Tamil Nadu updates,
photo news by Arunan journalist
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்படும் வேதிப்பொருட்கள் குஜராத்துக்கு அனுப்பப்படுகிறது – தூத்துக்குடி ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2018 முதல் மூடப்பட்டிருந்த நிலையில், ஆலையில் சேமிக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்கள் அகற்றப்பட உள்ளன.
உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் ஆலையில் தேங்கி இருந்த பொருட்களை அகற்ற அனுமதி கோரியது.
இதன் அடிப்படையில் 80 நாட்களுக்குள் அகற்றும் பணியை நிறைவு செய்ய அரசின் அனுமதி கிடைத்துள்ளது.
இன்றிலிருந்து அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. கண்டெய்னர் லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, வேதிப்பொருட்கள் குஜராத்தின் டாமன் – டையூ பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு: தூத்துக்குடி லீக்ஸ்
![]() |
மீள் விட்டான் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை யின் தெர்மல் பிளான்ட் |
அடுத்தாக...
தூத்துக்குடி சிப்காட் அருகில் மீள் விட்டான் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை சொந்தமான அனல் மின் நிலையம் ஆரம்ப ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன
ஸ்டெர்லைட் ஆலையில் வேதி பொருட்கள் அகற்றும் பணியில் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக