வியாழன், 20 மார்ச், 2025

தூத்துக்குடி மாநகராட்சியின் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கும் நிகழ்வு

 Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சியின் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், பொதுமக்களின் ஆரோக்கிய பாதுகாப்புக்காக ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் மாநகரின் 16 பகுதிகளில் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.







இந்நிகழ்வு இன்று (21-03.2025) காலை 12 மணியளவில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆனையர் மதுபாலன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


பொதுமக்கள், குறிப்பாக முதியோர், குழந்தைகள் ஆகியோருக்கு வெப்பத்தால் ஏற்படும் சோர்வையும், உடல் நீரிழிவையும் தடுக்கும் வகையில் ORS (Oral Rehydration Solution) வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், உப்பு சர்க்கரை கரைசல் பயன்பாடு மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வழிகள் குறித்த அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.





இந்த நடவடிக்கையால் தூத்துக்குடியில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க அதிக உதவியாக இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக