Tamil Nadu updates,
Photo news by sunmugasuthram Reporter
தூத்துக்குடியில் கனமழை பாதிப்பு: மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று துரிதப்படுத்தி வருகின்றன.
இது பற்றிய செய்தியாவது :-
அமைச்சர் கீதா ஜீவன்!!!
தூத்துக்குடி: நகரத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் வெள்ளநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இரயில்வே வளாகத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளை அவர் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
அமைச்சர், ரஹமத் நகர், கோக்கூர், கந்தன் காலனி, ராஜீவ் நகர், மேல அலங்கார தட்டு மேற்கு பகுதிகள், பசும்பொன் நகர், சங்கர் காலனி, சின்னமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு குடியிருப்புகளைச் சேர்ந்த மக்களை சந்தித்து, நிவாரண நடவடிக்கைகளை முன்னேற்ற உறுதிமொழி அளித்தார்.
ஆய்வின்போது...
நகராட்சி நிர்வாக அதிகாரிகள் சிவராசு மற்றும் மதுபாலன், திமுக பிரமுகர்கள் ஆனந்தசேகரன், நிர்மல்ராஜ், ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். ரயில்வே மற்றும் நகராட்சி துறை பொறியாளர்கள் ஆகியோர் இந்த பணிகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் சிரமங்களை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.
மேயர் ஜெகன் பெரியசாமி!!!
தூத்துக்குடி மாநகரில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலைமையை சரி செய்யும் பணிகளில் மேயர் ஜெகன் பொியசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தனசேகா்நகர், குறிஞ்சிநகர், நான்காம் கேட் போன்ற பகுதிகளை பார்வையிட்டு மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.
மேயர் கூறுகையில், 16-18 வார்டுகளில் புறநகரிலிருந்து பக்கிள் ஓடைக்கு வரும் நீர் குறைந்துள்ளதாகவும், மழைநீர் வடியத் தொடங்கியதால் சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அவருடன் மாநகராட்சி ஆணையர், கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் பகுதி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக