வெள்ளி, 26 நவம்பர், 2021

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை !!! நேற்றிரவு தண்ணீர் தேங்கியுள்ள தெருக்களில் கனிமொழி எம்.பி.ஆய்வு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதியுற்று உள்ளார்கள்.







இந்நிலையில் ‌ மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி 

இப் பகுதிகளுக்கு நேரடியாக  ஆய்வு மேற்கொண்ட நிலையில், நேற்றிரவு (26/11/2021) இரவு நேரத்திலும் தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதிக்கு திடீர் விசிட்டாக சென்று, ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

 மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடியில் உள்ள செட்டியார் மஹால்,   நிலா மஹால், தங்கம்மாள் பள்ளி மற்றும் டூவிபுரம் மாநகராட்சி மஹாலில் தங்க வைக்கப்பட்டுள்ள 




பொது மக்களுக்கு பாய், பெட்சீட் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கனிமொழி எம்பி வழங்கினார்.

பார்வையிடும் போது... பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறி விரைந்து நடவடிக்கை எடுத்து தருமாறு கேட்டுக் கொண்டார்கள்.







தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளளர் ஜெயக்குமார் மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக