ஞாயிறு, 26 ஜூன், 2022

பொதுமக்கள் முககவசம் கட்டாயம் இல்லை எனில் அபராதம் தமிழக அரசு அறிவிப்பு

தற்பொழுது கோவிட் தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.

மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,
கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில்
அதிகரித்து வருகின்றது. 

பொதுமக்கள் முக கவசம் அணியாத வர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் 



இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை செய்தி வெளியிட்டுள்ளது 


இத்தொற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக
இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல்
இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக
இருப்பதால் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்றது. 


இதை தவிர்க்க பொதுமக்கள்
அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு
நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும். 

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கோவிட் வழிமுறைகளை
முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள :-
Indiprnews
Indipr Indipr
நாள்: 26.06.2022
TN DIPR
www.dipr.tn.gov.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக