தூத்துக்குடி சங்கர் காலனியில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி 3ம் மைல் அருகே உள்ள சங்கர் காலனி - காமாராஜ் நகர் போலீஸ் குடியிருப்பு பகுதிகள் உள்ளது.
யாரும் இல்லாத - வெளியூர் சென்றதால் பூட்டி கிடக்கும் வீடு களில் திருடர்கள் கைவரிசை காட்டுவது உண்டு.
ஆனால் மேற்கூறிய இப்பகுதிகளில் ஆட்கள் உள்ள வீட்டில் கூட இரவில் தூங்கும் போது நைசாக வீட்டின் பூட்டை உடைத்து உள்புகுந்து துணி மணி மற்றும் கையில அகப்பட்டதை எல்லாம் திருடி சென்று விடுகிறார்களாம்?
கடந்த வாரம் சங்கர் காலனியில் பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் 4 பவுண் தங்க நகை இரவில் திருடு போனதாக புகார் தெரிவித்தார்.
மேலும் தூத்துக்குடி சங்கர் காலனி பகுதியில் 4 வீடுகள் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் காணாமல் போயுள்ளனர், போலீஸ் விசாரித்து வருகிறது.
இதில் சிசிடிவி கேமிரா வில் மர்ம நபர் இரண்டு பேர் நடந்து செல்வதாக தெரிந்துள்ளது.
வீடுகளில் பூட்டை உடைத்து திருடும் நூதன திருடர் கள் இதுவரை காவல்துறை பிடியில் சிக்காததால் தூத்துக்குடி சங்கர் காலனி பொதுமக்கள் பீதியில் உள்ளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக