Tamil Nadu updates,
photo news by Arunan journalist
தூத்துக்குடியில் புத்தொழில் களம் – இளைஞர்களுக்கான புதிய முயற்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்
கனிமொழி கருணாநிதி தலைமையில் "புத்தொழில் களம்" என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி இளைஞர்களின் திறமையை வெளிக்கொணரவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பு ஏப்ரல் 5, 2025 அன்று தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெறும். இதில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
புத்தொழில் களம் - வாய்ப்புகள் வெளிச்சம்
18 முதல் 35 வயது வரையிலான தொழில் முனைவோர்களை இலக்கு கொண்டு, சமூக மாற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முயற்சியாக "புத்தொழில் களம்" அமைகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மூன்று சிறந்த திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
நடுவர் குழுவில் ...
Naturals Beauty Salon India Pvt. Ltd. நிறுவனத்தின் இணை நிறுவனர் சி.கே. குமரவேல், CIEL HR Services Pvt Ltd மற்றும் Ma Foi Foundation and Groups இணை நிறுவனர் லதா பாண்டியராஜன், Pearl Shipping Agencies நிறுவனர் . ஆர். எட்வின் சாமுவேல் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இலட்சியத்தை நோக்கி – கனிமொழி கருணாநிதி
"தூத்துக்குடி இளைஞர்களின் கனவுகளையும் திறமையையும் நம்புகிறேன்.
நமது மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கும்" என கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
தேசிய இளைஞர் தினத்தில் தொடங்கிய இந்த முயற்சிக்கு 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இறுதிப் போட்டியாளர்களின் பட்டியலை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
நிகழ்வு விவரங்கள்:
தேதி: 5 ஏப்ரல் 2025 (சனிக்கிழமை)
இடம்: தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையம்
தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் "புத்தொழில் களம்" நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று திரு. கனிமொழி கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக