newstamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
newstamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

தூத்துக்குடி: வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு

 Tamil Nadu news updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி: வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு செய்தார்.





தூத்துக்குடி: கடந்த சில நாட்களாக தொடர்ந்த கனமழையால் பாதிக்கப்பட்ட சூசைபாண்டியபுரம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இந்திய உணவுக் கழகம், பி&டி காலனி, ராஜீவ்நகர், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளை இன்று (15/12/2024) பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.



வெள்ளநீர் அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்கும், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


ஆய்வில்  அமைச்சர்கள் கீதா ஜீவன்,  அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்  எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர்  இளம் பகவத், மாநகராட்சி மேயர்  ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.


மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படும் என கனிமொழி கருணாநிதி எம்பி உறுதியளித்தார்.


ஞாயிறு, 5 மார்ச், 2023

தூத்துக்குடி வக்கீல் கொலையில் முக்கிய புள்ளி கைது இதுவரை கைதுசெய்யப்பட்டவர் விவரம்

 தூத்துக்குடி மாவட்டம் : 05.03.2023.

by police photo news

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோரீஸ்புரத்தில் கடந்த 22.02.2023 அன்று அய்யனடைப்பு சோரீஸ்புரத்தைச் சேர்ந்த பச்சைக்கண்ணன் மகன் முத்துக்குமார் என்ற வழக்கறிஞரை அவரது நகை அடகுகடை முன்பு வைத்து மர்மநபர்கள் கொலை செய்தனர்.

 இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனால் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.


 தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து உடனடியாக சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்வதற்கு தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர்  சுரேஷ்  தலைமையில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  சண்முகம், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.



அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவரின் தம்பி சிவக்குமாரை கடந்த 2019ம் ஆண்டு தூத்துக்குடி நீதிமன்றம் அருகில் வைத்து கொலை செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் ராஜேஷ் மற்றும் பீட்டர் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்க விடாமலும், வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வந்ததாக கோரம்பள்ளம் ராஜேஷ், பீட்டர் மற்றும் அவரது உறவினர்களின் தூண்டுதலின் பேரில் இக்கொலை நடந்துள்ளது தெரியவந்தது.



கொலை குற்ற செயலில் ஈடுபட்ட எதிரிகளை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் இலங்கேஸ்வரன் (29), அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் இராஜரத்தினம் (29),  ஆறுமுகநேரியைச் சேர்ந்த சிங்கராஜா மகன் வேல்முருகன் (29), செல்வக்குமார் மகன் முத்துராஜ் (23) மற்றும் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த  ஜெயராமன் மகன் ரமேஷ் (49) ஆகிய 5 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவர்கள் மீது பல கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளது


மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கூட்டாம்புளியைச் சேர்ந்த நமோநாராயணன் (33) மற்றும் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த லெட்சுமணபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தனிப்படை போலீசார் விசாரணையில் இந்த மேற்படி கொலை குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஆறுமுகநேரியை பூர்வீகமாக கொண்ட பெருமாள் மகன் பாஸ்கர் (29) என்பவரது ஆட்கள் என்றும், மும்பையில் இருந்து கொண்டு அவர்களை அனுப்பி கொலை செய்துள்ளார் என்றும்  தெரியவந்தது. மேலும் இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற 21 வழக்குகள் உள்ளது. 


இவர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ரவுடி பதிவேடு உள்ளது. மேலும் இவர் ஆறுமுகநேரி ஆதவா ரெஸ்டாரென்ட் உரிமையாளர் பாலகருப்பசாமி என்பவரை 2022ம் ஆண்டு இவரது ஆட்களை அனுப்பி கொலை முயற்சி செய்த வழக்கிலும் தலைமறைவாக இருந்து வந்தார்.



மேற்படி கொலை குற்ற செயலுக்கு மூளையாக செயல்பட்ட ஆறுமுகநேரியைச் சேர்ந்த பாஸ்கர் (29) என்பவரை தீவிரமாக தேடி வந்த தனிப்படை போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

வியாழன், 24 நவம்பர், 2022

பழிக்கு பழியாக.. கொலை செய்ய பதுங்கி இருந்த ஐந்து பேர் கைது தூத்துக்குடி தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை

 தூத்துக்குடி மாவட்டம் : 24.11.2022

இன்று (24-11-2022) ஓட்டப்பிடாரம் பகுதியில் சட்ட விரோத கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ரகசியமாக கூடியிருப்பதாக ஓட்டப்பிடாரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுப்படி  மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர்  முத்துராமன், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் டீம் கிளம்பி னார்கள்.

ஓட்டப்பிடாரம் பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கு  5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 பெரிய அரிவாள்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் அவர்கள் குலசேகரநல்லூர் நடு தெருவைச் சேர்ந்த எட்டப்பன் மகன் முத்துமாரியப்பன் (23), சீவலப்பேரி மடத்துப் பட்டியைச் சேர்ந்த செல்வகணபதி மகன் சிவமுருகன் (22), ஆறுமுகநேரி செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்பாண்;டி மகன் சிவபிரகாஷ் (19), திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் காமராஜ் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் முத்துராமன் (23) மற்றும் கவர்ணகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (28) ஆகியோர் என்பதும்,  முத்துமாரியப்பன் என்பவருக்கும், குலசேகரநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மாயகிருஷ்ணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது, 



இதன் காரணமாக 7 மாதத்திற்கு முன்னர் மேற்படி மாயகிருஷ்ணனை முத்து மாரியப்பன் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் முத்துமாரியப்பனை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.


மேற்படி முத்துமாரியப்பன் கடந்த  27.10.2022 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் விடுதலையானதையறிந்து மாயகிருஷ்ணன் மற்றும் அவரது தந்தை உட்பட சிலர் முத்துமாரியப்பனை அரிவாளால் தாக்கியுள்ளார். 


இதில் முத்துமாரியப்பன், மாயகிருஷ்ணனிடமிருந்து தப்பி காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் மதுரை சென்று அங்கு தங்கியிருந்துள்ளார். 


மதுரையிலிருந்த  முத்துமாரியப்பன், மாயகிருஷ்ணனை தீர்த்துக்கட்டினால் தான் வாழமுடியும் என்று அவரை கொலை செய்வதற்காக மதுரையிலிருந்து திருநெல்வேலி சென்று அங்கிருந்து மற்ற 4 நண்பர்களையும் அழைத்துக்கொண்டு ஓட்டப்பிடாரத்திற்கு வந்து ரகசியமாக முத்துமாரியப்பன் வீட்டில் பதுங்கியிருந்ததும்,...தெரிய வந்தது.


இந்த கொலை சம்வத்தை அரங்கேற்றுவதற்கு அவர்களுக்கு நிறைய பணம் தேவைப்பட்டதால் ....நேற்று ஒருவரை வழிமறித்து, அரிவாளை காண்பித்து மிரட்டி அவரிடமிருந்து ரூபாய் 5000/- கொள்ளையடித்துள்ளதும், இன்னும் பலரிடம் கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.


3 அடுக்கு பாதுகாப்பில் சரியான தருணத்தில் மாவட்ட தனிப்பிரிவு உளவுத்துறையினர் ஆங்காங்கே துப்புகள் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததால் மேற்படி எதிரிகள் சட்ட விரோதமாக கூடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தனிப்படை போலீசார் மேற்படி எதிரிகள் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 3 பெரிய அரிவாள்களையும்  பறிமுதல் செய்தனர்.


பழிக்குப்பழியாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய கும்பலை 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் தீவிர கண்காணிப்பில் துரிதமாக செயல்பட்டு கொலையை தடுத்த ஓட்டப்பிடாரம் தனிப்பிரிவு காவலர் பாலமுருகன் மற்றும் மணியாச்சி காவல்துணை கண்காணிப்பாளர் லோகேஷ்வரன் தலைமையிலான தனிப்படையினரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

தென்மண்டல காவல்துறை தலைவர்  அஸ்ரா கார்க் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப மேற்பார்வையில் தென் மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 அடுக்கு (3 Tier Monitoring System) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது


வியாழன், 17 நவம்பர், 2022

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் பொது மக்கள் VS திருநங்கைகள் பயங்கர மோதல் பொது மக்கள் உடன் திருநங்கைகளை விரட்டியடித்த போலீசார் அடி தாங்க முடியாமல் அலறிய திருநங்கைகள் நடந்தது என்ன? விவரமறிய உள்ளே செல்க ...

 தூத்துக்குடியில் தற்காலிக பழைய பேருந்து நிலைய பகுதியில் (16-11-2022)நேற்றிரவு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார் முதியவர் அப்போது அங்கு வந்த நாலைந்து திருநங்கைகள் இவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர் அதற்கு பணம் ஏதும் இல்ல உனக்கு கொடுக்கனும்னு கட்டாயமா? இப்படி யாரிடமும் தொந்தரவு செய்யாதீர்கள் என முதியவர் கூறினாராம். 

 உடனே திருநங்கைகள் சேர்ந்து அந்த முதியவரை கை தட்டி கெய்ரோ பண்ணி பொட்ட என  ஆபாசமாக பேசி அடித்தனர். ஹெல்மெட் வைத்து திருநங்கைகள் அடித்ததால் அவர் மயங்கி கீழே விழந்து விட்டார்.

அப்பகுதியில் ஆட்டோகாரர்கள் பொதுமக்கள் கூட்டம் கூடி விட்டது சிலர் திருநங்கைகள் ஒரு முதியவரை திட்டியபடி அடித்து உதைப்பதை தங்களது செல்போன் ல போட்டோ வீடியோ எடுத்தனர். 


இதைப் பார்த்து ஆவேசமான திருநங்கைகள் செல்போன்களை பிடுங்கவும் அதை வீசுவும் செய்தனர்.பொது மக்கள் பயந்து சிதறினார்கள். திருநங்கைகளால்

பஸ் போக்குவரத்து சில நிமிடம் தடை பெற்றது.


அப்போது தூத்துக்குடிமத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ரோந்து வந்து இருந்தார்.


திருநங்கையின் பிடியிலிருந்து முதியவரை மீட்டு பஸ் நிலைய 

ஒ பி.ஸ்டேஷன்-க்கு ெகாண்டு வந்தார்கள் செல்போன் பறிகொடுத்தவரும் ஒ பி-க்கு வந்தார்கள். அனைவரையும்

 இன்ஸ்பெக்டர் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது திருநங்கைகள் 10 பேர் பஸ் நிலையத்தில் வர விடாமல் கூச்சல் போட்டு கொண்டிருந்தார்கள். 

இரவு நேரத்தில் பஸ் கிடைப்பதே சிரமம் இதில் இவங்க பிரச்சினை வேறா? பொதுமக்கள் போலீசிடம் போய் இவங்களை முதலில் இங்கிருந்து துரத்துங்கள் என முறையிட்டனர்.

அங்கிருந்த ஆட்டோ காரர்களும் ஏன் திருநங்கைகள் இப்படி நடந்து கொள்கிறார்கள் போலீஸ் வந்தும் கெய்ரோ பண்ணுகிறார்களே என கொதித்து போனார்கள்.

விசாரித்து கொண்டிருக்கும் போதே (பயணிகள் )பொதுமக்கள் பஸ் வருவதை தடுக்காதீர்கள் எவ்வளவோ கூறி கேட்கவில்லை உடன் திருநங்கை அடிக்க முயன்றதும் கல் எறிய முற்பட்டனர். தற்காலிக பேருந்து கட்டடட பணி கம்புகளை பொதுமக்கள் எடுத்து வந்து திருநங்கைகளை அடிக்கவும் அங்கிருந்த ஆட்டோ காரர்களும் உடன் வந்தார்கள் போலீசும் கையில் கம்புடன் திருநங்கைகளை துரத்தி பிடித்து அடித்து நையப் புடைத்தனர்.


இருட்டான பின்பகுதிக்கு திருநங்கைகள் 10 பேரும் தப்பித்தால் போதும் கதறியபடி ஒடி பஸ் நிலைய மறு பகுதி காய்கறி மார்க்கெட் தாண்டி தப்பினர்.

இதனால் பஸ் நிலைய பகுதியில் பெரும் பதற்றம் பரபரப்பு ஏற்பட்டது.


சிறிது நேரத்தில் 16 க்கு மேற்பட்ட திருநங்கைகள் தென்பாகம்காவல்

நிலையம் முன்பு இரவு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர் பின்பு இரவு 10 மணியளவில் மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு 50 க்கும் மேற்பட்ட 

மூத்த திருநங்கைகள் அமைப்பு சார்பாக  சேர்ந்து வந்து தங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் இனி தவறு நடக்காது

என பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 


மத்திய பாகம் காவல் நிலையத்தில் செல்போன் பறிகொடுத்தவர் மற்றும் பாதிக்கப்பட்ட முதியவர் புகார் கொடுத்திருப்பதாகவும் ...


வழிப்பறி பணம் பறித்தல் ஈடு பட்ட

திருநங்கைகள் 12 பேர் மீது வழக்கு

பதிவு செய்ய போவதாகவும் தகவல்


 தங்கள் மீது வழக்கு பதிய வேண்டாம் என திருநங்கைகள்

இன்றும் (17-11-2022) மத்திய பாகம் காவல் நிலையத்தில் குவிந்துள்ளார்கள்.


இது குறித்து காவல்துறை நட்பு வட்டாரத்தில் தெரிவித்தாவது ...


சமீப காலமாக தூத்துக்குடி பகுதியில் திருநங்கைகள் பற்றி பொதுமக்களிடம் இருந்து புகார் ரொம்ப கூறி கொண்டிருக்கிறார்கள்

நகரில் உள்ள வீடியோ கேமராவிலும் திருநங்கைகள் செய்யும் செயல்கள் கவனித்து தான் வருகிறோம்.


பஸ் நிலையத்தில் பஸ்ஸின் வருகைக்காக நாற்காலியில் அமர்ந்தவர் பணம் பெறும் எதிரே நின்ற திருநங்கையை சும்மா ஏறிட்டு கண்னால் பார்த்துள்ளார். உடனே ஏன் என்னை பார்த்து முறைக்கிறாய் என திருநங்கைகள் சேர்ந்து அடித்துள்ளனர்.   நிமிர்ந்து பார்க்க வே அச்சத்தை உண்டாக்கிறார்கள்.


 தூத்துக்குடி

பஸ்நிலைய பகுதியில் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை பார்க்கும் பெண் பிள்ளைகள் மற்றும்

படிக்க சென்று பெண் பிள்ளைகளிடமும் மினி பஸ் ல டிக்கெட் எடுக்க வே காசு வைத்திருக்கும் அவர்களை விடாமல் பின்தொடர்ந்து சாலையில்  வழிவிடாமல் தொட்டு பணம் கேட்கிறார்கள் பிடுங்கி றார்கள் சிலரிடம் மொத்தமாக ... பயந்து போய்  பறிகொடுக்கிறார்கள்.


பணம் தரவில்லை என்றால் சாலையில் நிறுத்தி

குடும்ப பெண்களிடம் உன் புருஷன் விபத்து ல இன்னும் 7 நாள் ல சாவாண்டி இது என் சாபம் திருநங்கை சொன்னா பழிக்கும் என பயமுறுத்தி விடுகிறார்கள் தலையில் கை வைத்து அமுக்கு கிறார்கள்.


தூத்துக்குடியில் நாடகத்தில் பெண் வேடம் போடுவது போல் உதட்டில் லிப்ஸ்டிக் சுடு தார் அணிந்து திருநங்கை உருவத்தில் சிலர் நடமாடுவதும் வழிப்பறி திருட்டு கஞ்சா விற்பனை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என கூறினார்கள்.

தற்போது தூத்துக்குடி பஸ் நிலைய ஆட்டோ பகுதியில் தங்கள் வாகனங்களில் திருநங்கைகளை இனி ஏற்றிட மாட்டோம் கூறுகிறார்கள்.

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கிட்டதட்ட அனைத்து திருநங்கைகள் கலந்து கொண்டு போராட்ட களத்தில் தங்களது முழுமையான எதிர்ப்பை தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலை முடுவதில் பெரும்பங்கு வகித்தார்கள் பாராட்டை பெற்றார்கள்.

 .இதனால் பொதுமக்களிடம் திருநங்கைகள் மீது நன்மதிப்பு ஏற்பட்டிருந்தது. நேற்று 16-11-2022 தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய பகுதியில் நடந்த இச்சம்பவம் அதிருப்தியை தந்து விட்டது.





வியாழன், 13 அக்டோபர், 2022

தருவ வாரிய பணியாளர்கள் மற்றும் ஒய்வூதியர்கள் குடும்ப ஒய்வூதியர்கள் உரிமை மீட்பு சங்கம் மாநில - மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

தருவ வாரிய பணியாளர்கள் மற்றும் ஒய்வூதியர்கள் குடும்ப ஒய்வூதியர்கள் உரிமை மீட்பு சங்கம் உருவானது. இதனை தொடர்ந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டனர் ...

சென்னையில் தருவ வாரிய பணியாளர்கள் மற்றும் ஒய்வூதியர்கள் குடும்ப ஒய்வூதியர்கள் உரிமை மீட்பு சங்கம் உதயமானது.

இதுபற்றிய செய்தியாவது -

தமிழகத்தில் அரசு குடிநீர் வடிகால் பணியில் வேலை செய்வர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்கள் கடந்தகாலங்களில் தங்களின் பிரச்சினைக்களுக்காக அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் மிகுந்த அளவில் அலைக்கழிக்கப்பட்டு வந்தார்கள்.


இதனால் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் குடும்ப ஒய்வூதியர்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என சமீபத்தில் அனைவரும் கலந்து  கொண்ட கூட்டம் நடைபெற்றது.


அதில் தருவ வாரிய பணியாளர்கள் மற்றும் ஒய்வூதியர்கள் குடும்ப ஒய்வூதியர்கள் உரிமை மீட்பு சங்கம் உருவாக்கினர். 

கடந்த 2.10.2022 அன்று தருவ வாரிய பணியாளர்கள் மற்றும்  ஒய்வூதியர்கள் குடும்ப ஒய்வூதியர்கள்  உரிமை மீட்பு சங்கம் கூ ட்டம் நடைபெற்றது.


அக் கூட்டத்தில் சங்க மாநில மாவட்ட  நிர்வாகிகள்  தேர்வு செய்யப்பட்டார்கள்.


இதில் மத்திய சங்க நிர்வாகிகளாக

கீழ்க்கண்டவர்கள் ஓய்வுப்பெற்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தலைவர்

G இராமனுஜம், க.கா.

செல்: 7550204560

பொதுச் செயலாளர்

பொன்.ஆறுமுகம், க.கா.

செல்: 9444630475

பொருளாளர் 

இரா. வள்ளுவன், AAO

செல்: 9444630475

துணைத் தலைவர்கள்

P. இராமச்சந்திரன்

செல்:9894642264

பொன். மகாலிங்கம்

செல்: 7339023873


துணைப் பொதுச் செயலாளர்கள்

பாண்டி, ஆ.அ.

செல்: 9994534039

K.லட்சுமணன்,க.கா.

செல்: 9994377468

செல். G. பகலவன்,அ.உ.

செல்.9443375160


தலைமை நிலைய செயலாளர்

ஜெ.யோகராஜ், அ.உ.

செல். 9150913983

மகளிர் அணி தலைவி

 கமலா, ஆ.ஆ.

செல். 8072580858

 இணைச் செயலாளர்கள்

T. கோதண்டபாணி, நி.பொ.

செல். 9345427742

Y.V. சேகர், க.கா.

செல். 8056069981


செயற்குழு உறுப்பினர்கள்

1.M.கோதண்டம், அ.உ.,

செல். 9840100645

2. முகம்மது அம்ருதீன்,அ.உ.

செல். 7092839036

3..M.மோகன்ராஜ், தட்டச்சர்

செல். 9710282825

4. முனுசாமி, காவலர்

செல். 9444548557

5.முனுசாமி, ப.உ.

செல். 9994683389

6..A.நாகராஜன், க.கா.

செல். 9362942754

7.A.சுபாஷ், குடும்ப ஓய்வூதியர்

செல் 6380701049


தென் மண்டல நிர்வாகிகள் பட்டியல்



மதுரை மாவட்டம்


R.நாகராஜன், உ.க.அ.

செல்: 9942083934


திண்டுக்கல் மாவட்டம்

  A. ராஜு, க.கா.

செல்: 9942140087

தேனி மாவட்டம்

T.மாயாண்டி உதவியாளர், க.கா. செல்: 9976618342


சிவகங்கை மாவட்டம்

P. குமார், உ. க.அ.

செல்: 9442162768

ராமநாதபுரம் மாவட்டம்

மனோகரன், க.கா.

செல்: 9442640990

விருதுநகர் மாவட்டம்

வி.பாண்டிமுருகன், உ.க.அ.

செல்: 9436209033

V.ஜெயபாண்டி (பொறுப்பாளர்) தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம்

V. ஜெயபாண்டி, மின்அலுவலர்

செல்: 8618581781


திருநெல்வேலி மாவட்டம் : 

கன்னியாகுமாரி மாவட்டம்

S. கணேசன், க.கா.செல்: 9842679292

ஆகியோர் தேர்வு செய்யபட்ட பட்டியல் வெளியானது.