தூத்துக்குடியில் கனமழை பாதிப்பு: ஆய்வில் ஈடுபட்ட கனிமொழி எம்பி
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் பாராளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி இன்று (15.12.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் உள்ள ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப் பாலம் மற்றும் ஏரல் - குரும்பூர் தாமிரபரணி ஆற்றுப் பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர், ஆத்தூர் பகுதியில் தங்க வைக்கப்பட்ட தெற்கு ஆத்தூர் மக்களை சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து நேரடியாக விசாரித்தார்.
இந்நிகழ்வில், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்குபெற்ற இந்த ஆய்வின் மூலம் மக்களின் அவசர தேவைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக