thoothukudileaks 22-05-2023
news photo by :- Arunan (senior reporter)
தூத்துக்குடி கருப்பு தினம்
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த போராளிகள்
5 ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு பரபரப்பு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர்
போராசியை பாத்திமா பாபு தலைமையில் மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபென் முன்னிலையில் மற்றும் sdpi நெல்லைமுபாரக் மே17 திருமுருகன் காந்தி ,பிரபு ஃபுல் லா சம்னட்னரா,லோக் சக்தி அபிஜான், அப்பாதுரை, தெர்மல் ராஜா, ரீகன் இவர்களுடன் பெற்ற மகளை இன்னும் மறக்க முடியாமல் கண்ணீருடன் தவிக்கும் இப்படி பாதிக்கப்பட்ட பல குடும்ப உறவுகள் நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.
இது பற்றிய செய்தியாவது
தூத்துக்குடியில்
கடந்த மே2018 திங்கள் கிழமை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை அகற்று கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க தூத்துக்குடி பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
ஆனால்? பொதுமக்கள் வருவார்கள் என தெரிந்தும் தூத்துக்குடி கலெக்டர் அன்று அலுவலகத்தில் இல்லை?
இதை வந்திருந்த பொதுமக்கள்
பலருக்கும் தெரியா நிலையில் அங்கு குழுவி நின்று இருந்தனர். களைந்து செல்ல அவகாசம் கூட இல்லாமல் போனது.
அங்கு நின்ற வஜுரா வாகனங்கள் முலம் தண்ணீர் கூட பீச்சியடிக்கப்படவில்லை
அப்போது தமிழக காவல்துறையும் துணை பாதுகாப்பு படையும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
துப்பாக்கி சூட்டில் 13பேர் மாய்ந்தனர் இதில் பின்னர் 3பேர் இறந்தனர்.
இச் சம்பவம் உலகம் முழுவதும் பேசப்பட்டது இதற்கான நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குரல்கள் கொடுத்து இருந்தார்கள்.
அப்போது எதிர் கட்சி ஆக திமுக தலைவர் ஸ்டாலின் இதற்கு காரணமாக இருந்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் திமுக ஆட்சி க்கு வந்த உடன் ஸ்டெர்லைட் ஆலை குறித்து சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வருவோம்.
துப்பாக்கி சூடு காவல்துறை உட்பட யார் காரணமானாலும் தண்டனை கிடைக்க செய்வோம் என கூறினார்.
இதையொட்டி அப்போது அதிமுக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
அதிமுக அரசு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு அவசரமாக ஸ்டெர்லைட் ஆலை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தற்போது திமுக ஆட்சியில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை யார் யார் காவல் துறை உயரதிகாரிகள் வருவாய் துறை பெயர் கள் உட்பட முதல்வர் ஸ்டாலின் இடம் தந்து விட்டார்.
தூத்துக்குடி யில் 2018 மே 22 ல் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு 16பேருக்கும் ஐந்தாவது ஆண்டு வீர வணக்கம் செலுத்த ப்பட்டது
திமுக அரசு இன்று வரை துப்பாக்கி சூடு காரணமான குற்றவாளிகள் நடவடிக்கை தண்டிக்கப்பட வில்லை என குமுறல் வெடித்து உள்ளார்கள்.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை
சுட்டிக்காட்டிய
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி கள் 17பேர் மற்றும் 4வருவாய்துறை மீதும் நடவடிக்கை எடுக்க பட வில்லை
தூத்துக்குடியில் நடைபெற்ற ஐந்தாவது ஆண்டு நினைவஞ்சலி எதிரொலி த்ததுள்ளது..
இந்த தடவை யும் வழக்கம் போல பல மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு என 2200 போலீசார் குவிப்பு கடந்த இரு நாட்களாக தூத்துக்குடி மாநகரில் ஒரு வித பதற்றம் ஏற்பட்டது.
முன்பெல்லாம்... பொதுவெளியில் பலதரப்பட்டவர்களை நேரில் சந்தித்து நடக்க போவதை முன் கூட்டியே பிங்கர் டிப்ல் வைத்து பல்வேறு தகவல்கள் கூறுவார்கள் .நல்லது நடக்கும் இப்போதோ கெட்டது மட்டுமே நடக்கிறது.என்னத்த சொல்ல என்கிறார்கள்.
அதாவது டுபாக்கூர் நிருபர்களின் குரூப் வாட்ஸ்- அப் கதியே என்றிருந்த
உளவு சொல்லும் துறை விழிப்புணர்வு டன்? இயன்ற அளவு மோப்பம் பிடித்து அஞ்சலி செலுத்தும் அனைத்து இடங்களிலும் வந்து போட்டோ பெயர் விவரம் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மொத்தத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு பொதுமக்கள் ஒன்றாக கூடுவதை தடுக்க என்னென்ன முயற்சி உண்டோ? அதெல்லாம் செய்த பாத்தது ஆனால்?
இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு அனைத்திலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு என்பது பொதுமக்கள் மத்தியில் கிஞ்சித்தும் குறையாமல் அப்படியே? தெரிகின்றது .
அதேபோல்...ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீதும் காவல்துறையும் கடுமையும் வெளிப்பட்டுள்ளது.
இதெல்லாம் வருகின்ற தேர்தலில் எதிரொலிக்க முன் ..?
ஆளும் கட்சி திமுக சரி செய்யுமா ? சென்ற தடவைகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஒட்டு வங்கி திமுக சாதகமான இருந்து தூத்துக்குடி எம்பி கனிமொழி எம்எல்ஏ ஆக கீதா ஜீவன் மாநகராட்சி மேயர் ஆக ஜெகன் பெரிசாமி வெற்றி க்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள்.
இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில்.. வியாபார சங்க தலைவர் விநாயகமூர்த்தி, பாஸ்கர்,வழக்கறிஞர் ஹரிராகவன், கிட்டு,மதிமுக மகாராஜன், வாழ்வுரிமை கட்சி கிதர்பிஸ்மி, மாரிசெல்வம்,தமிழ் நாடு மக்கள் கட்சி காந்தி மள்ளர், வழக்கறிஞர் அதிசயகுமார், மாடசாமி,பிரின்ஸ், சூழலியல் ஆய்வாளர் வறீதையா கான்ஸ்தந்தீன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக