நாளிதழ் செய்தி:
தூத்துக்குடி மகளிர் தின விழா கோலாகலம்
தூத்துக்குடி, ஏப்ரல் 1:
தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியில் தாயகம் டிரஸ்ட், BMP ஏர்போர்ட் டவுன்ஷிப் மற்றும் RKM LAND PROMOTERS இணைந்து நடத்திய 17 ஆம் ஆண்டு மகளிர் தின விழா மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது. விழாவில் சுமார் 2,000 மகளிர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
விழாவிற்கு RKM LAND PROMOTERS ஜமீன் கிருஷ்ணன் தலைமை தாங்க, தாயகம் டிரஸ்ட் இயக்குனர் ஜெயக்கனி விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்கள், ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மக்களை கவர்ந்தது.
சமூகநல அலுவலர் திலகவதி, தூத்துக்குடி மாநகராட்சி சமூக அமைப்பாளர்கள் சரவணபாமா, தேவ சகாய அருணி உள்ளிட்டோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.
தமிழன்டா கலைக்குழு நிறுவனர் ஜெகஜீவன் பாரம்பரிய கலாச்சாரம், உணவு, மருத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகளை ஜமீன் கிருஷ்ணன், ஜெயக்கனி விஜயகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர் விஜயகுமார் வழங்கினர்.
விழா நிறைவில் அறுசுவை உணவு வழங்கப்பட்டதுடன், நன்றியுரை மூலம் விழா நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக