சனி, 27 நவம்பர், 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது!!! 1,10,00,000/- மதிப்பிலான முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த கண்டெய்னர் லாரிகடத்தல்? தூத்துக்குடி போலீஸ் அதிரடி நடவடிக்கை!! தூத்துக்குடி அ திமுகவினர் அதிர்ச்சி!!!

தூத்துக்குடி அதிமுக வினர் அதிர்ச்சி தூத்துக்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மகன் ஞான்ராஜ் ஜெயசிங் மற்றும்  ஏழு பேர் கள்  ரூபாய்  1,10,00,000/- மதிப்பிலான முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த கண்டெய்னர் லாரியை கடத்தி சென்றனர்.  தூத்துக்குடி மாவட்ட போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று டோல்கேட் சிசிடிவி கேமரா பதிவுகளை பின்பற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.




தூத்துக்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஜெயசிங் காரில் சென்று ஒரு கோடியே 10 லட்சம் முந்திரிப்பருப்பு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை கடத்தியதாக தூத்துக்குடி போலீசார் கைது நடவடிக்கை எடுத்து ள்ளது தெரியவந்ததும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பும்  அதிர்வலையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் அதிமுக கட்சி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



இதுபற்றி போலீஸ் தரப்பு செய்தியாவது;-

தூத்துக்குடி பிச்சையா லாரி புக்கிங் அலுவலகம் மூலமாக Tata Benz Lorry TN 04 AK 4710 என்ற கண்டெய்னர் லாரி கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து நேற்று (26.11.2021) ரூபாய் 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு தூத்துக்குடிக்கு வரும்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலூரணி விலக்கு பகுதியில் வைத்து மேற்படி லாரியை Renault Triber TN 69 BL 5555  என்ற காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து லாரி ஓட்டுநரான ஹரி (40) த/பெ. வைகுண்டம், ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்டம்  என்பவரை தாக்கி, அவரையும் லாரியையும் கடத்தி சென்றுள்ளனர். 


இதுகுறித்து மேற்படி லாரி புக்கிங் அலுவலக கணக்கர் முத்துகுமார் (43) த/பெ. சுப்பிரமணியன், ராஜீவ்நகர், தூத்துக்குடி என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி


உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஊரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப அவருக்கு லாரியை சென்ற மர்மநபர்களை கைது செய்து லாரியை மீட்க உத்தரவிட்டுள்ளார். 




 தூத்துக்குடி ஊரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர்  தலைமையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், புதுக்கோட்டை காவல் நிலைய தலைமை காவலர்கள் சக்திவேல், லெட்சுமணன், முறப்பநாடு காவல் நிலைய தலைமை காவலர் சுந்தராஜ், தட்டப்பாறை காவல் நிலைய முதல் நிலை காவலர் கணேசன், புதுக்கோட்டை காவல் நிலைய முதல் நிலைய கார்த்திகேயன், காவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் லாரி மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்களை கொண்டு அங்காங்கே உள்ளே சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு, வாகனங்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றார்கள்.


 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, காக்கநேரி என்ற இடத்தில் வைத்து கடத்தி சென்ற கண்டெய்னர் லாரி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட காரையும் கைப்பற்றினர்.



,காரில் வந்தவர்களை விசாரணை செய்ததில், அவர்கள்  1) ஞானராஜ் ஜெபசிங் (39) த/பெ. செல்லப்பாண்டியன், அன்னை தெரசா நகர், தூத்துக்குடி,  2) விஷ்ணுபெருமாள் (26) த/பெ. சக்திவேல், பிரையண்ட்நகர், தூத்துக்குடி,  3) பாண்டி (21), த/பெ. முனியசாமி, நேசமணி நகர், முள்ளக்காடு, 4) மாரிமுத்து (30), த/பெ. கணபதி, எம்.ஜி.ஆர் நகர் பாலம், தூத்துக்குடி, 5) செந்தில்முருகன் (35), த/பெ. வேலு, முத்துவிநாயகர் கோவில் தெரு, முறப்பநாடு, 6) ராஜ்குமார் (26), த/பெ. துரைகிருஷ்ணன், மிலிட்டரி லைன் தெரு, பாளையங்கோட்டை, 7) மனோகரன் (36) த/பெ. சேகர், பிள்ளையார் கோவில்தெரு, மட்டக்கடை, தூத்துக்குடி  ஆகிய 7 பேர் என்பதும், இவர்கள் மேற்படி சம்பவ இடத்தில் லாரி ஓட்டுநரை தாக்கி  அவரை காரில் ஏற்றியும், எதிரிகளில் விஷ்ணுபெருமாள் மற்றும் பாண்டி ஆகிய இருவரும் லாரியை ஒட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 


இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் உடனடியாக எதிரிகளை கைது செய்து,  ரூபாய். 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த ரூபாய் 10,00,000/- மதிப்பிலான கடத்தப்பட்ட லாரியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.



மேற்படி கடத்தப்பட்ட லாரியை துரிதமாக செயல்பட்டு சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் லாரியை பின்தொடர்ந்து விரட்டி சென்று கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள்அதிமுக அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஞான்ராஜ் ஜெயசிங் என்ன காரணத்திற்காக கடத்தலில் ஈடுபட்டார் என்ற மர்மம் இன்னும் தெரியவர வில்லை என்கிறார் கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக