திங்கள், 15 நவம்பர், 2021

வெளிப்பட்டது டவுள் -டிரிபிள் கோஷ்டிகள்!!! ஜயா ராவ் பகதூர் 152 பிறந்த விழா !! எந்த பகுதியில் மணி மண்டபம்!!!!

தூத்துக்குடி மக்களுக்கு குடிநீர் கொண்டு வந்த கோமான் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 152 வது பிறந்தநாள் விழா இன்று 15-11-2021 நடைபெற்றது.



இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பாக ஐயா குருஸ் பர்னாந்து திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வந்திருந்தார்கள்?


அதிமுகவில் .....

தூத்துக்குடியில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான S.P.சண்முகநாதன் தலைமையில் ஒரு கோஷ்டி மாலை அணிவித்தார்கள் அடுத்தாக சிறிது நேரத்திலே ....அதிமுக முனனாள் அமைச்சர் சி.த.செல்ல பாண்டியன் தலைமையில் ஒரு தனி கோஷ்டி வந்தது.


திமுகவில் .....?

ஏற்கனவே திமுக - வில் N.P.ஜெகன் தலைமையில் M.P. கனிமொழி ஆதரவு கோஷ்டி இருக்குது. இதில் நேற்றே அனமச்சர் கீதாஜீவன் ஆதரவு கோஷ்டி M.P.கனிமொழி அவருடன் மாலை அணிவித்தது. இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு கோஷ்டியுடன் மாலை அணிவித்தார்.

காங்கிரஸில் .....?

காங்கிரஸில் முரளிதரன் ஆதரவு சோஷ்டி மாலை அணிவித்து பின்பு டேவிட் பிரபா பர் மற்றும் ஸ்ரீனவ குண்டம் எம் எல் ஏ ஊர்வசி அமிர்தராஜ் கோஷ்டி யினர் மாலை அணிவித்தன ர்  ஐஎன்டியூசி சார்பாக  காங்கிரஸின் முன்றாவது ஆதரவு கோஷ்டியும் தனியாக வந்து மாலை அணிவித்தார்கள்

அமமுக-வில்........?

அமமுக - வில் அமைப்பு செயலாளர் இரா. ஹென்றி Ex மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் ஒரு கோஷ்டி தனியாக வந்து மாலை அணிவித்தனர். பின்பு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பிரைட்டர்-மற்றும் மாணிக்காராஜா தலைமையில் ஒரு கோஷ்டி தனியாக வந்து மாலை அணிவித்தார்கள்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பாக மாலை அணிவிப்பு

மற்ற அமைப்புகள் தனி தனியாக வந்து மாலை அணிவித்து சென்றார்கள்.





இப்படி ஒரே அரசியல் கட்சியில் இருந்து கொண்டு ...தூத்துக்குடி மாநகர தந்தை என அழைக்க ப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்து 152 பிறந்த நாள் நிகழ்ச்சியில் இரண்டு டவுள் கோஷ்டி மூன்று டிரிபிள் வந்து மாலை அணிவித்து தங்கள் கட்சி யில் கோஷ்டி யுத்தத்தை அவர்களே வெளிகாட்டி விட்டார்கள் என்கிறார்கள்



இந்நிகழ்ச்சி நடைபெற்ற பாளை ரோடு சிக்னல் பகுதிகாலை் 9 மணியில் இருந்து 11 மணி வரை பரபரப்பாக இருந்தது. தனி தனியாக தொடர்ந்து வந்தினால் செய்தியாளர் திண்டாட்டமாகினர் அனைவரையும் கவர் செய்வதில் ரொம்ப பிஸியாக இருந்தார்கள்


மணி மண்டபம் எங்கே?



இருதினங்களுக்கு முன்பு ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்து 152 -வது பிறந்த நாள் முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின்  தூத்துக்குடி நகருக்கு குடிநீர் கொண்டு வந்த மாநகர தந்தை ராவ்பகதூர் குருஸ் பர்ணாந்து ஐயாவுக்கு மணிமண்டபம்  அமைக்கப்படும் என அறிவித்தார்.

நேற்று M.P கனி மொழி திருவுருவ சிலை மாலை அணிவித்தார். இப்பகுதியில் மணிமண்டபம் என கூறியதாக தெரிவிக்கிறார்கள்.  ஏற்கனவே இப்பகுதிக்கு அருகே ஸ்மார்ட் சிட்டி பேரூந்து நிலையம் கட்டுபட்டு வருவதால்? சாலை விரிவாக்கம் உறுதியாக இருக்கலாம்  அது இல்லை என்று யாராலும் கூறமுடியாது. தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா பின்புறம் ஐயா குருஸ் பர்ணாந்து அவர்களின் கல்லறை இருப்பதால் அதை மணிமண்டபம் கொண்டுவந்தால் உகந்ததாக இருக்கும் என ஒரு சிலர் கூறிவருகிறார்கள்.

இதனால் மணி மண்டபம் தூத்துக்குடியில எந்த பகுதியில் வருகிறது என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்கவேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக