வெள்ளி, 28 மார்ச், 2025

பரபரப்பான தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற மாதாந்திர கூட்டம் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் வெளிநடப்பு முழு விவரம் படிக்க

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற மாதாந்திர கூட்டம் 

இன்று  நடைபெற்றது கூட்டத்தில் சொத்து வரி குடிநீர் வரி பாதாள சாக்கடை வரி உயர்த்தப்பட்தாக அதிமுக கவுன்சிலர்கள் திமுக கூட்டணி காங்கிரஸ் கவுன்சிலர்கள் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு 



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன் துனை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி  கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற மாதாந்திர கூட்டம் இன்று  28-3-2025 காலை 12 மணியளவில் நடைபெற்றது 


தூத்துக்குடி  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன் துனை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி  கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்


 – மாநகரத்தின் அறிவிப்புகள்  வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசப்பட்டது 


முன்னதாக... 

மாநகராட்சி பகுதியில் சொத்து வரி குடிநீர் வரி பாதாள சாக்கடை வரி உயர்த்தப்பட்தாக அதிமுக கவுன்சிலர்கள் திமுக கூட்டணி காங்கிரஸ் கவுன்சிலர்கள் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.



அதிமுக 

மாநகராட்சி வரி உயர்த்தப்பட்தாக அதிமுக மாமன்ற கொராடா மந்திர மூர்த்தி தலைமையில் வெற்றி செல்வன் பத்மாவதி செண்பக செல்வன் ஜெயராணி ஜெயலட்சுமி ஆகியோர் மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர் 

கம்யூனிஸ்ட் 

தீர்மானம் 4 மற்றும் 5  இவை  கம்யூனிஸ்ட் சார்பில் நிறுத்தம் செய்ய வேண்டும் என மேயர் அவர்களே என கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் முத்துமாரி கேட்டு கொண்டார் 

காங்கிரஸ் 

காங்கிரஸ் கட்சி சார்பில் 11 வார்டு லவ் குடிதண்ணீர் மீட்டர் பொருந்துதல் கவுன்சிலர் சந்திரபோஸ் -கற்பக வள்ளி -எனிட்டா குறித்து வெளிநடப்பு செய்தார்கள் .

"மேயர் ஜெகன் பெரியசாமி கடந்த 2019 ஆண்டில் அதிமுக ஆட்சியில் மாநகராட்சி வரி உயர்த்தப்பட்டது அஃது தான் அதன் பிறகு உயர்த்தப்படவில்லை என்றார்."


தூத்துக்குடியில்  முக்கிய புதிய அறிவிப்புகள், நகர வளர்ச்சி தொடர்பான திட்டங்கள், குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தீர்மானங்கள் உள்ளிட்ட நிறைவேற்றப்பட்டது.

---

. மாநகர குடிநீர் வசதிக்கான புதிய திட்டங்கள்

தூத்துக்குடி நகரில் புதிய குடிநீர் வசதி திட்டங்கள் கொண்டு வர உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.


வீடுகளுக்கு நீர் இணைப்பு செலவுகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:


600-1200 சதுரஅடி – ₹10,000


1201-1800 சதுரஅடி – ₹12,500


1801-3500 சதுரஅடி – ₹15,000


3501-5000 சதுரஅடி – ₹20,000


5001-10000 சதுரஅடி – ₹25,000


10001 மேல் – ₹40,000



குடிநீர் மாத சந்தா கட்டணம்:


வீடுகளுக்கு – ₹150 முதல் ₹300 வரை


வணிக நிறுவனங்களுக்கு – ₹450 முதல் ₹900 வரை


தொழிற்சாலைகளுக்கு – ₹450 முதல் ₹900 வரை


கல்வி நிறுவனங்கள் – ₹450 முதல் ₹900 வரை



குடிநீர் விநியோக கட்டணங்கள் வீட்டளவில் நீர் பயன்பாட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும்.


தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க விரைவில் புதிய நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

---

. கழிவுநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள்


நகரில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கழிவுநீர் சேகரிப்பு இணைப்பிற்கான கட்டணங்கள்:


600 சதுரஅடி – ₹7,500


1200 சதுரஅடி – ₹10,000


3500 சதுரஅடி – ₹15,000


5000 சதுரஅடி – ₹20,000


10000 மேல் – ₹40,000



மழைநீர் வடிகால் வசதி ஊராட்சி, மாநகராட்சி அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் விரைவில் செயல்படுத்தப்படும்.


இந்த திட்டத்திற்காக விரைவில் ஒரு தனிப்பட்ட குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மழைக்காலங்களில் நகரத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக 15 புதிய வடிகால் அமைப்புகள் உருவாக்கப்படும்.

---


 மாநகர போக்குவரத்து மேம்பாடு மற்றும் புதிய வாகனங்கள்


தூத்துக்குடியில் பொதுப்போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.


புதிய அரசுப் பேருந்துகள் மற்றும் நகர போக்குவரத்து வாகனங்கள் சேர்க்கப்பட உள்ளன.


மாநகராட்சி மற்றும் தனியார் பஸ்கள் ஒன்றிணைந்து செயல்பட புதிய திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.


புதிய வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன:


தனியார் நிறுவனத்திலிருந்து வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.


M/s. Paulkani Travels, Thoothukudi எனும் நிறுவனம் மாநகராட்சிக்கு வாகனங்களை வழங்க ஒப்பந்தம் பெற்றுள்ளது.


ஒப்பந்த காலம் – 01.04.2025 முதல் 30.09.2025 வரை.


ஒப்பந்த தொகை – ₹38,850.

---

.

பொதுமக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு


நகரில் பொதுமக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன.


பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள்


நகரின் முக்கிய பகுதிகளில் ஒருமுறை பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்படும்.


வணிக நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


தூய்மை இந்தியா திட்டம்


மாநகராட்சி நகரின் முக்கிய சாலைகள், கடற்கரை மற்றும் மொத்த சந்தை பகுதிகளில் தினமும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


வீடுகளிலிருந்து குப்பைகள் நேரடியாக சேகரிக்க புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும்.


குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு மானிய திட்டங்கள்


அரசு குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு தண்ணீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களில் தளர்வு வழங்கும்.


இந்த மானிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

---


கட்டுமான அனுமதிகள் மற்றும் புதிய கட்டிட திட்டங்கள்


புதிய கட்டிட அனுமதிகள் வழங்கும் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


நகரில் உயரமான கட்டடங்கள் கட்ட அனுமதி பெற புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


தொலைக்காட்சி கோபுரங்கள் மற்றும் அலைவரிசை அனுப்பும் கோபுரங்களை கட்ட அனுமதி பெற, மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் தேவைப்படும்

---


வரி விதிப்பு மற்றும் கட்டண மாற்றங்கள்


சொத்து வரி மற்றும் குடிநீர், கழிவுநீர் கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

---

தூத்துக்குடியின் எதிர்கால வளர்ச்சி


தூத்துக்குடியில் நகர வளர்ச்சியை கண்காணிக்க மாநகராட்சி புதிய குழு அமைக்க திட்டமிட்டுள்ளது.


குடிமக்கள் கோரிக்கைகளை நேரடியாக மதிப்பீடு செய்யும் முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.


குடிமக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த, மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்படும்.

. குழந்தைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையம்.

தூத்துக்குடி நகரில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் (Child Help Desk 1098) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், துன்புறுத்தல், பாலியல் சிக்கல்கள், வீடு தவறி சுற்றித் திரிவது போன்ற நிலைகளை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்கு உதவ 1098 தொலைபேசி மையம் உதவியாக இருக்கும்.

இம்மையம் 150 சதுரஅடி பரப்பளவில் 24 மணிநேரமும் செயல்படும்.


மாநகராட்சி அலுவலகத்துடன் இணைந்து செயல்படும் இது அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்பட உள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்காக மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒரு தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அழைத்துக் கொள்ளப்பட்ட குழந்தைகளுக்கு தற்காலிக பாதுகாப்பு, மனநலம் சார்ந்த ஆலோசனை, கல்வி, உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படும்.

---

தூத்துக்குடியில் நகர வளர்ச்சி பணிகள் முன்னேற்ற பாதையில் இருப்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நகர வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

தூத்துக்குடி லீக்ஸ் -க்காக செய்தியாளர் அருணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக