ஆல் ஸ்கேன் டிரஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆல் ஸ்கேன் டிரஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 மார்ச், 2025

தூத்துக்குடியில் பசுமை பாரம்பரியம்: 359 வாரம் தொடரும் மரம் நடும் நிகழ்ச்சி!

Tamil Nadu updates, photo news by Arunan journalist 30-3-2025

தூத்துக்குடியில் பசுமை வளர்ப்பின் அடையாளமாக "ALL CAN TRUST" அமைப்பு கடந்த 359 வாரமாக தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

🌲 மரங்களில் நிழல்கள்....!!!

இன்று காலை 7 மணி முதல் 8.45 மணி வரை, தருவை மைதானத்தின் கிழக்கு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவற்றுக்கு நீர் ஊற்றப்பட்டது.


வழக்கறிஞர் மோகன் தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பசுமை நண்பர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து 359 வாரமாக இயங்கும் இந்த பசுமைப் பணிக்காக பலரும் ஆதரவு தெரிவித்தனர்.



கோடைக்கால வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நிழல் தரும் மரங்கள் தூத்துக்குடி மக்களுக்கு பாதுகாப்பான உறைவிடமாக மாறுகின்றன. மரங்களின் நிழல் மட்டும் அல்லாமல், அவற்றின் சுகாதாரமான காற்றும் தூய்மையான சூழலை உருவாக்குகிறது. இதனால், வெப்பத்தைக் குறைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


தலைமை தாங்கிய வழக்கறிஞர் மோகன் தாஸ், “மரங்களை வளர்ப்பதன் மூலம் நாம் வெப்பத்தை குறைத்து, சுத்தமான காற்றை பெறலாம். இது மனிதநேயத்தின் அடையாளமாகவும் நம்மை பாதுகாக்கும் கவசமாகவும் திகழ்கிறது” என்று தெரிவித்தார்.


359 வாரங்கள் கடந்தும் தொடரும் இந்த பசுமை புரட்சி, தூத்துக்குடியின் எதிர்காலத்துக்கு நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்கிறது



ஞாயிறு, 26 ஜனவரி, 2025

ALL CAN TRUST சார்பில் 350வது வார மரம் நடும் நிகழ்ச்சி

ALL CAN TRUST சார்பில் 350வது வார மரம் நடும் நிகழ்ச்சி

Tamil Nadu updates,

news by Arunan journalist 

தூத்துக்குடி:. ஜனவரி 26 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் பகுதியில் 26.01.2025 அன்று குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியாக ALL CAN TRUST சார்பில் 350வது வார மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 




இந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர் மோகன்தாஸ் தலைமையில் பசுமை நண்பர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.






இந்த நிகழ்ச்சி, தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் வேல் மார்க் மகாலுக்கு அருகிலுள்ள கணேசன் காலனி 3வது தெரு பகுதியில் நடைபெற, சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் பசுமை பராமரிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தியது. 





மரக்கன்றுகள் நடப்படுவதன் மூலம் அங்கு உள்ள பரப்பில் பசுமை வளர்ச்சிக்கு உதவப்பட்டு, சுற்றுச்சூழலுக்கான முக்கியத்துவம் ஒப்புக்கொள்ளப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தகவல் ALL CAN TRUST

தூத்துக்குடி


சனி, 30 நவம்பர், 2024

இளைஞர்கள் படையுடன் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் தலைமையில்ALL CAN TRUST மரக்கன்று நடும் சமுக பணி

தூத்துக்குடி CGE காலனியில் 342வது வார ALL CAN TRUST நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 



தன்னார்வ இளைஞர்கள் படையுடன்!!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் சாலையோரங்களில் மரக்கன்று ஊன்றி வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இவருடன் தூத்துக்குடி தன்னார்வலர்கள் இளைஞர் கள் கைகோர்த்து வருகின்றன

 இதனால் தூத்துக்குடி சுற்றுப்புற சூழல் முழுவதும் சுகாதாரமான காற்று சுவாசிக்க பாடுபடுகிறார்கள்.

இன்று!!

01.12.2024 ஞாயிறு காலை, காமாட்சி வித்யாலையா பள்ளி அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

வீடியோ அவசியம் பார்க்க 

மஞ்சள் துணிப்பை!!!

மேலும், பள்ளி மாணவர்களும் ரோட்டரி கிளப் உறுப்பினர்களும் இணைந்து, பிளாஸ்டிக் பைகளை புறக்கணிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக, மஞ்சள் துணி பைகளில் காய்கறிகள் வழங்கும் முயற்சி நடாத்தப்பட்டது.

சுற்று சூழல் சமுகம் 

இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒரு முக்கியமான செய்தியை சமூகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது

கலந்து கொண்டோர்!!!

இந்நிகழ்ச்சியில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் தலைமையில் இளைஞர் கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

அருணன் செய்தியாளர் 

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

ஆல் கேன் டிரஸ்ட் ன் 300வது வார மரம் நடும் பணி சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வாராவாரம் தொடர்ந்து 


ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் நட்பு குழுவினர் சாலையோரமாக மரம் நடும் உன்னதமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






இன்று (11-2-2024)ஆல் ஸ்கேன் டிரஸ்ட் சார்பில் இறுன் 300வது வார மரம் நடும் பணி தூத்துக்குடி பிரையன்ட் நகர் இரண்டாம் தெருவில் இன்று 11.02.2024 மேயர் ஜெகன் பெரியசாமி  தலைமையில் நடைபெற்றது.இதில் தலைமை தாங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி மரநட்ட அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போற்றி அழகு பார்த்தது அனைவரையும் நெகிழ செய்தது.

பொதுவாக... எதுவும் விழா என்றால் விழா தலைவருக்கு தான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க படுவார் 


ஆனால் இன்று நடைபெற்ற மரம் நடும் விழாவில் .. மேயர் ஜெகன் பெரியசாமி 

 பசுமை ஆர்வலர்கள் அனைவரையும் தனித்தனியாக கௌரவித்தது சிறப்புமிக்க பெருமையாக இருந்தது என்றார்கள்.

 முன்னதாக விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல்  சிறப்பாக செய்திருந்தார்.

 தூத்துக்குடி லீக்ஸ் செய்திகளுக்காக மா.அன்பரசன்B.A,

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

தூத்துக்குடி எம்பி கனிமொழி பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக ALL CAN TRUST சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றார்

தூத்துக்குடி எம்பி கனிமொழி பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக  ALL CAN TRUST சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றார் .



இது பற்றிய செய்தியாவது:-


ALL CAN TRUST சார்பில் 295வது வார மரம் நடும் நிகழ்ச்சி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று 7.1.24 காலை தூத்துக்குடி பிரையன் நகர் அம்மன் கோயில் தெரு பகுதியில்  மரக்கன்றுகள் நடப்பட்டது. 




இந்நிகழ்ச்சியில்...

தூத்துக்குடி மாநகராட்சி மேயர்  ஜெகன் பெரியசாமி  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன் றுகளை நட்டினார். 

#ALL_CAN_TRUST_

தூத்துக்குடி

#MOHANDASS_SAMUEL

#கனிமொழிகருணாநிதி

#மோகன்தாஸ்_தூத்துக்குடி

#lion_mohandass_samuel