ஞாயிறு, 19 ஜூன், 2022

தூத்துக்குடி நாசரேத் பகுதியில் கஞ்சா விற்பனை பிரபல ரவுடி பாம் பீட்டர் கைது

தூத்துக்குடி நாசரேத் காவல் நிலைய  பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல ரவுடி பாம் பீட்டர் போலீசாரல் கைது.செய்யப்பட்டார்.

இது பற்றிய செய்தியாவது - தூத்துக்குடி லீக்ஸ் - 19-06-2022

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன்  உத்தரவுபடி சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் மேற்பார்வையில் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ராய்ஸ்டன் மற்றும் போலீசார் நேற்று (18.06.2022) ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.

அப்போது நாசரேத் தண்டையார்விளை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தண்டையார்விளை பகுதியைச் சேர்ந்த சாலமோன் ராஜ் மகன் பீட்டர் (எ) பாம் பீட்டர் (52) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.



உடனே மேற்படி போலீசார் பீட்டர் (எ) பாம் பீட்டரை கைது செய்து அவரிடமிருந்த 15 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் கைது செய்யப்பட்ட  பீட்டர் (எ) பாம் பீட்டர் என்பவர் மீது நாசரேத், ஸ்ரீவைகுண்டம், குரும்பூர் மற்றும் தாளமுத்துநகர் ஆகிய காவல் நிலையங்களில் 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக