கப்பட்டதை மீறி முத்துநகர் கடற்கரையில் கூடுவோர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 


அதே நேரம் நிர்வாகத்துறை மற்றும்

காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று நடத்துகின்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


இதனால் கால்டுவெல்பள்ளி முத்துநகர் கடற்கரை மற்றும் தூத்துக்குடி மாநகர் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக