தூத்துக்குடி ஸ்டெர்லைட் திறந்தால் தான் நாங்க வாழ முடியும்
முத்து நகர் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம்
தலைவர் ரமேஷ் இன்று 29-06-2022 தூத்துக்குடி பானு பிருந்தாவனம் கூட்டரங்கில் தூத்துக்குடி செய்தியாளர் இடம் பரபரப்பு பேட்டியளித்தார்.!
இதுபற்றிய செய்தியாவது -
தூத்துக்குடி லீக்ஸ் :-29-6-2022
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறந்தால் தாங்க நாங்க வாழ முடியும் எங்களுக்கு அவ்வளவு நன்மை செய்து வந்துள்ளனர்.முந்திய (அதிமுக) அரசும் சரி இந்த திமுக சரி
இங்கு ள்ளஅரசு அதிகாரிகள் ஒரே மாதிரி தான் இருக்காங்க இந்த திமுக ஆட்சி வந்த பிறகும் மாறவில்லை தாமதபடுத்துவாங்க 15 மேல் எங்களை அலையவிடுவாங்க ஆனாலும் பதில் சொல்ல மாட்டார்கள்.முதல்வர் இடம் இது பற்றி தெரிவிக்க இருக்கிறோம்.
ஆனால் எங்களுக்கு உடல் பாதிப்பு உள்ளவர்கள் என தெரிந்ததும் உடனே நேரிடையாக வரவழைத்து மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் தந்து உதவியதை நாங்க மறக்க முடியாது.
எனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விற்க வேண்டாம் என உரிமையாளர் அனில் அகர்வாலை நாங்கள் அனைவரும் கெஞ்சி கேட்டு கொள்கிறோம்.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு வரும் மாற்றுத்திறனாளிகள் இப்போது வசதியாக தான் இருக்கிறார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் துளசி மகளிர் அணி தலைவி தனலட்சுமி உட்பட நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் மாற்றுதிறானாளிகள் கலந்து கொண்டனர்.
மாற்றுதிறானாளிகள் பலர் ஸ்டெர்லைட் ஆலை எதிராக உள்ள அமைப்பு களில் இருந்து வரும் நிலையில் முத்துநகர் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் தலைவர் ரமேஷ் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு பேட்டி மாற்றுத்திறனாளிகள் மத்தியில் சலசலப்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக