செல்போனில் கூகுள் பே, போன் பே இருக்கிறதா?
கவனம்! ஏப். 1 முதல் புதிய விதிமுறை அமுலுக்கு வருகிறது!!
தூத்துக்குடி லீக்ஸ்: 2025 மார்ச் 20
வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்கள் தொடர்பாக தேசிய பணப்பரிமாற்ற கார்ப்பரேஷன் (NPCI) புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் இந்த விதிமுறையின் படி, பயனர்கள் வங்கியில் பதிவு செய்திருக்கும் செல்போன் எண்கள் செயல்பாட்டில் இல்லாவிட்டால், ...
அந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் வாய்ப்புள்ளது.
புதிய விதிமுறை என்ன?
- வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் செயல்பாட்டில் இல்லாவிட்டால், அந்த கணக்கு முடக்கப்படும்.
- குறிப்பாக, 90 நாட்களுக்கு அதிகமாக ஒரு செல்போன் எண் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தால், அது புதிய பயனருக்கு வழங்கப்பட்டுவிட்டால், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்.
- இதன் மூலம், நிதி மோசடிகள், தவறான பணப்பரிமாற்றங்கள், ஏமாற்று கணக்குகள் உருவாகுதல் போன்ற பிரச்சினைகளை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விதிமுறை ஏன் கொண்டு வரப்படுகிறது?
சிலர் வங்கிக் கணக்குகளைத் தொடங்கிய போது கொடுத்திருந்த செல்போன் எண்ணை பின்னர் பயன்படுத்தாமல் விடுகிறார்கள்.
அத்தகைய எண்ணுகள் தொலைபேசி நிறுவனத்தால் பிற பயனர்களுக்கு மீண்டும் ஒதுக்கப்படலாம்.
இது மோசடி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்கவே இந்த புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளது.
பயனர்கள் செய்ய வேண்டியது என்ன?
- உங்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்கள் செயல்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
- பழைய எண்ணை பயன்படுத்தாமல் இருந்தால், உடனடியாக வங்கியில் சென்று புதிய எண்ணை வழங்கவும்.
- மார்ச் 31க்குள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படலாம். இதனால் கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ அடிப்படையிலான பணப் பரிமாற்ற சேவைகள் முடங்கும்.
எனவே, பயனர்கள் இந்த புதிய விதிமுறையை கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக