வியாழன், 25 நவம்பர், 2021

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இந்திய அரசியல் சாசன நாள் முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவலர்கள் உறுதி மொழி எடுத்தனர்!!!


இந்திய அரசியல்  சாசன நாளாக நவம்பர்26 இன்று கொண்டாடப்படுகிறது. 




நமது அரசியல் சாசனத்தின் நல்ல மதிப்பீடுகளை காப்பதும் வளர்ப்பதும்  நம் கடமை.



இன்று (26.11.2021) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.


இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும் சமநலச் சமுதாயமும் சமயசார்பிரச்சினையின்மையும் மக்களாட்சி முறையும் அமைநத்தொரு குடியரசு நிறுவவும்,

 

அதன் குடிமக்கள் அனைவரும், சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், தென் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை. சமுதாயப்படி நிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும்,


அவர்கள் அனைவரிடையேயும், தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய்,....


 நம்முடைய அரசமைப்புப் பேரைவியல், 1949 நவம்பர் 26ம் நாளாகிய இன்று ஈங்கிதனால் இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.




வீடியோ பார்க்க

இந்த உறுதி மொழியில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் . பேச்சிமுத்து, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி, காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர்கள் ரமேஷ்பாபு, மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அலுவலர்கள் சுப்பையா, அலுவலக கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன், பெருமாள்,  மாரியப்பன்,  மாரிமுத்து, ராபர்ட்,  மயில்குமார்,  சரஸ்வதி, . அந்தோணியம்மாள், அருணாச்சலம், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக