ஞாயிறு, 28 நவம்பர், 2021

கொலை மிரட்டல் விடுத்த ரேஷன் கடை ஊழியர் உட்பட மூவர் கைது!!! தூத்துக்குடி போலீசார் அதிரடி!!!

 தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி பெண்ணிடம் தகராறு முன் விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர்களை தூத்துக்குடி போலீசார் இன்று (28-11-2021)கைது பண்ணி உள்ளனர்



ரேஷன் கடை ஊழியர் கைது

கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்த்தீஸ்வரர்புரம்  பகுதியில் உள்ள ரேஷன் கடையில்  கணேசன் (40) த/பெ. தங்கவேல் மூர்த்தீஸ்வரர்புரம் கயத்தார் என்பவர் தற்காலிகமாக எடைபோடும் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இந்த கடையில் கடந்த 26.11.2021 அன்று மாடத்தி (45) க/பெ. சண்முகையா மூர்த்தீஸ்வரர்புரம் என்பவர் ரேஷன் அரிசி வாங்க  சென்றுள்ளார். 


அப்போது ரேஷன் அரிசியை எடைபோடும் கணேசனை, மேற்படி மாடத்தி என்பவர் சரியாக எடை போடும்படி கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கணேசன் மாடத்தியிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இதுகுறித்து மாடத்தி அளித்த புகாரின் பேரில் கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தார்.



கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது!!!

தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்  மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன்  தலைமையில் உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் மற்றும் போலீசார் நேற்று (27.11.2021) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த முருகேசன் (36) த/ பெ கருப்பசாமி NGO காலனி, கணேஷ் நகர், தூத்துக்குடி என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார்  முருகேசனை கைது செய்தனர்.


இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



முன்விரோதம் காரணமாக தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!!!


நாரைக்கிணறு பகுதியில்...

ஜெ யபிரகாஷ்-38, த/பெ. அய்யாதுரை, கேடிசி நகர், வடக்கு பாளையங்கோட்டை என்பவருக்கும் அவரது உறவினரான பிரவீன் ராஜ் -20, த/பெ. இன்பராஜ், நடு தெரு, கீழகோட்டை என்பவருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.


இந்த முன்விரோதம் காரணமாக பிரவீன் ராஜ் நேற்று (27.11.2021) கீழக்கோட்டை மயானம் பகுதியில் வைத்து ஜெயபிரகாஷிடம் தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இதுகுறித்து ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் நாரைக்கிணறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெள்ளத்துரை வழக்குப்பதிவு செய்து பிரவீன்ராஜை கைது செய்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக