Tamil Nadu updates, photo news by Arunan journalist 30-3-2025
தூத்துக்குடியில் பசுமை வளர்ப்பின் அடையாளமாக "ALL CAN TRUST" அமைப்பு கடந்த 359 வாரமாக தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
🌲 மரங்களில் நிழல்கள்....!!!
இன்று காலை 7 மணி முதல் 8.45 மணி வரை, தருவை மைதானத்தின் கிழக்கு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவற்றுக்கு நீர் ஊற்றப்பட்டது.
வழக்கறிஞர் மோகன் தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பசுமை நண்பர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து 359 வாரமாக இயங்கும் இந்த பசுமைப் பணிக்காக பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
கோடைக்கால வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நிழல் தரும் மரங்கள் தூத்துக்குடி மக்களுக்கு பாதுகாப்பான உறைவிடமாக மாறுகின்றன. மரங்களின் நிழல் மட்டும் அல்லாமல், அவற்றின் சுகாதாரமான காற்றும் தூய்மையான சூழலை உருவாக்குகிறது. இதனால், வெப்பத்தைக் குறைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தலைமை தாங்கிய வழக்கறிஞர் மோகன் தாஸ், “மரங்களை வளர்ப்பதன் மூலம் நாம் வெப்பத்தை குறைத்து, சுத்தமான காற்றை பெறலாம். இது மனிதநேயத்தின் அடையாளமாகவும் நம்மை பாதுகாக்கும் கவசமாகவும் திகழ்கிறது” என்று தெரிவித்தார்.
359 வாரங்கள் கடந்தும் தொடரும் இந்த பசுமை புரட்சி, தூத்துக்குடியின் எதிர்காலத்துக்கு நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக