தூத்துக்குடி, 3 ஆம் மைல், இந்திரா நகர், 3A/389 (1) என்ற முகவரியில் வாழ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் 04.10.2021 அன்று இறந்தார்
இதனை தொடர்ந்து, 05.10.2021 அன்று தூத்துக்குடி, மாநகராட்சி மின் தகன மையத்தில் பிற்பகலில் தகனம் செய்யும் பொருட்டு அன்று காலையில் அங்குள்ள அலுவலகத்தில் அனுகி முன்தகவல் கொடுக்கச் சென்றனர்.
அப்போது, குலசை தசரா விழாவிற்குப் பணியாளர்கள் சென்றுவிட்டதால் இன்று விடுமுறை என்று கூறியுள்ளனர்.???
இதனையடுத்து, மீண்டும் தெரிந்தவர் மூலமாகப் பேசியபோது சரி என்று ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து பிற்பகல் 3.45 மணி அளவில் தகனப் பகுதிக்குக் இறந்தவர் உடலை கொண்டு செல்லப்பட்டது.
அங்குள்ள பணியாளர்கள், ஆயிரம் ரூபா கேட்டுள்ளனர். அதற்கு உறவினர் கஷ்டப்பட்ட குடும்பம் எனவே 400 ரூபா தருகிறோம் என்று கூறியுள்ளார்கள். அதற்குப்பின் அவர்கள், ஏற்கெனவே ஓர் உடல் எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, 7 மணிக்குத் தான் உங்கள் உறவினர் உடலை உள்ளே வைப்போம்.
எரிந்து முடிவதற்கு ஒன்பது மணி ஆகும், இயல்பாக எங்களுக்கு ஆறு மணிக்குப் பணி முடிந்துவிடும்; நாளைக்குத்தான் சாம்பல் தருவோம் என்று கூறினர்.
அதற்கு உறவினர் இன்றைக்குப் பால் வைத்துள்ளோம்; சாப்பாடு எல்லாம் சொல்லியாச்சி என்று கூறியுள்ளார். அதற்குப் பணியாளர், உங்களுக்காகத்தான் வேலை செய்ய வேண்டும்; எனவே ஆயிரம் ரூபா தர வேண்டும், 5.30 மணிக்கு உள்ளே வைத்து விடலாம் என்று கூறினர். வேறு வழியின்றி, அவர்கள் கேட்ட பணம் கொடுத்தனர். விடுமுறை என்றும் 7 மணிக்குத்தான் வைப்போம், மறு நாள்தான் சாம்பல் தருவோம் என்றும் பிறகு 5.30 மணிக்கு என்றும் கூறியவர்கள் 4.20 மணிக்கு உள்ளே வைத்து 5.30 மணிக்குச் சாம்பல் தந்துவிட்டனர். ஏற்கெனவே உயிரை இழந்து வேதனையில் இருப்பவர்களின் மன நிலையையும், இந்த இடத்தில் ஒன்றும் பேசக்கூடாது என்ற மனநிலையையும் பயன்படுத்திக் கொண்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றனர். பணமென்றால் பினமும் வாயைப் பிளக்கும் என்பார்கள்
இறந்தபின்பும் பணம் பிடுங்கும்? கொடுமை? தூத்துக்குடி மாநகராட்சியின் மின் தகனம் சுடுகாட்டு அவலத்தை என்னவென்று சொல்வது ?
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இங்கே நடைபெறும் அவலத்தை உடனே களைந்துயெறிய வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக