சனி, 29 மார்ச், 2025

தூத்துக்குடியில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு உதவி நிகழ்வு

தூத்துக்குடியில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு உதவி நிகழ்வு

தூத்துக்குடி: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குவைத் ஐடிசி மற்றும் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பில் 250 ஏழை எளிய இஸ்லாமியர்களுக்கு சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன.



ரம்ஜான் நோன்பு பெருநாளை முன்னிட்டு, நோன்பு காலத்தில் ஏற்படும் சிறு தவறுகள் மற்றும் பெருநாள் தினத்தில் பட்டினியோடு இருக்கக் கூடாதென்பதற்காக, ஃபித்ரா கொடுக்க வேண்டியது இஸ்லாமியர்களின் கடமை ஆகும். இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் குவைத் ஐடிசி சார்பில், பிரியாணி செய்வதற்கான அரிசி, சமையல் பொருட்கள் மற்றும் இறைச்சி வாங்குவதற்கான பணம் வழங்கப்பட்டது.




பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் ரூபாய் ஒரு லட்சத்தி 50,000 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. பள்ளிவாசல் தலைவர் அகமது இக்பால், நிர்வாகிகள் சுலைமான், முகமது, நவாஸ், இஸ்லாமிய அழைப்பாளர் முகமது இஸ்மாயில் மற்றும் அஜீஸ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.





இந்நிகழ்வில் உதவி பெற்ற பலரும், ரம்ஜான் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட உதவி செய்த அனைத்து நற்பணிக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக