Tamil Nadu updates
News by Arunan journalist
தூத்துக்குடி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் - 100 நாள் வேலை திட்ட நிதி வழங்காமை குறித்துப் புகார்
இது பற்றிய செய்தியாவது:-
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி வழங்காமையை எதிர்த்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (29/03/2025) சனிக்கிழமை நடைபெற்றது.
கனிமொழி எம்பி!!!
இந்த ஆர்ப்பாட்டத்தில் ....
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி கண்டன உரையாற்றி, பாஜக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.
இந்நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நகர் மன்றத் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
அரசு நிதி வழங்காமை காரணமாக ஏழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதை கண்டித்தனர்.
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!
சம்பள காசை திருடாதே!
ஏழைகள் வயிற்றில் அடிக்காதே!
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!"
தமிழக மக்கள் நலனுக்காகவே இந்த போராட்டம் நடத்தப்பட்டது என்று வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக