வெள்ளி, 17 ஜூன், 2022

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கத்தி காட்டியும் ஆத்தூரில் அரிவாள் காட்டியும் பணம்வழிபறிப்பு கொலை முயற்சி ஈடுபட்ட ரவுடிகளை கைது செய்த.போஸீசார்

 கத்தியை காட்டி மிரட்டி பணம்பறிப்பு

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி லீக்ஸ் 17-06-2022

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையிலான போலீசார் நேற்று (16.06.2022) ரோந்து பணியில் ஈடுபட்டார் கள்.

 அப்போது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் முத்தையாபுரம் சாமி நகரைச் சேர்ந்த அந்தோனி மகன் ஆரோக்கிய ஜோதி (40) என்பதும், அவர் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒருவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

ஆரோக்கிய ஜோதி


 உடனே ஆரோக்கிய ஜோதியை கைது செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும்  ஆரோக்கிய ஜோதி மீது ஏற்கனவே முத்தையாபுரம், சிப்காட் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய காவல் நிலையங்களில் 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரிவாளை காட்டி மிரட்டி கொலை முயற்சி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  எல். பாலாஜி சரவணன்  உத்தரவுபடி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன்  மேற்பார்வையில்  ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் நேற்று (16.06.2022) ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.

வடக்கு ஆத்தூர் பகுதியில் சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் வடக்கு ஆத்தூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் செல்வகுமரன் (எ) குமரன் (39) என்பதும், அவர் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

செல்வகுமரன் (எ) குமரன்


 உடனே மேற்படி போலீசார் எதிரி செல்வகுமரன் (எ) குமரனை கைது செய்தனர். இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் கைது செய்யப்பட்ட  செல்வகுமரன் (எ) குமரன் மீது ஏற்கனவே ஆத்தூர் மற்றும் சாயர்புரம் ஆகிய காவல் நிலையங்களில் 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக