தூத்துக்குடியில் அதிமுக பாக கிளை நிர்வாகிகள் நியமனம் தீவிரம்
தூத்துக்குடி, மார்ச் 21:
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிவாரியாக அதிமுக பூத் கிளை நிர்வாகிகளை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் இந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு பகுதி, முத்தையாபுரம் ராஜீவ் நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் பி.ஜி. ராஜேந்திரன், கல்லூர் வேலாயுதம் ஆகியோர் பங்கேற்று, ஒவ்வொரு பாகமாக ஆய்வு மேற்கொண்டு நிர்வாகிகளை நியமித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்டோர்:
மாநில, மாவட்ட, பகுதி, வார்டு மட்ட நிர்வாகிகள் என பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் இரா. சுதாகர், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில், வார்டு வாரியாக வட்டச் செயலாளர்கள் பாக கிளைகளை அமைக்கும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக