வியாழன், 5 மே, 2022

ரேசன் அரிசி கடத்தி விற்பதில் கோஷ்டி தகராறு ஒருவர் கொலை 5 பேர் கைது தூத்துக்குடி மாவட்டத்தில் ரேசன் கடை முன் நிற்கும் சமூக விரோதிகளை களையெடுப்பார்களா?

திருட்டுதனமாக ரேசன் அரிசி கடத்தி விற்கும் கும்பலில் கோஷ்டி தகராறு  ஏற்பட்டது இதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை 5 பேர்  கைது செய்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு 



தமிழக அரசு மக்களுக்கு இலவசமாக பொதுமக்களுக்கு அரசி ரேசன் கடைகளில் வழங்கி வருகிறது. கடைகள் முன்பு சமூக விரோத கும்பல் இருந்து வருவதும் இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒழுங்கான நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தமிழக முழுவதும் ரேசன் அரிசி கடத்தப்பட்டு காவல்துறையினரிடம் அகப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ரேஷன் அரிசி களை திருட்டுதனமாக  கடத்தி கடைகளில்  வாங்கி விற்பது சில கும்பல்கள் ஈடுபட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செக்கடி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் துரைபாண்டி (35) 

கோவில்பட்டியை சேர்ந்த மாணிக்கராஜா  கயத்தாறு காப்புலிங்கம்பட்டியை சேர்ந்தவர்களான வெயில்காளை மகன் மகராஜன் (40), ராமகிருஷ்ணன் மகன் ராஜாராம் (40) என்பவர்களுக்கும் இடையே ரேஷன் அரிசி வாங்கி விற்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

 

இந்த முன்விரோதம் காரணமாக துரைபாண்டி கடந்த 03.05.2022 அன்று கயத்தாறு தளவாய்புரம் பகுதிக்கு சென்ற போது அங்கு வந்த மகாராஜன், ராஜாராம் மற்றும் அவரது நண்பர்களான காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் மனோரஞ்சின்குமார் (எ) மனோஜ் (23), சவலாப்பேரியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் ஜானகிராமன் (30) மற்றும் கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் சின்னதுரை (35) ஆகியோர் சேர்ந்து துரைபாண்டியை கம்பால் தாக்கியுள்ளனர். 

இச்சம்பவத்தால் துரைபாண்டி (35) கடந்த 03.05.2022 அன்று  கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04.05.2022) அதிகாலை உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவலறிந்த கயத்தாறு காவல் நிலைய போலீசார் துரைபாண்டி என்பவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர்  மேற்பார்வையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி கொலையுண்ட துரைப்பாண்டி என்பவர் கோவில்பட்டியை சேர்ந்த மாணிக்கராஜா என்பவருக்கு விற்பனைக்காக ரேஷன் அரிசியை வாங்கி கொடுத்து வந்துள்ளார். 

இதனால் படுகாயமடைந்த துரைப்பாண்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தது தெரியவந்தது.


உடனடியாக போலீசார் மேற்படி எதிரிகள் மகாராஜன், ராஜாராம், மனோரஞ்சின்குமார் (எ) மனோஜ், ஜானகிராம், மற்றும் சின்னத்துரை ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக