Tamil Nadu news updates
photo news by Arunan journalist
தூத்துக்குடி: வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி: கடந்த சில நாட்களாக தொடர்ந்த கனமழையால் பாதிக்கப்பட்ட சூசைபாண்டியபுரம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இந்திய உணவுக் கழகம், பி&டி காலனி, ராஜீவ்நகர், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளை இன்று (15/12/2024) பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வெள்ளநீர் அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்கும், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படும் என கனிமொழி கருணாநிதி எம்பி உறுதியளித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக